Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 6 ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் காதலில் பெரிய திருப்புமுனை வரப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
நட்சத்திரங்களும் கிரகங்களும் நமது உணர்ச்சிகள் மற்றும் செயல்களில் வலுவான செல்வாக்கைக் கொண்டுள்ளன. மார்ச் மாதம் உங்களின் கிரக பலன்கள் உங்களுக்கு காதல் மற்றும் உறவுகளில் பல மாற்றங்களை உண்டாக்கப்போகிறது.
நட்சத்திரங்களும் கிரகங்களும் நமது உணர்ச்சிகள் மற்றும் செயல்களில் வலுவான செல்வாக்கைக் கொண்டுள்ளன. மார்ச் மாதம் உங்களின் கிரக பலன்கள் உங்களுக்கு காதல் மற்றும் உறவுகளில் பல மாற்றங்களை உண்டாக்கப்போகிறது.

நீங்கள் உங்களுக்கான காதலைக் கண்டுபிடிக்க விரும்பினாலும், உங்கள் தற்போதைய உறவை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல விரும்பினாலும் அல்லது தனிப்பட்ட வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்பினாலும், மார்ச் 2023க்கான உங்கள் காதல் கணிப்புகள் உங்கள் காதல் பயணத்தை நம்பிக்கையுடனும் தெளிவுடனும் வழிநடத்த உதவும். எனவே இந்த மாதம் உங்கள் ராசிப்படி உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கப்போகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
சிங்கிளாக இருப்பவர்கள் மாதத்தின் முதல் வாரத்தில் காதல் உறவுகளில் வெற்றி பெறுவார்கள். இந்த மாதம் உங்களுக்கு பழைய உறவுகளை புதுப்பிக்க வாய்ப்பு உள்ளது. கவனமாகவும் அதே சமயம் நிதானமாகவும் இருப்பது முக்கியம். அதன்மூலம் மட்டுமே நீங்கள் நேர்மறையான முடிவுகளை அடைவீர்கள். காதலில் இருப்பவர்கள் தங்கள் உறவை மேம்படுத்த விரும்புவார்கள். அதற்காக அவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நீங்கள் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால், உங்கள் துணையிடம் உணர்ச்சியையும் பச்சாதாபத்தையும் காட்ட வேண்டும்.

ரிஷபம்
இந்த மாதம் உங்கள் தொழில் வெற்றி பெரும்பாலும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை விட அதிக முன்னுரிமை பெறலாம். இது உறவுகளை எதிர்மறையாக பாதிக்கும். உங்கள் துணையை நிராகரிக்காதீர்கள், ஒன்றாக அதிக நேரம் செலவிடுங்கள். நிச்சயதார்த்தம் மற்றும் திருமணத்திற்கு சிறந்த நேரம். இந்த மாதம் நீங்கள் சுவாரஸ்யமான நபர்களைச் சந்திக்கலாம் மற்றும் புதிய நண்பர்களை உருவாக்கலாம். காதலில் இருப்பவர்கள் இந்த மாதம் தங்கள் துணைக்கு அதிக கவனம் கொடுக்க வேண்டியிருக்கும்.

மிதுனம்
இந்த மாதம் நீங்கள் இழந்த உறவுகளை மீட்டெடுக்க வாய்ப்புள்ளது. நீங்கள் சிங்கிளாக இருந்தால், நட்சத்திரங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியான சந்திப்புகளைஏற்படுத்தலாம், ஆனால் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். சரியான துணையை நீங்கள் காணலாம். ஆன்லைன் டேட்டிங்கில் ஆர்வம் காட்டாதீர்கள், ஏனென்றால் நிஜ வாழ்க்கையில் சந்திப்பது ஏமாற்றத்தை அளிக்கும்.

கடகம்
இணக்கமான உறவுகள் எப்போதும் ஆக்கபூர்வமான உரையாடல்கள் மூலம்தான் கட்டமைக்கப்படுகின்றன, எனவே வாக்குவாதங்களை தவிர்க்கவும். ஒவ்வொரு நபருக்கும் அவரவர் பார்வை மற்றும் கருத்து உள்ளது. மனக்கசப்பு இல்லாமல் பேசுவது உங்கள் இருவருக்கும் நன்மை பயக்கும், உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது முக்கியம். உங்கள் தனிமை நீண்ட காலம் நீடிக்காது. ஒரு நம்பிக்கைக்குரிய அறிமுகம் விரைவில் உங்களுக்கு காத்திருக்கிறது.

சிம்மம்
தொழில் முன்னேற்றத்திற்கு, உங்கள் தலைமைப் பண்புகளைப் பயன்படுத்துங்கள், ஏனெனில் காதல் உறவுகளில் கட்டளையிடும் குணம் பலனளிக்காது. உங்கள் கோரிக்கைகளை தொடர்ந்து வெளிப்படுத்துவதும் விமர்சிப்பதும் நல்லதல்ல. உங்கள் உறவை வலுப்படுத்த சின்ன சின்ன ஆச்சரியங்களுக்கு திட்டமிடுங்கள். உரையாடல் இல்லாமல், ஒரு நபரின் ஆன்மாவில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினம். எனவே வெளிப்படையாக பேசுங்கள்.

