உங்க ராசிப்படி காதலில் நீங்க செய்யப்போகும் மோசமான தவறு என்ன தெரியுமா? தெரியாமகூட இத பண்ணாதீங்க!

நாம் எதைச் செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் நமக்குள் இருக்கும், ஆனால் யதார்த்தம் யதார்த்தம் எப்போதும் நம் எண்ணங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

நாம் எதைச் செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் நமக்குள் இருக்கும், ஆனால் யதார்த்தம் யதார்த்தம் எப்போதும் நம் எண்ணங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. நம்மைப் பற்றி நாம் என்ன நினைத்தாலும் நம்மில் யாரும் 100% சரியானவர்கள் அல்ல நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். உறவுகளில் நாம் அடிக்கடி தவறுகளைச் செய்கிறோம், இது பொதுவாக நமக்கு பல மோசமான பாடங்களைக் கற்பிக்கிறது. இந்த அனுபவங்களின் காரணமாக எதிர்காலத்தில் அந்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருப்பதை உறுதிசெய்கிறோம்.

Relationship Mistakes to Avoid as per Your Zodiac Sign

ஜோதிட சாஸ்திரத்தின்படி, உறவில் இருக்கும் ஒவ்வொரு தம்பதியினரும் தவறு செய்கிறார்கள், இது வெளிப்படையானது மற்றும் உலகளாவிய உண்மை. சிலர் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொண்டாலும், மற்றவர்கள் தொடர்ந்து தவறுகளைச் செய்து இறுதியில் தங்கள் உறவையே பாழாக்கிக் கொள்கிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு ராசியினரும் உறவுகளில் ஒவ்வொரு விதத்தில் சொதப்புவார்கள். உங்கள் ராசியின் படி, காதலில் நீங்கள் செய்யும் தவறுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் தங்கள் காதலர்களை மிகவும் அலட்சியப்படுத்துவார்கள் மற்றும் அவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவார்கள். அவர்களின் சுயாதீன இயல்பு பெரும்பாலும் உறவில் ஒரு குழப்பமான சூழ்நிலையை உருவாக்குகிறது, அது பெரும்பாலும் பிரச்சினைகளில் முடிவடைகிறது. எனவே, உங்கள் துணையைப் புரிந்துகொண்டு, அவர்கள் நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் உணரும் விதத்தில் அவர்களை பார்த்துக் கொள்ளுங்கள்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் பெரும்பாலும் மிகவும் வெளிப்படையானவர்கள் மற்றும் மக்களின் கோபத்தை அவர்களால் எப்போதும் கையாள முடியாது. அதனால்தான் காதல் மற்றும் உறவுகளில் பல்வேறு வித்தியாசமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், அவர்கள் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பராமரிக்க பெரும்பாலும் தங்கள் உணர்வுகளை தங்களுக்குள் மறைத்துக்கொள்வார்கள். இருப்பினும், அவர்கள் அத்தகைய உணர்வுகளை கண்டிப்பாக வெளிப்படுத்த வேண்டும், இல்லையெனில் அவர்களின் உணர்வுகள் ஒருநாள் வெடித்துச் சிதறலாம், அது அவர்களின் உறவை முற்றிலுமாக சிதைக்கும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் உறவுகளில் எப்போதும் கோழையாக இருப்பார்கள். அவர்கள் சூழ்நிலைகளை எதிர்கொள்வதை விட விலகி ஓட நினைக்கிறார்கள். காதல், உறவு என்று வரும்போதும் அவர்கள் அப்படித்தான் நடந்து கொள்வார்கள். உறவுகளில் சிறிய பிரச்சினைகள் வந்தால் கூட மிதுன ராசிகாரர்கள் தங்கள் உறவை எளிதில் விட்டுவிடுகிறார்கள், இது சரியான வழி அல்ல. மாறாக, பிரச்சினைகளை சரி செய்ய வரை அவர்கள் வெவ்வேறு வழிகளை ஆராய வேண்டும்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்கள் செய்யும் பொதுவான தவறுகளில் ஒன்று, ஒரு உறவில், அவர்கள் உண்மையில் யார் என்பதை மறந்துவிட்டு, தங்கள் துணைக்காக வேறு ஒருவராக மாற முயற்சிக்கிறார்கள். நீங்கள் மற்றும் உங்கள் துணை இருவரும் உரையாட வேண்டிய உறவில் உங்கள் தனித்துவத்தை வைத்திருப்பது மிகவும் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சிம்மம்

சிம்மம்

சூழ்நிலைகள் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்கும் வரை சிம்ம ராசிக்காரர்களுக்கு காதலில் எல்லாம் சிறப்பானதுதான். வாழ்க்கை அல்லது உறவு கடினமாகிவிட்டால், சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் கூட்டாளிகள் மீது தேவையில்லாமல் அனைத்து உமிழும் உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறார்கள், இது நல்ல காதல் வாழ்க்கைக்கு அழகல்ல. எனவே உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்.

