For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீரியல் கில்லர்களான ’தந்தை-மகன்’ போலீசிடம் சிக்கிய சுவாரஸ்ய கதை!

தொடர் கொலைகளில் ஈடுபட்டு வந்த தந்தை மகன் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள். கேட்பவர்களை திகிலூட்டும் பயங்கர பின்னணியுடன் நடந்த கொலை குறித்து கதை.

|

இதற்கு முன்னாலும் சரி, இதன் பின்னாலும் சரி இப்படியான ஓர் கோர படுகொலைகள் நடந்திருக்க முடியாது என்கிறார்கள். அதுவும் தந்தை மகன் என இருவரும் தொடர் கொலைகாரர்களாக இருந்து ஊரையே கலங்கடித்திருக்கிறார்கள்.

தந்தையும் மகனும் இப்படியான தொடர் கொலைகாரர்களாக இருந்ததினால் மரபணு வழியாக இது தொடர்கிறதா என்று நினைத்தனர். உண்மையில் அப்படி அவர்கள் கொலை காரர்களாக இருந்ததற்கு எந்த காரணங்களும் தெரியவில்லை. இது தானாக இயற்கையிலேயே அவர்கள் கொலைகாரர்களாக இருந்தார்களா? அல்லது ஏதேனும் ஒரு சம்பவம் அல்லது ஏதேனும் ஒரு பின்னணி காரணம் இருந்ததா என்பது குறித்து அறியப்படவில்லை.

மகன் இயான் ரிமாரு மற்றும் அப்பா ஃப்லோரியா ரிமாரு ஆகியோர் தான் இந்த தொடர் கொலைகாரர்களாக பயமுறுத்தியிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 #1

#1

1970-71 களில் மிருகத்தை விட மிக கொடூரமாக கொலை செய்பவன் என்று வலை வீசி தேடப்பட்டு வந்த பயங்கரமான கொலைகாரன் இந்த இயான். இவனது கொலை பாணி என்ற எந்த அடையாளங்களும் இல்லாததால் கண்டுபிடிக்க கொஞ்சம் தாமதமாயிற்று.

இவன் குறிவைத்தது பெரும்பாலும் பெண்களைத்தான். இரும்பு கம்பி அல்லது கோடாரியை வைத்து கொடுரமாக தாக்கி அவர்களை பாலியல் வன்புணர்வு செய்வான், அவனால் கொல்லப்பட்டவர்களின் உடலிலிருந்து சில பாகங்கள் காணமல் போயிருக்கும் என்பதால் போலீசார் அவன் நரமாமிசம் சாப்பிடும் வழக்கம் கொண்டவனாக இருக்கும் என்று நினைத்திருந்தனர். இயானால் கோரமாக தாக்கப்பட்டு மிக ஆபத்தான நிலையில் காப்பாற்றப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் படி அவன் ரத்தம் குடிக்க அதிகம் விரும்புவான் என்று தெரியவந்தது.

Image Courtesy

#2

#2

மகனே இப்படியென்றால் தந்தை?? இவனது தந்தை ஃப்ளோரியா ரிமாரு என்பவரோ 1944 ஆம் ஆண்டு சுமார் நான்கு கொலைகளை தொடர்சியாக செய்தார். இந்த சம்பவம் நிகழ்ந்து இரண்டாடுகள் கழித்து தான் 1946 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மகன் இயான் பிறக்கிறான்.

பெரும்பாலும் ரிமாரு கொன்றது புயல் காலங்களில் தான். அதிலும் வீட்டின் தரைத்தளத்தில் வசித்தவர்களாக பார்த்து தேடி கொன்றிருக்கிறான்.

#3

#3

கொலையாளிகளின் தலையில் அடித்து தலையை சிதைப்பது தான் இவனுடைய பாணி. தான் கொலை செய்யும் இடங்களில் தன்னுடைய ஷூ மற்றும் கை ரேகை போன்ற அடையாளங்களை விட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தான் ஆனாலும் அவனை கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்திருக்கிறது.

அடுத்து எங்கே யாரை கொல்வான்... இது எதற்காக நடத்தப்பட்ட கொலை? அடுத்தடுத்து கொலை நிகழுமா என்றே நிச்சயமில்லாமல் நான்கு பேர் வரை கொல்லப்பட்டுவிட்டார்கள்.

#4

#4

மகன் இயான் அப்பாவைப் பார்த்தே பல விஷயங்களை கற்றிருக்கிறான் என்று அறியப்படுகிறது. இயான் சிறு குழந்தையாக இருக்கும் போது அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அடிக்கடி சண்டை நிகழும் அதன் ஒரு பகுதியாக தன்னுடைய தந்தை தன் தாயை கடுமையாக தாக்குவதை தினமும் பார்த்திருக்கிறார் இயான்.

அது மட்டுமல்லாமல் பல முறை இயானும் தாக்கப்பட்டிருக்கிறார்.

