Just In
- 39 min ago
இந்தியாவில் போடப்படும் கோவிட்-19 தடுப்பூசி பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!
- 6 hrs ago
இன்றைய ராசிப்பலன் (16.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- 17 hrs ago
கோதுமை ரவை பாயாசம்
- 18 hrs ago
இந்த ஆரோக்கியமான பழக்கங்கள் உடலினுள் அழற்சியை ஏற்படுத்தும் தெரியுமா?
Don't Miss
- Sports
அவ்ளோ ஈஸியா விட்டுற மாட்டோம்.. ஆஸி.வை சுருட்டிய 2 தமிழக வீரர்கள்!
- News
முதல் டோஸ் போட்டதும் சமூக விலகலை பராமரிக்காமல் இருந்துவிடாதீர்- பிரதமர் மோடி எச்சரிக்கை
- Movies
சுச்சி தெரிஞ்சுதான் பண்றாங்களா? அதை எதுக்கு சொல்லணும்.. சுச்சி பேச்சால் கடுப்பான நெட்டிசன்ஸ்!
- Automobiles
மாருதி அரேனா கார்களுக்கு ஆன்லைன் மூலமாக எளிதாக கடன் பெறும் திட்டம்!
- Education
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்க ராசிப்படி நீங்கள் காதலிக்கக்கூடாத ராசி எது தெரியுமா? இந்த ராசிகாரங்க ஜோடியானால் வாழ்க்கையே காலி
காதலிப்பது மற்றும் காதலிக்கப்படுவது என்பது ஒருவரது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது ஆகும். காதல் அளவிற்கு ஒருவரை மகிழ்ச்சிப்படுத்தும் விஷயமும் இல்லை, துன்பப்படுத்தும் விஷயமும் இல்லை. அனைவருமே தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது நச்சு உறவை அனுபவித்திருப்பார்கள். ஆனால் அந்த ஒரு நச்சு உறவு அவர்களுக்கு வாழ்க்கையில் பெரும் பாடத்தை கற்றுத்தரும். ஒருவர் சிறந்த துணையாக இருந்தாலும் அவர்களுடைய உறவின் வலிமையானது அவர்களின் துணையின் குணத்தையும் பொறுத்ததுதான்.
ஒருவரின் காதல் வாழ்க்கையை நிர்ணயிப்பதில் அவர்கள் பிறந்த ராசி என்பது முக்கியமான பங்கை வகிக்கிறது. தனித்தனியாக காதலில் சிறந்து இருப்பவர்கள் கூட தன் ராசிக்கு ஒத்துப்போகாதவர்களுடன் இணையும் போது அவர்களின் காதல் வாழ்க்கை துயரங்கள் நிறைந்ததாக இருக்கும். ஒரு உறவில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் மிகப்பெரிய காரணங்களில் ஒன்று ஆளுமைகளின் மோதலாகும். சில நேரங்களில் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் மோசமானதை வெளிப்படுத்துகிறார்கள், மேலும் எதையும் பற்றி சிந்திக்காமல் மோதலில் ஈடுபடுவது ஒரு நச்சு உறவு வளர சரியான சூழலை வழங்குகிறது. எந்தெந்த ராசிகள் ஒன்றாக இணையும்போது அவர்கள் ஒரு நச்சு உறவை உருவாக்குவார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம் மற்றும் கன்னி
இது மிகவும் நச்சு இராசி ஜோடிகளில் ஒன்றாகும். மேஷம் எப்போதுமே தடைகளை முறியடிக்க முற்படுகையில், கன்னி ராசிக்காரர்கள் சிரமங்களை சமாளிக்க திட்டமிடுகிறார்கள். இவர்கள் இருவரும் சிறந்த நண்பர்களாக இருக்கலாம் , ஒரே டீமில் வேலை செய்யலாம் ஆனால் காதல் உறவை பொறுத்தவரை இவர்கள் நச்சு ஜோடிகளாவர். இருவருமே தங்களின் செயல்கள்தான் சரியென்ற பிடிவாத குணமுடையவர்கள்.

கடகம் மற்றும் மகரம்
மகரம் என்பது தூய்மையான ஒழுக்கத்தைப் பற்றியது, கடக ராசியோஅருமையான அன்பு மற்றும் உணர்ச்சிகள் நிறைந்தது, இவர்கள் எப்பொழுதும் அன்பை கொடுக்க தயாராக உள்ளார்கள். வெவ்வேறு இரசனைகள் கொண்ட இவர்கள் இருவரும் தங்கள் நலன்கள் சார்ந்து வாக்குவாதத்தில் ஈடுபடும்போது இது பல முட்டாள்தனமான சச்சரவுகளை ஏற்படுத்தும். இறுதியில் இவர்களின் காதல் நச்சு உறவாக மாற்றும்.