கன்னி

கன்னி

காதலைப் பொறுத்தவரை, கன்னி ராசிக்காரர்கள் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்துபவராக இருக்கிறார்கள், மேலும் தங்கள் விருப்பத்தின்படியே எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறார்கள். அவர்கள் சில சமயங்களில் தங்கள் விருப்பதிற்கு ஏற்ப தங்கள் கூட்டாளர்களை மாற்ற முயற்சி செய்கிறார்கள். உங்கள் துணையை ஆதிக்கம் செலுத்தாமல் அவரது தனிப்பட்ட இயல்பைத் தழுவ முயற்சி செய்வது நல்லது.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் அமைதியான மற்றும் இணக்கமான இயல்பு கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள். இருப்பினும், அவர்கள் தங்களுக்குள் நிறைய எதிர்மறை எண்ணங்களை, குறிப்பாக காதல் மற்றும் உறவில் புகுத்தாத வரை மட்டுமே இது நீடிக்கும். இது துலாம் ராசிக்காரர்களை தங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்களில் ஆக்ரோஷமாக மாற்றுகிறது. நீண்ட மற்றும் ஆரோக்கியமான உறவை பராமரிக்க இது தவிர்க்கப்பட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் பெரும்பாலும் கடினமானவர்களாகவும் தீவிரமானவர்களாகவும் இருப்பார்கள், குறிப்பாக உறவுகள் மற்றும் காதல் விஷயத்தில். அவர்கள் பொதுவாக ஒரு உறவின் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியாக இருக்கும் வரை அனுபவிக்கிறார்கள். ஆனால் விஷயங்கள் கடுமையான திருப்பத்தை எடுக்கும்போது, ​​அவர்கள் இணைந்து சிக்கலைத் தீர்ப்பதற்குப் பதிலாக தேவையற்ற நாடகத்தை உருவாக்குகிறார்கள். உறவில் மகிழ்ச்சியை உறுதி செய்வது இருவரின் கடமை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் உறவில் ஏதேனும் மோசமான நிகழ்வுகள் நடந்தால், அவர்கள் அதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள் மற்றும் தங்கள் கூட்டாளர்களுடன் கூட அதைப் பற்றி விவாதிக்க விரும்புவதில்லை. மாறாக, அவர்கள் உணர்வுகளை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள், இது ஒரு சரியான நடவடிக்கை அல்ல. அவர்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் உணர்வுகளுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் மற்றும் அவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அவர்களின் கூட்டாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்கள் சக்தி வாய்ந்த ஜோடியின் ஒரு அங்கமாக இருக்கிறார்கள். உறவில் தங்களைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் அவர்கள் பாராட்டுகிறார்கள். இருப்பினும், உங்கள் அதிகப்படியான சிந்தனையானது உங்களுக்கும் உங்கள் துணைக்கும் மனநிலை பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. மகர ராசிக்காரர்கள் நிகழ்காலத்தில் வாழ வேண்டும், அதிகம் சிந்திக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து உறவுகளும் மனவேதனையைத் தருவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 கும்பம்

கும்பம்

நிலைமை என்னவாக இருந்தாலும், கும்ப ராசிக்காரர்களால் தோல்வியைக் கையாள முடியாது, அவர்கள் எப்போதும் வெற்றியுடன் இருக்க விரும்புகிறார்கள். ஆனால் இந்த பிடிவாதம் அவர்களுக்கு காதலில் பொருந்தாது என்பதை உணர்வதில்லை. அவர்கள் தங்கள் மீதே தவறு இருந்தாலும் தங்கள் கூட்டாளிகளுடான வாக்குவாதங்களில் வெற்றி பெறுவதற்கான வழிகளை தேடுகிறார்கள். நிச்சயமாக, இது தவிர்க்கப்பட வேண்டும், எந்த உறவும் இந்த முறையில் சரியாக செயல்பட முடியாது.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் பெரும்பாலும் எல்லைகள் மற்றும் வரம்புகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்கள் தங்கள் உறவைப் பாதுகாக்க எதையும் செய்யக்கூடியவர்கள். அதனால்தான் பெரும்பாலான மீன ராசிக்காரர்கள் உறவை சீராக வைத்திருக்க தங்கள் வாழ்க்கையின் சில பகுதிகளை தியாகம் செய்கிறார்கள். உங்கள் உண்மையான சுயத்தையும், எண்ணங்களையும் தியாகம் செய்வதற்குப் பதிலாக, உங்கள் எண்ணங்களை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion