Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
பிப்ரவரி மாதம் இந்த 5 ராசிக்காரங்க வெற்றிப்படிக்கட்டில் வேகமா ஏறப்போறாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஒவ்வொரு நாளும் நமக்கொரு புது அனுபவத்தைக் கொடுக்கும். அந்த அனுபவங்கள் நேர்மறையானதா அல்லது எதிர்மறையானதா என்பதை நிர்ணயிப்பதில் நமது ராசியும், கிரக நிலைகளும் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
ஒவ்வொரு நாளும் நமக்கொரு புது அனுபவத்தைக் கொடுக்கும். அந்த அனுபவங்கள் நேர்மறையானதா அல்லது எதிர்மறையானதா என்பதை நிர்ணயிப்பதில் நமது ராசியும், கிரக நிலைகளும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் வரப்போகிற பிப்ரவரி மாதம் பல மாற்றங்களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்தப்போகிறது. வரப்போகிற மாற்றங்கள் எப்படிப்பட்டவை என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது அதற்கேற்றாற் போல திட்டமிட நமக்கு உதவியாக இருக்கும்.

பிப்ரவரி மாதத்திற்கான கணிப்புகளின் படி சில ராசிக்காரர்கள் துரதிர்ஷ்டமான காலக்கட்டத்திற்குள் நுழையப் போகிறார்கள், அதேசமயம் சில ராசிக்காரர்கள் இந்த ஆண்டின் மிகவும் அதிர்ஷ்டகரமான காலக்கட்டத்திற்குள் நுழையப் போகிறார்கள். அந்த ராசிகள் மிகவும் அனுகூலமான பலன்களை இந்த மாதம் முழுவதும் பெறுவார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் அற்புதமான பலன்கள் கிடைக்கப்போகும் மாதமாக இருக்கப்போகிறது. மேஷ ராசிக்கான கணிப்புகளின் படி, அவர்கள் காதல், தொழில் மற்றும் ஆரோக்கிய அம்சங்களில் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். காதல் உறவுகளில் இருப்பவர்கள் மேலும் தீவிரமாக காதலிப்பார்கள். இந்த மாதம் மேஷ ராசிகாரர்களுக்கு ஆரோக்கியத்தின் அடிப்படையில் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும், ஏனெனில் அவர்கள் எந்தவொரு நோய் மற்றும் தொற்றுநோய்களிலிருந்தும் விலகி இருப்பார்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த மாதத்தில் பல ஆச்சரியங்களை சந்திக்கப் போகிறார்கள். மிதுன ராசி மாதக் கணிப்புகளின்படி, அவர்கள் இந்த மாதம் புதிய விஷயங்களை அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், அவர்கள் வேலை அல்லது தொழிலை மாற்றுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அந்த மாற்றங்கள் அவர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். மேலும், ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அவர்கள் இந்த மாதம் முழுமையான நல்வாழ்வை அனுபவிப்பார்கள், மேலும் வாழ்க்கையின் அனைத்து இன்பங்களையும் அனுபவிப்பார்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கன்னி ராசிக்கான மாத கணிப்புகளின் படி, அவர்கள் கல்வி மற்றும் உறவுகளில் அங்கீரகாரத்தைப் பெறுவார்கள். மேலும் அவர்களுக்கு பதவி உயர்வு அல்லது இன்கிரிமென்ட் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் அவர்கள் இந்த மாதம் நல்ல பலன்களை அனுபவிப்பார்கள். மேலும் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, எந்தவொரு நோய்களிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு தங்கள் ஆரோக்கியம் மற்றும் உணவுமுறையில் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அற்புதமான மாதமாக இருக்கப்போகிறது. துலாம் ராசியின் மாத கணிப்புகளின்படி, அவர்கள் தங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் அங்கீகாரத்தைப் பெறுவார்கள். மேலும், அவர்கள் அதிக வெற்றிகளைப் பெறுவதற்கும், மேலும் பலனளிக்கும் மற்றும் நன்மை பயக்கும் விளைவுகளைப் பெறுவதற்கும் தங்கள் கடின உழைப்பு மனப்பான்மையைத் தொடர வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், இந்த மாதம் அவர்களுக்கு ஆரோக்கிய விஷயங்கள் சிறப்பாக இருக்கும். இந்த மாதம் அவர்களது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஆசீர்வதிக்கப்பட்ட மாதமாக இருக்கும். இந்த மாத கணிப்புகளின் படி, மகர ராசிக்காரர்கள் இந்த மாதம் தொழில் மற்றும் வேலையில் லாபத்தையும், அதிர்ஷ்டத்தையும் பெறுவார்கள். அவர்கள் தொழில் மற்றும் வேலை மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன, இது அவர்களுக்கு மிகவும் சாதகமானதாக மாறும். மேலும், காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் காதல் வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும், இருப்பினும், இந்த மாத இறுதிக்குள் அது தீர்க்கப்படும். கூடுதலாக, இந்த மாதம் அவர்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.



Click it and Unblock the Notifications