Latest Updates
-
ஆகஸ்ட் 05-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
உலகில் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் டாப் 5 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
காரைக்குடி செட்டிநாடு சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் மிளகு புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
எந்த நோய்க்கு எந்த ஜூஸ் குடிப்பது நல்லது? - விளக்கும் டாக்டர்.பிள்ளை! -
நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2027 வரை சகல நன்மைகளையும், ராஜயோகத்தையும் அடையப்போகும் ஒரே ராசி எது தெரியுமா? -
சனி மங்கள யோகம்: இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
சரவணபவன் ஸ்டைல் வெள்ளை குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 03 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
மாலைக்கு பதிலாக பாம்பு மாற்றி திருமணம் செய்துக் கொண்ட புதுமண தம்பதி - (வீடியோ)
மாலைக்கு பதிலாக பாம்பு மாற்றி திருமணம் செய்துக் கொண்ட புதுமண தம்பதி - (வீடியோ)
ஒவ்வொரு நபரின் வாழ்விலும் ஒரு புதிய அத்தியாயமாக காணப்படுவது திருமணம். திருமணம் என்பது வாழ்நாளில் யாராலும் மறக்க முடியாத ஒரு நினைவு. நம் நாட்டில் மட்டும் தான் திருமணமானது பல முறையில், பல விதமாக நடப்பதை காண முடியும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரியான திருமண வழக்கம், சடங்குகள் இருக்கிறது. ஏன், பாஞ்சாலியை போல ஒரே பெண் சகோதரர்களை திருமணம் செய்துக் கொள்ளும் வழக்கங்கள் கூட இந்தியாவில் இருக்கிறது.
வித்தியாசமான திருமண முறை எத்தனை இருந்தாலும், மாலை மாற்றிக் கொள்ளும் வழக்கமானது பெரும்பாலும் அனைத்து இந்திய திருமண முறைகளிலும் காணப்படுகிறது. தாலி கட்டாமல் உறுதி மொழி எடுத்துக் கண்டு திருமணம் செய்துக் கொள்ளும் நபர்கள் கூட மாலை மாற்றிக் கொள்வார்கள்.
ஆனால், மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு ஜோடி மாலைக்கு பதிலாக விஷத்தன்மை கொண்ட பாம்பினை மாற்றிக் கொள்வது போல வெளியான வீடியோ ஒன்று s மோக தளங்களில் விரலாக பரவிக் கொண்டிருக்கிறது. பார்ப்பவர்கள் மத்தியில் இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைரல் வீடியோ!
சில நாட்களுக்கு முன்னர் சமூக தளங்களில் ஒரு வீடியோ பதிவு வைரலாக பரவியது. அதில் மணமகனும், மணப்பெண்ணும் மாலைக்கு பதிலாக ஒருவர் மற்றொருவர் கழுத்தில் விஷத்தன்மை வாய்ந்த பாம்பினை மாற்றிக் கொண்டு திருமணம் செய்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.

எங்கே?
இப்படி மாலைக்கு பதிலாக பாம்பினை மாற்றிக் கொண்டு திருமணம் செய்த வீடியோ மகாராஷ்டிராவின் ஏதோ ஒரு மாவட்டத்தில் நடந்த நிகழ்வு என்று அறியப்படுகிறது. பாம்பினை மாற்றி திருமணம் செய்துக் கொள்ளும் அந்த காட்சியை பலரும் வியந்து பார்த்தனர். சிலர் அதிர்ச்சியளிப்பதாக கூறி தங்கள் கருத்துகளை பதிவு செய்திருந்தனர்.

எப்போது?
ஆனால், இந்த பரபரப்பு திருமணம் சமீபத்தில் நடந்த திருமணம் அல்ல. இந்த வீடியோவானது 2010ல் எடுக்கப்பட்டது என்றும், அந்த மணமகன் பெயர் சித்தார்த் சோனோவாலே மற்றும் மணப்பெண் பெயர் ஸ்ருதி அஸ்ராம் என்றும் அறியப்படுகிறது. இவர்கள் இருவருமே வனவிலங்கு துறையில் பணிபுரிந்து வருபவர்கள் என்றும். அதனால் தான் தங்கள் திருமண சடங்கில் மாலைக்கு பதிலாக பாம்பினை மாற்றி திருமணம் செய்துக் கொண்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

உடை!
இந்திய திருமணங்களில் மணப்பெண் வெள்ளை புடவை உடுத்த மாட்டார்கள். வெள்ளை புடவையனது கணவனை இழந்த பெண் உடுத்தும் உடையாக காணப்படுவதால் வண்ண புடவையே உடுத்துவார்கள். ஆனால், பாம்பு மாற்றி செய்துக் கொள்ளப்பட்ட இந்த திருமணத்தில் மணப்பெண், மணமகன் இருவருமே வெள்ளை உடை தான் உடுத்தி இருந்தனர்.
கோப்ரா பாம்பு!
மேலும், சித்தார்த் மற்றும் ஸ்ருதி இருவரும் மாலைக்கு பதிலாக மாற்றிக் கொண்ட அந்த பாம்பு கோப்ரா வகையிலான அதிக விஷத்தன்மை வாய்ந்தவை என்றும் கூறப்படுகிறது. இந்த வினோத தம்பதிகளின் திருமணத்தை பலரும் கண்டுகளித்துள்ளனர். இந்த திருமணத்தில் பங்கெடுத்துக் கொண்ட யார் ஒருவராலும் இவர்கள் இருவரையும் தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது. பாம்பு என்றால் வாயிலேயே பம்படிக்கும் நபர்கள் மத்தியில் இவர்கள் அதையே மாற்றி திருமணம் செய்துள்ளனர்.
ஏறத்தாழ எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த திருமணத்தின் வீடியோ காட்சிகள் இப்போது சமூக தளங்களில் வைரலாக பரவி வருகிறது.



Click it and Unblock the Notifications