Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
எண்ணெயை ஊசிமூலம் செலுத்தி இப்படி ஆகியிருக்கும் 50 வயசு பாடிபில்டர்... என்ன பன்றாரு பாருங்க...
ஊசியின் மூலம் எண்ணெயை உடம்புக்குள் செலுத்தி தன்னுடைய உடலை இப்படி ஏற்றி வைத்திருக்கும் பிரேசில் பாடிபில்டர் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
உடலை கட்டுக்கோப்பாக மற்றும் அழகாக வைத்துக் கொள்ள சில மனிதர்கள் எந்த ஒரு எல்லைக்கும் செல்கின்றனர். கடுமையான டயட் முதல் பயத்தை உண்டாக்கும் பல வழிகளைப் பின்பற்றி உடலை ஒல்லியாக வைத்துக் கொள்கின்றனர். இதற்காக சிலர் எந்த ஒரு சவாலையும் எளிதாக ஏற்றுக் கொள்கின்றனர்.

மற்றொரு புறம், உடலைக் கட்டுமஸ்தாக பராமரிக்கும் பாடிபில்டர்கள் தங்கள் தனித்தன்மையைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் எந்த ஒரு அபாயகரமான வழிகளையும் பின்பற்றத் தயங்குவதில்லை.

பிரேசில் பாடி பில்டர்
தங்கள் தசை வலிமையை அதிகரிக்க, தங்கள் உடல் வடிவத்தை பெரிதாக மாற்ற ஊக்க மருந்துகள் அல்லது எண்ணெய் ஊசிகளைப் பயன்படுத்துகின்றனர். சில பாடி பில்டர்கள். இந்த வகையில் எண்ணெய் ஊசி மூலம் தனது தசை வலிமையை அதிகரித்துக் கொள்ளும் ஒரு பாடி பில்டரின் கதையைப் பற்றி நாம் காணவிருக்கிறோம். கடந்த ஒரு வருடமாக எண்ணெய் ஊசி பயன்படுத்தி தனது புஜங்களை ஹல்க் போல் வைத்துக் கொண்டிருக்கும் அந்த நபர் வல்டீர் .

50 வயது
50 வயதைக் கடந்த ஒரு பாடி பில்டர் வல்டீர் செகடோ. இவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். இவர் தன்னுடைய உடல் தசைகளில் எண்ணெய்யை அடிப்படையாகக் கொண்ட ஒரு மூலப்பொருளால் ஆன ஒரு ஊசியை கடந்த ஒரு ஆண்டாக பயன்படுத்தி வருகிறார். இப்படி எண்ணெய் ஊசியைப் போட்டுக் கொள்வதால் அவருடைய புஜங்களும் மார்பும் பலூன் போல் விரிந்து காணப்படுகிறது.

போதைக்கு அடிமை
வல்டீர் சில நாட்கள் முன்னதாக போதைப் பழக்கத்திற்கு அடிமையானார். இதன் விளைவாக அவருடைய உடல் எடை குறையத் தொடங்கியது. இதனால் அவருடைய நண்பர்கள் அவரை கிண்டல் செய்யத் தொடங்கினார்கள். நண்பர்கள் மத்தியில் அவமானப்படுவதால் எரிச்சலடைந்த வல்டீர், தனது உடல் எடையை அதிகரிக்க ஜிம் செல்லத் தொடங்கினார். ஆனால் வல்டீர் எதிர்பார்த்த விளைவுகள் ஜிம்மிற்கு செல்வதால் உண்டாகவில்லை. இந்த நேரத்தில் தசைகளை விரிவுபடுத்தக் கூடிய ஒரு பொருளான சின்தால் பற்றிய அறிமுகம் அவருக்குக் கிடைத்தது.

ஜிம் ஆர்வம்
உடனே அவர் சின்தால் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். அவருடைய புஜங்களில் மற்றும் மார்பு தசைகளில் சின்தால் ஊசியை செலுத்திக் கொள்வதைக் கடந்த ஒரு ஆண்டாக வழக்கமாகக் கொண்டுள்ளார்.
தொடர்ச்சியாக இந்த ஊசியை எடுத்துக் கொள்வதால் உண்டாகும் பக்க விளைவுகள் குறித்து அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து இந்த ஊசியைப் பயன்படுத்துவதால், ஒரு காலகட்டத்திற்குப் பிறகு இவருடைய மூட்டுகள் துண்டிக்கப்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மருத்துவ எச்சரிக்கை
மருத்துவர்களின் எச்சரிக்கையைக் கேட்ட பிறகும் வல்டீர் இந்த மருந்து உபயோகிப்பதை நிறுத்தவில்லை. மக்கள் அவரை ஹல்க், அர்னால்ட், ஹீமான் என்று அழைப்பதை அவர் பெரிதும் விரும்புவதாகக் கூறுகிறார். இந்த ஊசியைப் பயன்படுத்துவதால் அவருடைய புஜங்கள் இரண்டு மடங்கு விரிவடைந்திருப்பதாகக் கூறுகிறார். ஆனாலும் இதோடு நிறுத்தப் போவதில்லை என்றும் இந்த அளவை மேலும் பெரிதாக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.
அவருடைய தசை வலிமை மற்றும் அளவால் மற்றவர்களின் கவனம் இவர் மேல் இருப்பதை அவர் மிகவும் விரும்புவதாகக் கூறுகிறார். வல்டீர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றி மகிழ்ச்சி அடைகிறார்.



Click it and Unblock the Notifications