For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்மை குறைவு நீங்கணுமா? - நவகிரகங்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிடுங்க

|

இந்த பிரபஞ்சம் நம்ம என்ன நினைக்கிறாமோ அதைத்தான் திருப்பி கொடுக்கும். மனோகாரகன் சந்திரனை மனதை திட படுத்தினால் போதும் செவ்வாயும் சுக்ரனும் 100 சதவிகிதம் புகுந்து விளையாடும். சனி என்பவர் அலி இவர் நீச சுக்கிரனுடன் தொடர்ப்பு பெறும்போது ஆண்மை குறைவு ஏற்படும். ஜென்ம ராசி என வர்ணிக்கப்படக்கூடிய சந்திரன் சனி, செவ்வாய், ராகு, கேது ஆகிய பாவகிரகங்களில் ஏதாவது இரு கிரகங்களின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் ஜாதகருக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டு இல்வாழ்வில் மகிழ்ச்சியற்ற நிலை உண்டாகும். மேற்கூறிய கிரக அமைப்புகள் பெண்கள் ஜாதகத்தில் இருக்குமேயானால் மணவாழ்க்கை சிறப்பாக அமையப்பெறாத நிலை ஏற்படுகிறது.

நவகிரகங்களில் அலிகிரகம் என வர்ணிக்கப்படுவது சனி,புதன் ஆகும். ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்று சுபர் பார்வையின்றி இருந்தாலும், சனி பகவான் ராக சேர்க்கை பெற்று, 1,7 ல் இருந்து சுபர் பார்வையின்றி இருந்தாலும், ஜென்ம லக்னத்தை சனி, ராகு, புதன் போன்ற கிரகங்கள் சூழ்ந்திருந்தாலும் ஆண்மை குறைவு ஏற்படும். ஜாதகத்தில் 8 ஆம் வீட்டில் சனி, ராகு, புதன் அமைந்து 7,8 ம் வீட்டிற்கு சுபர் பார்வையின்றி இருந்தாலும், 8ம் வீடு புதன் வீடாக இருந்து சனி, ராகு 8ம் வீட்டைப் பார்த்தாலும், புதன், சனி, ராகு அல்லது கேது சேர்க்கை பெற்றிருந்தாலும் மலட்டுத்தன்மைதான்.

ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் பலம் குறைந்து கேதுவுடன் தொடர்ப்பு பெறும் போது ரத்த ஓட்டம் குறைவாக செலுத்தி விரைப்பு சுருக்கி விடுதல் இது போன்று நிகழும் இதில் வீரிய ஸ்தானம் அதிபர் பலம் இருந்தால் எதுவும் நடக்காது. 12ஆம் இடம் பாதிப்பு இல்லாமல் இருந்தால் எதுவும் நடக்காது 7ஆம் அதிபர் பலமாக இருந்தால் எதுவும் இல்லை. ஒன்று தீமை செய்தால் ஒன்று நன்மை செய்யும் ஒரு கால் உடைந்து போனால் இன்னொரு கால் கொண்டு நடக்கிறோம் அல்லவா. கிரகங்களும் வழிகட்டவில்லை. மருத்துவமும் வழிகட்டவில்லை என்று நொந்து போகவேண்டாம். உங்கள் ஜாதகத்தில் இருக்கும் பலம் குறைந்த கிரகங்களை வெல்ல முடியும். நீங்கள் உண்ணும் உணவை வைத்தே உங்கள் கிரக பலத்தை கூட்ட முடியும். சனி பகவானுக்கு சரியான தீனி போட்டால் மற்ற கிரகங்களிடம் இருந்து ஏதும் பறிக்க முயற்சி செய்ய மாட்டார் என்கிறார் ஜோதிடர் சூர்ய ஜெயவேல்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாரம்பரிய உணவுகள்

