Latest Updates
-
இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் மோசமான பிரச்சினைகள் வருமாம்...! -
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...!
எந்த ராசிக்காரங்க கூச்சமே இல்லாம உதவி கேப்பாங்க தெரியுமா?
எந்த ராசிக்காரங்க கூச்சமே இல்லாம உதவி கேப்பாங்க தெரியுமா?
Recommended Video
இந்த பூமியில் அனைவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வதற்காகவே படைக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கையில் உதவி கேட்காமலோ அல்லது உதவி செய்யாமலோ எவராலும் வாழ முடியாது. சிறு வயதில் எந்த தயக்கமும் இன்றி மற்றவர்களிடம் உதவி கேட்கும் பழக்கம் அனைவருக்கும் இருக்கும். ஆனால் பதின்ம வயதை கடக்கும் போது மற்றவர்களிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்பட்டுவிடுகிறது. இருப்பினும் உதவி கேட்காமல் யாராலும் இருக்க முடியாது.

ஒவ்வொருவருக்கும் உதவி கேட்பதற்கு என தனி ஸ்டைல் இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி நமது அடிப்படை குணங்களில் உதவி கேட்பதும் அடங்கும். நமது உதவி கேட்கும் முறை நமது ராசியை பொறுத்து மாறுபடும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த பதிவில் ஒவ்வொரு ராசியும் எப்படி உதவி கேட்பார்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் நேரடியாக உதவி கேட்கும் பழக்கம் கொண்டவர்கள். இவர்கள் எந்தவொரு கடின வேலையையும் செய்வதற்க்கு முன்னும் அந்த வேலை தொடர்பான நிபுணர்களிடம் எந்தவித தயக்கமும் இன்றி நேரடியாக அவர்களிடம் நேரடியாக உதவி கேட்பார்கள். இவர்கள் எந்தவித முன்னறிவுப்பும், ஆர்ப்பாட்டமும் இன்றி நேரடியாக உதவி கேட்டுவிடுவார்கள்

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் உதவி கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறார்கள், எனவே அவர்கள் உதவி கேட்பதைத் தவிர்த்து முடிந்தவரை அனைத்தையும் தானகவே செய்துகொள்ள முயற்சிப்பார்கள். உதவி தேவை என்று அவர்கள் உணரும்போது அவர்களின் தேவை எதுவென்பதில் மிகவும் திட்டவட்டமாக இருப்பார்கள். அவர்கள் சிக்கலில் இருக்கும் பணியை வேறு யாராவது செய்ய வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படும்போது மட்டுமே பொதுவாக அவர்கள் உதவி கோறுவார்கள்.

மிதுனம்
உதவி கேட்கும்போது மிதுன ராசிக்காரர்கள் தங்களின் சிறந்த அனைத்து தொடர்பு கொள்ளும் முறைகளையும் கையாளுவார்கள். மேலும் அதனை பல வழிகளிலும் செய்வார்கள். அவர்கள் நேரடியாகக் கேட்கபார்கள் அல்லது அவர்களுக்கு உதவி தேவை என்பதை நிரூபிக்க முயற்சி செய்யலாம் அல்லது உதவி தேவை என்று கூறவே இன்னொருவரின் உதவியை நாடுவார்கள். இவர்கள் பொதுவாக யார் உதவி கேட்டாலும் உடனே செய்துவிடுவார்கள். எனவே இவர்களுக்கு உதவி தேவைப்படும்போது தானாக உதவி கிடைக்கும்.

கடகம்
கடக்க ராசிக்காரர்கள் மற்றவர்களுடன் சுமூகமான உறவை எப்பொழுதும் வளர்ப்பதால் இவர்களுக்கு உதவ அனைவரும் ஆர்வமாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் இதயத்தில் இருந்து உதவி கேட்பார்கள், இவர்கள் உதவி கேட்பதில் அதிக உணர்ச்சிகள் இருக்கும். அவர்கள் சில நேரங்களில் தங்களுக்கு நெருக்கமானவர்களைச் சார்ந்து இருக்கக்கூடும், மேலும் அடிக்கடி உதவி கேட்பார்கள். அடிக்கடி உதவி கேட்டாலும் மற்றவர்களுக்கு உதவ இவர்கள் முதல் ஆளாய் இருப்பார்கள்.

