Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
தங்கம் வாங்க முடியாதவர்கள் அட்சய திருதியை அன்று அவங்க ராசிப்படி இந்த பொருட்களை வாங்கினாலும் அதிர்ஷ்டம்தானாம்!
இந்த வருடம் அட்சய திருதியை மே, 3 ஆம் தேதி வருகிறது. ஜோதிடத்தில் அட்சய திருதியைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. நாடு முழுவதும், இந்த திருவிழா அதன் அதிர்ஷ்டம் மற்றும் முக்கியத்துவத்திற்காக அறியப்படுகிறது.
இந்த வருடம் அட்சய திருதியை மே, 3 ஆம் தேதி வருகிறது. ஜோதிடத்தில் அட்சய திருதியைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. நாடு முழுவதும், இந்த திருவிழா அதன் அதிர்ஷ்டம் மற்றும் முக்கியத்துவத்திற்காக அறியப்படுகிறது. இது ஒரு புனிதமான பண்டிகை மற்றும் இந்துக்கள் மற்றும் பிற மதத்தினருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அட்சய திருதியை அன்று நாடு முழுவதும் பலர் அதிர்ஷ்டத்திற்காக யாகம், பூஜை, தானம் போன்றவற்றைச் செய்கிறார்கள்.

அட்சய திருதியை நாளில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவது மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருவதாகவும் மக்கள் நம்புகிறார்கள். ஆனால் இந்த நாட்களில் தங்கம் வாங்க முடியாதவர்கள் அவர்களின் ராசிப்படி வேறுசில பொருட்களை வாங்குவது அவர்களுக்கு அதேயளவு அதிர்ஷ்டத்தை அளிக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த பதிவில் அட்சய திருதியை அன்று உங்கள் ரசிப்பது என்ன பொருள் வாங்க வேண்டும் என்று பார்க்கலாம்.

மேஷம்
தங்கம் மற்றும் வெள்ளி வாங்க முடியாத மேஷ ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில், மேஷம் சிவப்பு நிற பருப்பை வாங்க வேண்டும். இதன் விளைவாக நீங்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள்.

ரிஷபம்
ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள் அட்சய திருதியை அன்று தினை அல்லது அரிசி வாங்க வேண்டும். இது உங்களுக்கு மகிழ்ச்சியையும் வெற்றியையும் தரும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் அட்சய திருதியை அன்று ஆடை, பச்சைநிற பருப்பு அல்லது கொத்தமல்லி வாங்க வேண்டும். அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கும்.

கடகம்
சந்திரன் உங்களை ஆளும் கிரகமாக இருப்பதால், நீங்கள் அட்சய திருதியை அன்று அரிசி அல்லது பால் வாங்க வேண்டும். இது உங்கள் வளர்ச்சிக்கு பயனளிக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியை ஆளும் கிரகம் சூரியன். இதன் விளைவாக, சிம்ம ராசியில் பிறந்தவர்கள் அட்சய திருதியை அன்று செப்பு சமையல் பாத்திரங்கள் அல்லது சிவப்பு ஆடைகளை வாங்க வேண்டும். இது எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை அன்று பாசி பருப்பு வாங்குவது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். இதன்மூலம் எல்லையில்லா ஆசீர்வாதத்தைப் பெற்றிருப்பீர்கள்.

துலாம்
அட்சய திருதியை அன்று, துலாம் ராசியில் பிறந்தவர்கள் அரிசி அல்லது சர்க்கரை வாங்க வேண்டும். இது உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்.

விருச்சிகம்
அட்சய திருதியை அன்று வெல்லம் அல்லது தண்ணீர் வாங்குவது விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். இதன்மூலம் உங்கள் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

தனுசு
குரு உங்கள் ராசியை ஆளும் கிரகமாகும், எனவே இந்த ராசியின் கீழ் பிறந்தவர்கள் மஞ்சள் அரிசி அல்லது வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். இது உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

மகரம்
சனி மகரத்தை ஆளும் கிரகமாகும். இந்த ராசியில் பிறந்தவர்கள் அட்சய திருதியை அன்று உளுத்தம் பருப்பை வாங்குவது நல்லது.

கும்பம்
அட்சய திருதியை அன்று, கும்ப ராசியில் பிறந்தவர்கள் கருப்பு எள் அல்லது ஆடைகளை வாங்க வேண்டும். இந்த ராசியின் அதிபதியும் சனி தேவன் தான். எனவே இதன்மூலம் அவர்கள் சனிபகவானின் அருளை பெற வேண்டும்.

மீனம்
இந்த ராசியின் அதிபதியும் குருபாகவன்தான். இந்த ராசியில் பிறந்தவர்கள் மஞ்சளை வாங்க வேண்டும். இது உங்கள் அதிர்ஷ்டத்தை மேம்படுத்தும்.



Click it and Unblock the Notifications