Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
கும்பம் செல்லும் சனி உருவாக்கும் சசயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜொலிக்கப் போகுது...
சனி பகவானால் உருவாகக்கூடிய சச யோகம் என்பது செல்வம் தரும் யோகமாகும். இப்போது கும்பத்தில் சனி உருவாக்கும் சச ராஜயோகத்தால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜொலிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
நவகிரகங்களின் சனியின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் கிரகங்களிலேயே சனி ஒரு ராசியில் நீண்ட நாட்கள் பயணிப்பதால், அதன் தாக்கம் மனித வாழ்வில் அதிகம் இருக்கும். அந்த வகையில் சனி பகவான் அக்டோபர் 23 ஆம் தேதி மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து, நேர்பாதையில் பயணிக்கத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அதாவது ஜனவரி 17 ஆம் தேதி சனி தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு செல்கிறார். இதனால் சச ராஜயோகம் உருவாகவுள்ளது.

சனி பகவானால் உருவாகக்கூடிய சச யோகம் என்பது செல்வம் தரும் யோகமாகும். இந்த ராஜயோகம் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உருவாகிறது. இப்போது 2023-ல் கும்ப ராசியில் சனி உருவாக்கும் சச ராஜயோகத்தால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜொலிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சச ராஜயோகம் உருவாகிறது. இதனால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். சொத்து அல்லது வாகனம் வாங்கும் யோசனை இருந்தால், இக்காலத்தில் அது நிறைவேறும். சொத்துக்களில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இது நல்ல காலம். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிய தொழில் தொடங்க சிறந்த காலம் இது.

கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி சச ராஜயோகத்தை உருவாக்குகிறார். எனவே இந்த காலத்தில் கன்னி ராசிக்காரர்களின் தைரியம் அதிகரிக்கும். உங்களின் எதிரிகளை இக்காலத்தில் எளிதில் வெற்றி பெறுவீர்கள். அதே சமயம் பழைய நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். நீதிமன்ற விஷயங்களில் வெற்றி கிடைக்கும். நிலுவையில் உள்ள உங்களின் வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். மொத்தத்தில் இக்காலத்தில் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.

கும்பம்
2023-ல் கும்ப ராசியின் முதல் வீட்டிற்கு செல்லும் சனியால் உருவாகும் சச ராஜயோகம், கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். இதுவரை அவதிப்பட்டு வந்த நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். கூட்டுத் தொழில் தொடங்க சிறந்த காலம். பணியிடத்தில் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவீர்கள். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும். மூதாதையர் சொத்துக்களால் நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications