Latest Updates
-
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க..
2023 ஆம் ஆண்டின் மகள்கள் தினம் எப்போது? இது எப்போது இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது?
National Daughters Day 2023: மகள்கள் தினம் என்பது சர்வதேச அளவில் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள மகள்களைப் போற்றும் விதத்தில் கொண்டாடப்படும் ஒரு நாளாகும். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் மகள்கள் தினம் செப்டம்பர் மாதத்தில் வரும் நான்காவது ஞாயிற்றுக் கிழமையில் கொண்டாடப்படும். இந்த ஆண்டு, மகள்கள் தினம், செப்டம்பர் 24 ஆம் தேதி, அதாவது இன்று கொண்டாடப்படுகிறது.

தந்தையர் தினம், அன்னையர் தினம் போன்றவை அன்னை மற்றும் தந்தையின் அன்பை போற்றும் நாளாக இருப்பது போல், மகள் என்ற புனித உறவின் அன்பை வெளிப்படுத்தும் ஒரு நாளாக குடும்பத்தினருடன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

மகள்கள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?
குழந்தை என்பது ஒரு வரம். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அதில் வேறுபாடில்லை. தினசரி குழந்தைகளை போற்றுவது தவறில்லை என்ற போதிலும் குறிப்பிட்ட ஒரு நாளில் அவர்களை கௌரவப்படுத்த இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பெற்றோரின் அன்பை கௌரவிக்க தந்தையர் தினம் மற்றும் அன்னையர் தினம் போன்ற நாட்கள் கொண்டாடுவதும் இந்நாட்களில் பிரபலமாக இருந்து வருகிறது.

மகள்கள் தினத்தின் வரலாறு:
பெண் குழந்தை என்பது ஒரு குடும்பத்திற்கு கிடைத்த ஒரு ஆசிர்வாதம். அந்த ஆசிர்வாதத்தைக் குறித்து நினைத்துப் பார்க்க ஒரு தனிப்பட்ட காரணம் அல்லது குறிப்பிட்ட நாள் தேவையில்லை . இருப்பினும் இன்றளவும் ஒருதலை பட்சமாக இருக்கும் சில சமூக அமைப்பில் ஆண் குழந்தையைக் காட்டிலும் பெண் குழந்தைகள் தாழ்வாகவே கருதப்படுகின்றனர். அதனால் சில நாட்டின் அரசாங்கங்கள் ஆண் - பெண் சமநிலையை ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுவதும் அங்கீகரிக்கும் ஒரு விழாவாக ‘மகள்கள் தினம்' கொண்டாடப்பட வேண்டும் என்று முடிவெடுத்து இந்த நாளை கொண்டாடத் தொடங்கினர். அரசு மற்றும் சட்டம் ஆகியோருக்கு முன் எந்த குழந்தையும் சமம். இந்த நோக்கத்தை மக்களிடையே ஊக்குவிக்கும் நடவடிக்கையாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

மகள்கள் தினத்தின் சிறப்பம்சம்:
காலம் எவ்வாறு மாற்றத்திற்கு உள்ளாகிறது என்பதை இந்த விழாவின் வெற்றி நமக்கு நன்கு வெளிப்படுத்துகிறது. மக்கள் மகள்கள் தினத்தை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். மகள்கள் தினம் என்பது ஒவ்வொரு குடும்பத்தினர் மகள்களுக்காக கொண்டாடும் ஒரு குடும்ப விழாவாக மாறி வருகிறது. மேலும் இந்த நாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதால் அன்று விடுமுறை தினம் என்பது கூடுதல் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. நாள் முழுவதும் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக மகள்கள் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

மகள்கள் தினத்தை எவ்வாறு கொண்டாடலாம்?
மகள்கள் தினத்தை குடும்பத்தோடு சேர்ந்து கொண்டாட பல வழிகள் உள்ளன. வாழ்த்து அட்டைகள், கடிதம், குறுஞ்செய்தி போன்றவற்றின் மூலம் பெற்றோர் தங்கள் மனதில் மகள்களுக்கான இடம் குறித்து தங்கள் அன்பை வெளிப்டுத்துகின்றனர். இதனுடன் மகள்களுக்கான பரிசுகளையும் சேர்த்து கொடுக்கின்றனர். வேறு வித கொண்டாட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாறுபடுகிறது. ஒவ்வொரு குடும்பத்தில் பெற்றோர்-மகள் உறவை பொறுத்து இந்த விழாவின் கோலாகலம் அமைகிறது. பலர் இதனை ஒரு பெரிய குடும்ப விழாவாக கொண்டாடலாம், ஒரு சிலர் இதனை மிக எளிய முறையில் பெற்றோர் - மகள் மட்டும் இணைந்து கொண்டாடலாம். மகள்களை வெளியில் கூட்டிச் சென்று அந்த நாளை கழிப்பதும் ஒரு சிலரின் பழக்கமாக இருக்கலாம். பிரிந்து வாழும் பெற்றோர் என்றால் தனிப்பட்ட முறையில் தாய் மற்றும் தந்தை தனித்தனியாக மகளுடன் இந்த நாளை கொண்டாடலாம். ஒரு குடும்பத்தின் மகள் இந்த விழாவை எப்படி கொண்டாட வேண்டும் என்று ஆசைப்படுகிறாரோ அதன்படி இந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழலாம்.

2023 மகள்கள் தினத்திற்கான சிறந்த வாசகங்கள் மற்றும் வாழ்த்துக்கள்:
1. நமது இதயத்தை முடிவில்லாத அன்பால் நிரப்ப வானத்தில் இருந்து வந்த தேவதை - மகள்
2. தந்தையின் வயது அதிகமாகும் போது அவருக்கு மிகவும் பிடித்தமானவர் மகளைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.
3. ஒரு மகள் என்பவர் கடந்த காலத்தின் ஒரு மகிழ்ச்சியான ஞாபகம், நிகழ்காலத்தின் ஒரு மகிழ்ச்சியான தருணம், வருங்காலத்தில் நிஜம் மற்றும் நம்பிக்கை.
4. மகள் என்பவர் கௌரவப்படுத்த வேண்டியவர். நீங்கள் உங்கள் மகளை கௌரவப்படுத்துங்கள்.
5. மகள் என்பவர் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஒட்டுமொத்தமாக கொடுக்கும் நபர். ஆழ் மனதின் சந்தோஷத்தை அனைவருக்கும் பரப்பும் மகள் உண்மையில் அற்புதமான, விலைமதிப்பற்றவள். உங்கள் மகளுக்கான உங்கள் அன்பிற்கு எல்லைகள் இல்லை.



Click it and Unblock the Notifications