சிறு வயதிலிருந்து அந்த கொடுமைகளை பார்த்து அனுபவித்த வளர்ந்ததும் ஓர் காரணியாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

#5

#5

ஆரம்பத்தில் தன் மீது அதிக கோபம் கொண்டவனாகவும் தன்னைத் தானே நிறைய காயப்படுத்திக் கொள்பவனாகவும் இருந்திருக்கிறான். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது ஓர் குழந்தையுடன் பாலியல் உறவு கொண்டிருக்கிறான். பதினெட்டு வயதில் திருட்டு வழக்கில் தண்டனை பெற்றிருக்கிறான்.

ஒரு பக்கம் இவனது வாழ்க்கை இப்படி ஓடிக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் கல்வியை விடாது தொடர்ந்திருக்கிறான். 1966 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வியை முடித்து விலங்குகளுக்கான மருத்துவ படிப்பை எடுத்து வெட்டினரி மெடிசன் தேந்தெடுத்து படித்திருக்கிறான்.

#6

#6

கல்லூரியில் படிக்கும் போது இவன் பிறரை விட மிக கூச்ச சுபாவம் கொண்டவனாக இருந்ததாக கல்லூரி பேராசிரியர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். உடன் படித்த மாணவர்கள், விடுதியில் உடன் தங்கியவர்கள் எல்லாரும் அவன் அதிகமாக யாருடனும் பேச மாட்டான் எப்போதும் தனியாகவே சுற்றிக் கொண்டிருப்பான் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக மருத்துவர்கள் இவனுக்கு நரம்பு தொடர்பான பிரச்சனைகளும் மூளை தொடர்பான கோளாறுகளும் இருப்பதாக உறுதி செய்திருக்கிறார்கள்.

#7

#7

1970 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு இன்னும் சில மாதங்கள் இருந்தது. அப்போதே ஆங்காங்கே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விற்பனை நடந்து கொண்டிருந்தது. இந்த கொலை சம்பவம் நிகழ்ந்தது புகாரெஸ்ட் என்ற மாவட்டத்தில். இது தான் ருமேனியாவின் தலைநகர்!

இயான் தான் வைத்திருக்கும் பையில் எப்போதும் சில கூர்மையான ஆயுதங்கள் இடம்பெற்றிருக்கும். இரும்பு கம்பி, கத்தி, கோடாரி, சுத்தியல் போன்றவை அடங்கும்.

#8

#8

இவனது கொலை பெரும்பாலும் விடியற்காலை நேரங்களில் தான் இடம்பெறும். கடுங்குளிர் இருக்கிற நாளில் வெளியிடங்களில் இயான் தன் மனித வேட்டையை முடித்திருப்பான். நகர் முழுவதும் ஆங்காங்கே கொலை விழத் துவங்கியது. கொலையாளி யாரென்று தெரியாமல் கொலைக்கான காரணம் தெரியாமலும் திணறினர்.

கொலை நடந்தது வெவ்வேறு இடங்கள் என்பதால் ஆரம்பத்தில் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி பார்க்க முடியவில்லை. முதலில் முன்விரோதம் அல்லது பணத்திற்காக கொலை நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலேயே விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்து கொலைகள் நடக்கும் போது எல்லா கொலையாளிகளிடம் இருந்து ஒற்றுமையை கொண்டு இந்த கொலைகளை நிகழ்த்துவது ஓரே ஆள் என்ற முடிவுக்கு வந்தார்கள்.

#9

#9

கிட்டத்தட்ட ஓராண்டு காலம் கொலையாளி யாரென்றே தெரியாமல் போலீசார் திணறினர். தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வந்து. இவனிடமிருந்து தப்பித்து நடைபிணமாக வாழ்ந்தவர்கள், சிகிச்சையில் இருந்தவர்கள் ஒவ்வொருவரும் இவனைப் பற்றிய சின்ன சின்ன துருப்புச் சீட்டுகளாக கொடுக்க போலீசார் அவனை வலை வீசி தேடினர்.

கிட்டத்தட்ட ஒராண்டு கால முடிவில் மே மாதம் 1971 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டான் இயான். இவனைப் பிடிக்க சுமார் 2500 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. அப்போதும் போலீசாருக்கு சந்தேகம் உண்மையில் இவன் தான் அந்த கொலையாளியா அல்லது நாம் தவறாக ஓர் நபரை கைது செய்கிறோமா என்று சந்தேகம் வரவே போலீசார் அவனை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள்.