கடகம் மற்றும் தனுசு
கடக ராசிக்காரர்கள் தாயுள்ளம் கொண்டவர்கள் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் எப்போதும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள். இந்த இருவரின் உறவும் ஆரம்பத்தில் மிகவும் சரியானது போல தோன்றலாம் ஆனால் இவர்களில் ஒன்று கற்பிக்கிறது, மற்றொன்று கற்றுக்கொள்கிறது. தனுசு ராசியின் அதீத சுதந்திர தேடல் கடக ராசிக்காரரிடம் இருந்து அவர்களை பிரிக்கும். கடக ராசிக்காரர் தங்களை கட்டுப்படுத்துவதை போல அவர்கள் உணர்வார்கள். இதனால் இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு காதலில் அழியா காயத்தை ஏற்படுத்தும்.
கொரோனா வைரஸ்க்கான சோதனைகள் எப்போது, எப்படி செய்யப்படுகிறது தெரியுமா?

சிம்மம் மற்றும் விருச்சிகம்
இந்த இரண்டு ராசிக்காரர்களின் முதல் ஈர்ப்பும் சிற்றின்பம்தான். இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் ஒரே ஒற்றுமை இதுதான். இவர்கள் இருவருக்குள்ளும் உடல்ரீதியான நெருக்கம் இருக்குமே தவிர அதற்க்குமேல் இந்த ஈர்ப்பும் இருக்காது. இதனால் இவர்களால் நீண்ட நாட்கள் அந்த உறவில் நிலையாக இருக்க முடியாது. இவர்களின் உறுதியற்ற காதல் இருவருக்கும் நன்மையை விட தீமையைத்தான் ஏற்படுத்தும்.

மிதுனம் மற்றும் கன்னி
இந்த ராசிக்காரர்கள் இருவரும் வேடிக்கையானவர்கள் மற்றும் எளிதில் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள கூடியவர்கள். இது ஒருவரையொருவர் எளிதில் ஈர்க்கும் ஆனால் இவர்களின் இந்த குணங்களே விரைவில் இவர்கள் உறவில் பிரச்சினையாக மாறும். கன்னி ராசிக்காரர்களின் சந்தேக குணம் மிதுன ராசிக்காரர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. சிலசமயம் மிதுன ராசிக்காரர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை வைப்பார்கள். இறுதியில் காதலில் கசப்பான உணர்வுடன் இருவரும் பிரிவார்கள்.

துலாம் மற்றும் ரிஷபம்
துலாம் மற்றும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இடையில் நிறைய குணங்கள் ஒத்துப்போகும், இருப்பினும் இவர்களின் உறவு மோசமானதாக மாறுவதற்கு காரணம் இவர்கள் இருவரும் தங்களின் விருப்பத்திற்கேற்ப இருக்க வேண்டும் என்று நினைப்பதுதான். இரண்டு ராசிகளும் உறுதியானவர்கள், அழகியல் மற்றும் காதல் இரண்டையுமே இவர்கள் ரசிப்பார்கள். இருப்பினும் ரிஷப ராசிக்காரர்களின் உள்ளார்ந்த விசுவாசம் உறவைக் கட்டுப்படுத்துவதாகத் தோன்றும், மேலும் துலாம் ராசிக்காரர்கள் தான் எப்போதும் சரியானவர் என்று நிரூபிக்க விரும்புவது இருவருக்குள்ளும் தொடர்ந்து சிக்கல்களை உண்டாக்கும். இறுதியில் அவர்களின் காதல் நச்சானதாக மாறும்.

விருச்சிகம் மற்றும் மீனம்
இவர்கள் இருவருமே உணர்ச்சிவசப்படக்கூடிய ராசிகளாவர். இருவருமே உணர்ச்சிகள் மிகுந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் அதனை வெளிப்படுத்தும் விதம் வித்தியாசமானதாக இருக்கும், குறிப்பாக காதலில். விருச்சிக ராசிக்காரர்கள் தங்களின் உணர்ச்சிகளை உடனடியாக வெளிப்படுத்துவார்கள், மீன ராசிக்காரர்கள் தங்களின் உணர்ச்சிகளை மிகவும் மெதுவாகவே வெளிப்படுத்துவார்கள். இருவருமே காதலில் உள்ளார்ந்த ஆர்வம் கொண்டவராக இருப்பார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் பொறுப்பற்றவராக இருப்பார்கள், மீன ராசிக்காரர்கள் அதீத பொறுப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். இதனாலேயே இவர்களின் உறவு நச்சு உறவாக மாறும்.
கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா வருமா? கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...!

கும்பம் மற்றும் ரிஷபம்
கும்பம் மற்றும் ரிஷப ராசிக்காரர்கள் இருவரும் முற்றிலும் வித்தியாசமான ரசனை கொண்டவர்கள். ரிஷப ராசிக்காரர்கள் கும்ப ராசிக்காரர்கள் எப்பொழுதும் எதுவும் செய்யாமல் தன்னுடனேயே இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் கும்ப ராசிக்காரர்கள் அவ்வாறு இருக்க மாட்டார்கள், இது அவர்கள் உறவில் விரக்தியை ஏற்படுத்தும். இறுதியில் ரிஷப ராசிக்காரர்களின் இதயம் இந்த உறவில் உடைவது நிச்சயம்.