Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
145 நாட்கள் மகரத்தில் இருக்கும் சனியால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகுது...
மகர ராசியை அடைந்த வக்ர சனி மகரத்தில் 145 நாட்கள், அதாவது அக்டோபர் வரை இருப்பார். இந்த சனி இயக்கத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். குறிப்பாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவைத் திறக்கும்.

நவகிரகங்களிலேயே சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக சனியின் ராசி மாற்றம் மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஜோதிடம் கூறுகிறது. சனி பகவான் ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப பலன்களைக் கொடுப்பவராக கருதப்படுகிறார். அதாவது, நல்ல செயல்களை செய்பவர்களுக்கு நற்பலன்களையும், தீய செயல்களை செய்பவர்களுக்கு அசுப பலன்களையும் கொடுப்பவர் சனி பகவான்.

சனிப்பெயர்ச்சி 2022
சனி பகவான் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மகர ராசியில் பயணித்து வந்தார். ஆனால் 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு சென்றார். அதன் பின் ஜூன் 05 ஆம் தேதி மகர ராசியை நோக்கி வக்ர நிலையில் பயணிக்க தொடங்கினார். பின்னர் ஜூலை 12 ஆம் தேதி வக்ர சனி மகர ராசியை அடைந்தார். மகர ராசியை அடைந்த வக்ர சனி மகரத்தில் 145 நாட்கள், அதாவது அக்டோபர் வரை இருப்பார். இந்த சனி இயக்கத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். குறிப்பாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவைத் திறக்கும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
ஜோதிடத்தின் படி, மகரத்தில் இருக்கும் வக்ர சனியால் மேஷ ராசிக்காரர்களுக்கு சூப்பராக இருக்கும். மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் சனி உள்ளார். இது தொழில் மற்றும் வேலையின் வீடு. எனவே இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் கௌரவம் கூடும். புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் மற்றும் நல்ல பாராட்டைப் பெறுவீர்கள்.

மீனம்
மகரத்தில் சனியின் வருகையால் மீன ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்குகிறது. ஏனெனில் மீன ராசியின் 11 ஆவது வீட்டில் சனி உள்ளார். இது வருமானம் மற்றும் லாபத்தின் வீடாகும். எனவே இக்காலத்தில் மீன ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். மேலும் புதிய வருமான ஆதாரங்களில் பணம் அதிகம் சம்பாதிப்பீர்கள். இக்காலத்தில் புதிய வணிக உறவுகள் உருவாக வாய்ப்புள்ளது. வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். இதனால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் நன்றாக இருக்கும். மறுபுறம் பணிபுரிபவர்கள் வேலையில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள். இக்காலத்தில் வாகனம், சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள் மற்றும் அதற்கான வாய்ப்புக்களும் உருவாகும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். ஏனெனில் தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் சனி உள்ளார். இந்த வீடு பணம் மற்றும் பேச்சின் வீடாக கருதப்படுகிறது. ஆகவே இக்காலத்தில் பங்குச் சந்தை மற்றும் ஊக லாட்டரிகளில் நல்ல லாபம் கிடைக்கும். மேலும் சிக்கிய பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மார்கெட்டிங் செய்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாகவும், சாதகமாகவும் இருக்கும். வாகனம் மற்றும் நிலம் வாங்குவதற்கு சாதகமான காலம். இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்கியுள்ளதால், ஆரோக்கியம் சற்று மோசமடைய வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தை ஈர்ப்பதற்கு, தனுசு ராசிக்காரர்கள் புஷ்பராக ரத்தின கல்லை அணியலாம்.



Click it and Unblock the Notifications