பாரம்பரிய உணவுகள்

கம்பு, கேழ்வரகு களி வகைகள்,பழையசோறு,இது எல்லாம் பாரம்பரிய உணவு இவை எல்லாம் சனியின் உணவுகள், சனிக்கு எளிமை தான் பிடிக்கும், இதை அறிந்து முன்னோர்கள் சத்தாக உண்டு சனியை அடக்கினார்கள், ஆண்மை குறைவு என்ற வியாதியை இல்லாமல் வாழ்ந்து சென்றார்கள், ஏழரை சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டம சனி என்று பயந்து பயந்து வாழவில்லை, இந்த உணவுகள் எடுத்ததால் சனி எந்த பிரச்சனையும் கொடுக்கவே இல்லை. இப்போது தான் சனி பற்றிய அதிக பயமும் ஆண்மை குறைவு என்ற பயமும் அதிகம் ஆட்டம் ஆடுகிறது, உணவின் மூலம்,கிரகங்களை வென்றவர்கள் நம் முன்னோர்கள் எனவே சத்தான உணவுகளை சாப்பிட்டால் போதும் எந்த கிரக பாதிப்பும் எதுவும் செய்யாது.

MOST READ: காபி குடிச்ச கறை பல்லுல இருக்கா?... அத எப்படி சரி பண்றது?...

சூரிய உணவுகள் - சிவப்பு அரிசி

சூரிய உணவுகள் - சிவப்பு அரிசி

சோளம், சிவப்பு அரிசி, கோதுமை, சாப்பிடலாம். யோக ஆசனம் செய்வது சூர்ய நமஸ்காரம் செய்வதும் சூரியனின் உணவுகள் என்று மருத்துவ ஜோதிடத்தில் அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டுள்ளது. நீர் அதிகம் குடிக்கலாம். இது சந்திரனுக்கு ஏற்றது. எல்லா உணவுகளையும் மருந்தாக மாற்றி நலம்பெற செய்பவர் கேது பகவானே. அதே நேரம் மது, சிகரெட் புகை, ப்ரைடு ரைஸ், சிப்ஸ் போன்றவையும் குளிர்பானங்களும் ராகுவிற்கு காரகம். இவற்றை தவிர்த்தாலே போதும் ஆண்மை குறைவு நீங்கும்.

செவ்வாய் உணவு - மட்டன் ஈரல்

செவ்வாய் உணவு - மட்டன் ஈரல்

ஆட்டு கறி, ஈரல், பீட்ருட், கேரட், மல்லிச்செடி, புதினா செடி, துளசி, அனைத்து கீரை வகைகள், முக்கியமாக அகத்தி கீரை, குதிரை வாலி தானியம் மற்றும் விளையாடுதல் வேகமாக ஓடுதல் இது போன்ற செயல்கள் செய்ய செய்ய இந்த உணவுகளை உண்ண உண்ண செவ்வாய் என்னும் கிரகம் பலம் குறைவாக இருந்தலும் பலம் கூடிவிடும். மாதுளை,பேரீச்சை, செவ்வாழை,பழங்களும் செவ்வாய் பலத்தை கூட்டி விடும்

பச்சை பயறு - மஞ்சள் வாழைப்பழம்

பச்சை பயறு - மஞ்சள் வாழைப்பழம்

பச்சை நிற காய்கறிகள், பச்சை பயறு, சுண்டல் வகைகள்,கற்றாழை,, வெங்காயம் சாப்பிடலாம். புத்திரகாரகன் குரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தொப்பை உருவாக்கி தருபவர் ஆண்மைக்குறைவுக்கு தொப்பையும் ஒரு காரணி அப்போ அவரை கவனிக்க மஞ்சள் நிற வாழைப்பழம், பப்பாளி, அன்னாசி பழம், உலர்ந்த திராட்சை, கொண்டை கடலை சாப்பிடலாம்.