#10

#10

இந்த மருத்துவ பரிசோதனையை சுமார் ஆறு மருத்துவர்கள் வரை மேற்கொண்டார்கள். அதில் இவனுக்கு நரம்பு கோளாறு இருக்கிறது, அடிக்கடி வலிப்பு வரக்கூடும் என்று கண்டறியப்பட்டது. இவனது ஒரே டார்கெட் பெரும்பாலும் பெண்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

அவர்கள் தனியாக இருந்தார்கள், தற்காத்துக் கொள்ள முடியாத சூழலில் இருந்தார்கள் என்பதெல்லாம் அவனுக்கு இரண்டாம் பட்சம் தான். இவனை கைது செய்த சம்பவமும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

#11

#11

ஒரு பெண்ணை கொலை செய்து அதனால் இயானுக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டி சென்றிருந்தான் இயான். சிகிச்சை முடித்து மருந்திற்காக காத்திருந்த போது போலீசார் மருத்துவரிடம் கொலையான பெண் குறித்த தகவல்களை பெற வந்திருக்கிறார்கள். அதுவரை கொலைகாரனும் அதே மருத்துவரிடம் தான் சிகிச்சை பெற்றிருக்கிறான் என்ற விவரம் தெரியாது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கைகளில் ஆணின் முடி இருப்பதை கண்டு அதை டிஎன்ஏ டெஸ்ட்டுக்காக கொடுக்கப்பட்டது. இந்நிலையில் கொலைகாரன் இந்த கொலை நிகழும் போது எப்படிப்பட்ட மனநிலையில் இருப்பார். அவருக்கு இப்படியான கோளாறுகள் இருக்கவும் வாய்ப்புள்ளது என்று கொலைகாரன் குறித்து தகவல்களை போலீசாருக்கு கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வெளியில் நின்று கொண்டிருந்த இயானை காண்பித்து அவருக்கும் இதே போன்ற கோளாறு இருக்கிறது.

சிறிய விபத்து ஏற்பட்டு சிகிச்சைக்காக இப்போது வந்திருக்கிறார். பார்ப்பவர்கள் யாராலும் அவருக்கு நரம்பு கோளாறு இருக்கிறது என்று சொல்லவே முடியாது என்று ஓர் எடுத்துக்காட்டாக காண்பித்திருக்கிறார்.

Image Courtesy

#12

#12

அந்த நோய் குறித்த மேலதிக தகவல்களை ஏதேனும் நாட்கணக்கில் மாத்திரை, ஊசி போட்டுக் கொள்ளும் வழக்கம் இருக்கிறதா? அந்த வழியில் கொலையாளியை நெருங்க முடியுமா என்ற எண்ணத்தில் வெளியில் நின்றிருந்த இயானை சுற்றி வளைக்கிறார்கள்.

போலீசார் தன்னை கண்டுபிடித்து விட்டார்களோ என்ற பதட்டத்தில் பையை அங்கேயே போட்டுவிட்டு ஓட முயற்சிக்கிறான். அடித்து பிடித்து அவனை பிடித்து இழுத்துவந்தார்கள். அதற்குள்ளாக அவன் விட்டுச் சென்ற பையை திறந்து பார்த்த போது அதில் கூர்மையான ஆயுதங்கள் ரத்தக் கறையுடன் இருந்திருக்கிறது. கோடாரியில் நீளமான முடி ஒன்றும் சிக்கியிருந்தது.

அதனை டிஎன்ஏ டெஸ்ட் செய்ததில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் டிஎன்ஏவுடன் ஒத்துப் போகவே கொலையாளி இவன் தானென்று உறுதி செய்திருக்கிறார்கள்.

Image Courtesy

#13

#13

விசாரணையில் தான் இருபது பேரைக் கொன்றதாக வாக்கு கொடுத்திருக்கிறான். அவர்களில் நான்கு பேர் மட்டுமே உயிர் பிரிந்திருக்கிறது மீதம் உள்ளவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்தார்கள். கைது செய்து சிறையில் அடைத்து முதல் ஒரு வாரம் வரை எதுவும் பேசவேயில்லையாம். மிகவும் மவுனமாகவே இருந்திருக்கிறான்.

பின்னர் மெல்ல மெல்ல பேச ஆரம்பித்திருக்கிறான். இயான் பேசுகையில், நான் செய்யும் இந்த செயலால் அந்த பெண் பாதிக்கப்படுவாள் அவள் உயிர் பிரிகிறது என்றே எனக்கு தெரியாது என்று சொல்லியிருக்கிறான்.

Image Courtesy

#14

#14

இவனால் தாக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் நேராக சந்திக்க வைத்திருக்கிறார்கள் போலீசார். உடலெங்கும் கீறல், கட்டுடன் படுக்கையில் இருந்தவர்களைப் பார்த்து பயந்து அலறியிருக்கிறான் இயான். பின் விசாரணை நடத்தப்பட்டு அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார். 1971 ஆம் ஆண்டு இயானின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த சம்பவம் நிகழ்ந்து சரியாக ஒரு வருடம் கழித்து ரயில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் இயானின் தந்தை. சிலர் தந்தை தற்கொலை செய்து கொள்ளவில்லை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றார்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Story About Brutal Serial Killers Of Father And Son

Story About Brutal Serial Killers Of Father And Son
Story first published: Monday, July 16, 2018, 18:22 [IST]
Desktop Bottom Promotion