சிம்மம்
தாராள குணமும், அதிக உதவும் எண்ணமும் கொண்ட ராசிகளில் இவர்களும் ஒருவர். முதலில் உதவி தேவை என்ற எண்ணமே இவர்களுக்கு வராது, ஆனால் உதவி தேவைப்படும் தருணத்தை இவர்கள் உணர்வார்கள். தனக்கு உதவி செய்ய பலர் இருக்கிறார்கள் என்று இவர்களுக்கு தெரியும், எனவே இவர்கள் உதவி கேட்க ஒருபோதும் கூச்சப்படமாட்டார்கள். உதவி செய்தவர்களை இவர்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் உதவி கேட்பதை சுத்தமாக விரும்ப மாட்டார்கள், எனவே தாங்களாவே செய்யக்கூடிய அனைத்து வலிகளையும் இவர்கள் முயற்சிப்பார்கள். கண்டிப்பாக உதவி தேவைப்படும் பட்சத்தில் எப்படி உதவி கேட்க வேண்டும் என்று தனக்குள்ளேயே பலமுறை முயற்சிப்பார்கள், அதற்கு மற்றவர்களின் பதில் என்னவாக இருக்கும் என்பதையும் இவர்களாகவே பல கோணங்களில் யோசிப்பார்கள். அனைத்து கற்பனைகளும் சாதகமாக இருந்தால் மட்டுமே இவர்கள் உதவி கேட்பார்கள்.

துலாம்
இவர்கள் உதவி கேட்க ஒருபோதும் தயங்க மாட்டார்கள். ஆனால் எப்படி கேட்க வேண்டும், உதவி மறுக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் போன்றவற்றிற்கெல்லாம் இவர்கள் தயாராக இருக்க மாட்டார்கள். இவர்கள் பெரும்பாலும் உதவி கேட்டால் கிடைக்காது என்றே நினைத்துக் கொண்டிருப்பார்கள். எனவே உதவி கிடைக்கும்போது அது இவர்களுக்கு பெரிய ஆச்சரியத்தைக் கொடுக்கும். ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ வேண்டும் என்பதில் இவர்கள் அதிக நம்பிக்கை கொண்டவர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக உதவி கேட்பார்கள், மேலும் அவர்களுடைய கவனத்தை பணியிலிருந்து திசை திருப்ப முடியாது. கேட்கும் உதவி கண்டிப்பாக கிடைக்க இவர்கள் அனைத்து முன்னேற்பாடுகளையும் சரியாக செய்வார்கள். சிறிய உதவிகள் முதலே இவர்கள் இந்த அடித்தளத்தை சரியாக செய்து விடுவார்கள். எனவே இவர்கள் பெரிய உதவி கேட்கும்போது அது பெரிய அதிர்ச்சியாக இருக்காது.

தனுசு
எப்போதும் மற்றவர்களுக்கு உதவும் தனுசு ராசிக்கார்களுக்கு தங்களுக்கு உதவித் தேவைப்படும்போது கேட்பதில் எந்த தயக்கமும் இருக்காது. இவர்களுக்கு அறிவுரையோ அல்லது உதவியோ ஒருவரிடம் இருந்து தேவைப்படும்போது அவர்களின் முந்தைய உதவிகளும், அறிவுரைகளும் அவர்களுக்கு எப்படி உதவியாக இருந்தது என்பதை நினைவுகூறுவார்கள். தனுசு ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு உதவுவதில் வலுவான நம்பிக்கை கொண்டவர்கள், மேலும் அவர்கள் உதவிக் கேட்பதை விட உதவியை வழங்க விரும்புகிறார்கள்.

மகரம்
மகரம் என்பது சுயாதீனமாகவும் திறமையாகவும் இருப்பதால், அவர்கள் உதவி கேட்க வேண்டிய நேரங்கள் எப்போதாவது வரும். ஆனால் அது அவர்கள் சாதாரணமாகவோ அல்லது சிந்தனையோ செய்யாத ஒன்றாக இருக்கும். அவர்கள் கேட்கும் விதத்தில் அவர்கள் உண்மையானவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருக்கிறார்கள். மகர ராசிக்காரர்கள் உதவி கேட்கும்போது அவர்களின் வார்த்தைகளில் கவனம் செலுத்துகிறார்கள், எனவே எந்தவிதமான தவறான புரிதல்களும் ஏற்படாது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் அனைத்தையும் தானே ஒருவரால் செய்துவிட முடியாது என்று இவர்கள் இவர்கள் நன்கு அறிவார்கள். அவர்கள் தயக்கமின்றி உதவி கேட்க முனைகிறார்கள். பொதுவான ஒரு சேவையை செய்யும்போது இவர்கள் மற்றவர்களின் உதவியை நாடுவார்கள்.

மீனம்
மற்றவர்களுக்கு உதவி தேவை என்பதை இவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும், அதேசமயம் இவர்களுக்கு உதவி தேவை என்பதை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாது. மீன ராசிக்காரர்கள் தவறான நபர்கள் மீது நம்பிக்கை வைக்கிறார்கள், அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யாமல் அவர்களுக்கான உதவிகளை மட்டும் இவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்வார்கள்.



Click it and Unblock the Notifications