சுக்ரன் உணவுகள் - பூசணி விதைகள்

சுக்ரன் உணவுகள் - பூசணி விதைகள்

கொட்டை வகைகள் அதாவது சூரிய காந்தி விதைகள் பாதம் பருப்பு,சிவப்பு பூசணி விதைகள் சுரைக்காய் விதைகள் நிலக்கடலை இவை எல்லாம் சுக்ர சுக்கிலத்தின் தரத்தை உயர்த்தும் சுக்ர பலம் இல்லாத ஜாதகர்கள் உண்டு வர சுக்ரன் பலம் கூடி விடும் பசும்பால்,தேங்காய் பால் போன்றவை சுக்கிரன் பலத்தை கூட்டும்.

MOST READ: குரு பெயர்ச்சி 2019 - 20: தனுசு லக்னத்திற்கு பாக்யங்களை அள்ளித் தரும் ஜென்மகுரு

சனிக்கு பிடித்த எள் உணவுகள்

சனிக்கு பிடித்த எள் உணவுகள்

எள்ளு, எள்ளுருண்டை, கருப்பட்டி, பனைமர பதநீர் நொங்கு, வாரம் இருமுறை நல்லெண்ணெய் குளியல், நல்லெண்ணெய் ஆயில் புல்லிங்,இதை பின்பற்றினால் சனி மற்ற கிராகத்திடம் இருந்து எதையும் பறிக்காது. இது மற்ற கிரகங்களை தொந்தரவு செய்வது இல்லை உடல் உறுப்புகளை சேதப்படுத்தாமல் இருப்பார் அவரின் காரகமான தொழில், தொழிளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து உழைக்க வைப்பார் இது சாதாரண நிலையிலும்,அர்த்த, மற்றும் அஷ்டம மற்றும் ஏழரை சனி நிலைகளிலும் மனிதனை துன்பப்படுத்தாமல் அவர் வேலையை செய்து கொண்டு இருப்பர்.

ராகு கேது

ராகு கேது

ராகு உணவு மூலம் கிடைக்கும் உடல் சக்தியை வெளியேற்ற முயற்சி செய்யும். கேது உணவின் முலம் பெறப்பட்ட சக்தியை மருந்தாக செயல்படுத்தி உடலில் தேக்கி வைக்க முயற்சி செய்யும். நாம் உணவுகள்தான் இன்றைக்கு பல பிரச்சினைகளுக்குக் காரணம். சத்தான உணவுகளை உண்டு நவகிரகங்களை சாந்தப்படுத்தினாலே போது நோய்களை வெல்ல முடியும். கிரகங்களை வலுவாக்க முடியும்.

MOST READ: எப்பவும் தனிமையாவே இருக்கீங்களா?... இதுல ஏதாவது ட்ரை பண்ணுங்க... ஜாலியா ஆயிடுவீங்க

நவகிரகங்களும் உணவுகள்

நவகிரகங்களும் உணவுகள்

உணவுகள் கண்டிப்பாக கிரகங்களை சமன் செய்யும் மற்றும் உடலில் இருக்க்கும் அனைத்து ஹார்மோன்களையும் சமன் செய்யும். உடல் உறுப்புகள் அனைத்தும் கிரக தொடர்புடையயவை. உணவை சரி செய்தால் உடல் சரியாகும். உடல் சரியனால் நம்மை இயக்கும் கிரகங்கள் நம்மை தொந்தரவு செய்வது இல்லை. இப்படித்தான் நம் முன்னோர்கள் கிரகத்தை வென்றார்கள். நீங்களும் கிரகங்களை வெல்ல முயற்சி செய்யுங்கள் நல்லதே நடக்கும். ஆண்கள் மகாலட்சுமியை வணங்கலாம். பெண்கள் பெருமாளை வணங்கலாம். ராகு கேது நீர் ராசியில் நின்றால் சிவனை வழிபட ஆண்மை குறைபாடு நீங்கும். ஆனந்தம் பெருகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Infertility And The Role Of Planets: Astrology Secrets Remedies

Before trying to any remedies, a woman or a couple needs to stay relaxed and welcome the remedies. Read on.
Story first published: Thursday, October 10, 2019, 18:30 [IST]
Desktop Bottom Promotion