கன்னி
இந்த மாதம் உங்களின் ஆவேசமான முடிவுகளும், விரைவான தீர்ப்புகளும் நல்லதை விட தீமையையே தரும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏமாற்றத்தைத் தவிர்க்க, உங்கள் அன்புக்குரியவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். நீங்கள் அகங்காரவாதி என்று முத்திரை குத்தப்படாமல் இருக்க பொறுமையை கடைபிடிக்க வேண்டும். தியாகம் ஒரு வலுவான உறவின் அடிப்படை. எனவே உங்கள் அன்புக்குரியவரின் பிரச்சினைகளில் அதிக அக்கறை காட்டுங்கள்.

துலாம்
உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு நபரை நீங்கள் சந்திப்பது இந்த மாதம் சாத்தியமில்லை என்றாலும், மகிழ்ச்சியடைய வேறு சில காரணங்கள் கிடைக்கலாம். உறவுகளை வளர்ப்பதில் இருந்து உங்களைத் தடுப்பது என்ன என்பதைப் பற்றி நீங்கள் சிந்திக்கலாம். நீங்கள் ஒரு வலுவான மற்றும் தீவிரமான உறவைத் தேடுகிறீர்கள் என்றால் இந்த மாதம் உங்கள் முயற்சிகள் வீண்தான். திருமணமானவர்களின் வாழ்கை இந்த மாதம் பலப்படும்.

விருச்சிகம்
இந்த மாதம் உங்கள் உள்ளுணர்வுகளை கேட்டு நடப்பது நல்லது. விதி உங்களை வழிநடத்துகிறது என்று கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். இந்த மாதம் நீங்கள் புதிய நண்பர்களை உருவாக்குவீர்கள் மற்றும் உங்களுக்கு ஏற்ற துணையைக் காண்பீர்கள். ஆனால் உங்கள் காதல் வெற்றிகளைப் பற்றி தற்பெருமை காட்டாதீர்கள். எந்தவொரு உறவிலும், உங்கள் துணையை காயப்படுத்தாமல் இருக்க அன்பையும், இரக்கத்தையும் காட்டுவது முக்கியம். நீங்கள் பிடிவாதமாக இருந்தால் உங்கள் உறவு விரைவில் முறிந்து விடும்.

தனுசு
உண்மையான அன்பைத் தேடுவதில், நீங்கள் நம்பிக்கையை இழக்கக்கூடாது. நீங்கள் சுதந்திரத்தை மதிக்கிறீர்கள் மற்றும் யாருடனும் அதிகம் இணைந்திருக்க விரும்பவில்லை என்றாலும், உங்கள் முயற்சிகளை கைவிட்டு விடாதீர்கள். நீங்கள் உறவில் ஈடுபட விரும்பாத ஒருவருக்கு வேண்டாம் என்று சொல்ல பயப்பட வேண்டாம். எந்த காரணம் கொண்டும் உங்கள் முன்னாள் துணையை நோக்கி செல்லாதீர்கள்.

மகரம்
இந்த மாதம் விடாமுயற்சி மற்றும் பொறுப்புடன், உங்கள் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் வெற்றியை அடைவீர்கள். அர்ப்பணிப்புள்ள நபர் எப்போதும் இலக்கை அடைய முடியும். ஒரு துணையைத் தேர்ந்தெடுக்கும்போது, உங்கள் அன்புக்குரியவர்களிடம் ஆலோசனை கேட்பது புத்திசாலித்தனமாக இருக்கும். ஒரு அற்பமான நபருக்காக உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். இத்தகைய உறவுகள் உங்களுக்கு எந்த நன்மையையும் தராது.

கும்பம்
அதிர்ஷ்டத்தை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.அலுவலகத்தில் காதல் ஏற்பட வாய்ப்புளள்து என்றாலும், அது உங்கள் வேலை செய்யும் திறனை பாதிக்கக்கூடாது. தனிப்பட்ட சந்திப்புகளுக்கு உங்களுக்கு எப்போதும் போதுமான நேரம் இருக்காது, அரிதான சந்திப்புகள் நேர்மறையான உணர்ச்சிகளை மட்டுமே கொண்டு வரும். மாதத்தின் இரண்டாம் பாதி சிக்கலானதாக இருக்கும். உங்கள் வாழ்க்கைக்கு பொருந்தாத ஒருவரை வாழ்க்கையில் இணைக்கு முயற்சிக்காதீர்கள்.

மீனம்
இந்த மாதத்தில் நீண்ட, தீவிரமான உறவைத் தொடங்குவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. சூழ்நிலைகளைப் பற்றி நேர்மறையாக இருங்கள். நீங்கள் ஒரு வலுவான உறவை உருவாக்க விரும்பினால் ஒவ்வொரு கணத்தையும் அனுபவிக்கவும். புதிய சந்திப்புகளை விட்டுவிடாதீர்கள், உங்கள் சமூக வட்டத்தை மாற்றவும்.
உங்கள் துணையிடம் கருணையுடன் இருங்கள் மற்றும் அவர்கள் ஏமாற்றமடையாமல் இருக்க அவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் காட்டுங்கள்.



Click it and Unblock the Notifications











