Just In
- 9 min ago
உங்க மனைவிகிட்ட இந்த வித்தியாசங்கள் தெரிஞ்சா அவங்க உங்கள சந்தேகப்பட தொடங்கிட்டாங்கனு அர்த்தமாம்...!
- 59 min ago
கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளால் ஏற்படும் பக்கவிளைவுகள்!
- 6 hrs ago
இன்றைய ராசிப்பலன் (16.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- 18 hrs ago
கோதுமை ரவை பாயாசம்
Don't Miss
- Movies
'எனக்கு கொரோனா இல்லை, இல்லவே இல்லை, அதை நம்பாதீங்க..' பிரபல நடிகை திடீர் மறுப்பு!
- News
தடுப்பூசிகள் இரண்டுமே பாதுகாப்பானவைதான்.. வதந்திகளை நம்பாதீங்க... மோடி வேண்டுகோள்!
- Sports
அவ்ளோ ஈஸியா விட்டுற மாட்டோம்.. ஆஸி.வை சுருட்டிய 2 தமிழக வீரர்கள்!
- Automobiles
மாருதி அரேனா கார்களுக்கு ஆன்லைன் மூலமாக எளிதாக கடன் பெறும் திட்டம்!
- Education
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்க ராசிப்படி உங்களுக்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துற எழுத்து என்ன தெரியுமா? இந்த எழுத்து இருந்தா அவ்
ஒருவருக்கு பெயர் என்பது மிகவும் முக்கியமானதாகும், ஏனெனில் சமூகத்தில் ஒருவரின் அடையாளமாக இருப்பது அவருடைய பெயர்தான். ஒருவரின் பெயர் அவருக்கு சமூகத்தில் அடையாளத்தை மட்டுமின்றி அதிர்ஷ்டத்தையும் பெற்றுத்தரும். அதற்கு அவர்களுக்கு தகுந்தாற் போல பெயர் வைக்க வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் அவர்களின் பிறந்த ராசியின் படி அதற்கு ஏற்ற முதல் எழுத்தில் பெயர் வைப்பது அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை உண்டாக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்கு எந்த எழுத்து அதிர்ஷ்டத்தை வழங்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை M, Bha மற்றும் N ஆகிய எழுத்துக்கள் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அதேசமயம் P மற்றும் K ஆகிய எழுத்துக்கள் இவர்களுக்கு நல்ல பலனை வழங்காது. M இவர்களுக்கு உடனடி வெற்றி மற்றும் பணத்தை வழங்கும் எழுத்தாகும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு P, G மற்றும் Y ஆகிய எழுத்துக்கள் இவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். A, V மற்றும் R இவர்களுக்கு துரதிர்ஷ்டமான எழுத்துக்களாகும். G இவர்களுக்கு திருமண வாழ்க்கை மற்றும் தொழில் வெற்றிக்கு மிகவும் நல்லது.

மிதுனம்
R மற்றும் S மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான எழுத்துக்களாகும், அதேநேரத்தில் K மற்றும் C நல்ல பயனை அளிக்காது. உடனடியாக வாழ்க்கையில் வெற்றிபெற S எழுத்தைப் பயன்படுத்தலாம்.
இரவு நேரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் இருக்கும் ரகசியங்கள் என்ன தெரியுமா?

கடகம்
N, S, M மற்றும் D எழுத்துக்கள் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கும் எழுத்துக்களாகும். அதேபோல A மற்றும் P இவர்களுக்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் எழுத்துக்களாகும். வெற்றி மற்றும் பணத்திற்கு S மற்றும் D எழுத்துக்களை பயன்படுத்தலாம்.

சிம்மம்
B, Y மற்றும் A எழுத்துக்கள் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் H மற்றும் R எழுத்துக்கள் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். உங்கள் வாழ்க்கையில் வெற்றியைப் பெற நீங்கள் A எழுத்தை பயன்படுத்தவும்.

கன்னி
G, O, M மற்றும் R எழுத்துக்கள் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கும் எழுத்துக்களாகும் S மற்றும் D எழுத்துக்கள் மோசமான பலன்களை ஏற்படுத்தும். வாழ்க்கையில் வெற்றியைப் பெற நீங்கள் R எழுத்தைப் பயன்படுத்த வேண்டும்.
சாணக்கியரின் கூற்றுப்படி இந்த வகை பெண்ணை திருமணம் செய்வது உங்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றுமாம்...!

துலாம்
S, K மற்றும் G எழுத்துக்கள் துலாம் ராசிக்காரர்களுக்கு அவர்கள் எதிர்பார்ப்பதை விட நல்ல பயன்களை ஏற்படுத்தும். C, M மற்றும் N எழுத்துக்கள் துலாம் ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டான பலன்களை ஏற்படுத்தும். விரைவில் உயர்ந்த இடத்தைப் பெற S எழுத்தை பயன்படுத்தவும்.

விருச்சிகம்
A, N, மற்றும் D எழுத்துக்கள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான எழுத்துக்களாகும். அதே நேரத்தில்" P, R மற்றும் K "எழுத்துக்கள் நல்ல பலனைத் தராது. வெற்றியைப் பெறவும், உங்கள் வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளைத் தவிர்க்கவும் A எழுத்தைப் பயன்படுத்த வேண்டும்.

தனுசு
S, M, H மற்றும் A எழுத்துக்கள் தனுசு ராசிக்கு அற்புதமான பலன்களை அளிக்கும் எழுத்துக்களாகும், அதேசமயம் V மற்றும் K இவர்களுக்கு எதிர்மறையான பலன்களை ஏற்படுத்தும். இவர்கள் வாழ்க்கையில் அமைதியையும் முன்னேற்றத்தையும் பெற நீங்கள் S எழுத்தைப் பயன்படுத்த வேண்டும்.

மகரம்
V, L, J மற்றும் K எழுத்துக்கள் மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் எழுத்துக்களாகும். அதே நேரத்தில் D, H மற்றும் M எழுத்துக்கள் நல்ல பலன்களை தராது. உங்கள் வாழ்க்கையில் வெற்றியைப் பெற நீங்கள் V எழுத்தைப் பயன்படுத்த வேண்டும்.
கொரோனா வைரஸ் பற்றிய சில விசித்திரமான உண்மைகள்... கொரோனாவால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன தெரியுமா?

கும்பம்
K, S, A மற்றும் R எழுத்துக்கள் கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும் எழுத்துக்களாகும். H, P மற்றும் D எழுத்துக்கள் கும்ப ராசிக்காரர்களுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். உங்கள் வாழ்க்கையில் வெற்றிகளையும் முன்னேற்றத்தையும் பெற A எழுத்துக்களைப் பயன்படுத்த வேண்டும்.

மீனம்
H, N மற்றும் Y எழுத்துக்கள் இவர்களுக்கு அதிர்ஷ்டமான எழுத்துக்களாகும் , அதேசமயம் T, M மற்றும் R எழுத்துக்கள் துரதிர்ஷ்டமான எழுத்துக்களாகும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு N எழுத்தை பயன்படுத்த வேண்டும்.