வீரியம் தாங்காமல் கொத்து கொத்தாய் மரணித்த குழந்தைகள்! பரிசோதனை பெயரில் நடந்த அநீதி

தங்கள் நாட்டு மக்களுக்கு அரசாங்கமே நிகழ்த்திய கொடூர ஆய்வுகள். எதிர்காலத்திற்காகவும், எதிரி நாட்டினரிடமிருந்து தப்பிக்கவும் மக்களையே பரிசோதனை எலிகளாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

காலம் காலமாக சில ரகசியங்கள் விடை தெரியாமலேயே புதைந்து விடுகின்றன. உண்மையை கண்டறிய முடியவில்லை என்று ஒரு பக்கம் நாம் நினைத்துக் கொண்டிருக்க, மக்களுக்கு இந்த உண்மைகள் எல்லாம் தெரிய வேண்டிய அவசியமில்லை என்று நினைத்து பல உண்மைகளை அப்படியே புதைத்து விடுகிறார்கள்.

அப்படியான சில ரகசியங்கள் வெளியில் கசிந்தால்.... இதுவரையில் யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்று மூடி வைத்திருந்த உண்மைகள் யாவும் பகிரங்கமாக வெளியிட்டால்??

இங்கே அமெரிக்க அரசாங்கம் அந்த மக்களுக்கு தெரியாமல் அவர்களிடையே நிகழ்த்தும் சில சம்பவங்களைப் பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 #1

#1

அமெரிக்காவின் பொது மருத்துவ அமைப்பு ஒன்று 1932 முதல் 1972 வரை ஆப்ரிக்க இன ஆண்களிடத்திலிருந்து ரத்தப் பரிசோதனைக்காக ரத்தம் எடுத்துக் கொண்டார்கள். கிட்டத்தட்ட 600 ஆப்ரிக்க அமெரிக்கர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டார்கள். சைப்ளிஸ் எனப்படுகிற பால்வினை நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க இவர்களின் உடலிலிருந்து ரத்தத்தை எடுத்து அதனை சோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள்.

எந்த மருந்துகளின் உதவியின்றி பால்வினை நோய் தாக்கியவர்களால் எந்த அளவுக்கு தாக்கு பிடிக்க முடிகிறது என்பதை ஆய்வு செய்யவும் இதனை பயன்படுத்திக் கொண்டார்கள். மக்களிடத்தில் இப்படி ஓர் ஆய்வு நடத்தப்படுகிறது என்றோ யாருக்கெல்லாம் விருப்பமோ அவர்கள் பங்கேற்கலாம் என்றோ எதுவும் சொல்லப்படவில்லை மாறாக எல்லாரும் இதில் பங்கேற்க நிர்பந்திக்கப்பட்டார்கள். இது தான் விதிமுறை என்றும் சொல்லப்பட்டது.

Image Courtesy

 #2

#2

ஆறு மாதங்கள் மட்டுமே இந்த ஆய்வு நடத்தப்படுவதாக இருந்தது பின்னர் அது மெல்ல வளர்ந்தது.... அப்படி வளர்ந்தது அது எத்தனை காலங்கள் நீடித்தது தெரியுமா? சுமார் நாற்பது ஆண்டுகள் வரை இந்த கொடுமை நிகழ்ந்திருக்கிறது.

இந்த நோய்க்கு பென்சிலின் தான் மருந்து அதை பயன்படுத்துங்கள் என்று மக்களிடையே அறிமுகப்படுத்த ஆரம்பித்த காலத்தில் கூட இந்த ஆப்ரிக்க அமெரிக்க மக்களுக்கு பென்சிலின் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை தொடர்ந்து அவர்கள் அந்த ஆய்வில் தொடரவே நிர்பந்திக்கப்பட்டார்கள்.

அதோடு நீங்கள் பென்சில் பயன்படுத்தவில்லை என்றால் இலவச மருத்துவ பரிசோதனை வழங்குவோம், நீங்கள் இறந்தவுடன் உங்களது இறுதிக் காரியங்களை நாங்களே ஏற்றுக் கொள்கிறோம் உங்களுக்கு அந்த செலவு கூட மிச்சம் என்று மூளைச் சலவை செய்தார்கள்.

இந்த நோய் தாக்கிய ஆண்களிடமிருந்து பெண்களுக்கும், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் இதே நோயுடன் பிறந்தன. ஆக இந்த நோய் பரவக்கூடியது என்று மருத்துவர்கள் உறுதி செய்தார்கள்.

1932களில் நடத்தப்பட்ட இந்த கொடூரத்திற்கு 2010 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா பகிரங்க மன்னிப்பு கோரினார்.

Image Courtesy

#3

#3

மலேரியாவிற்கான ஆய்வு அமெரிக்க அரசாங்கத்தால் 1940களில் இல்லினாய்ஸ் என்னுமிடத்தில் அமைந்திருக்கும் ஸ்டேட்வைல் பெனிடென்டியரி என்ற சிறையில் சிறைக்கைதிகளிடத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இங்கு அடைக்கப்பட்டிருந்த சுமார் நானூறுக்கும் மேற்பட்ட கைதிகளிடம் மலேரியா வைரஸ் செலுத்தி அவர்களை தங்கள் ஆய்வுக்கு பயன்படுத்திக் கொண்டார்கள். அறிகுறிகள், நோயின் தீவிரம் அதற்கான மருந்துகள் குறித்தெல்லாம் ஒவ்வொன்றாக ஆய்வு செய்யப்பட்டது., இது மக்களுக்காக அவர்களின் உயிரைக் காக்க நடத்தப்படுகிற ஆய்வு தண்டைக் கைதியாக இருப்பவர்களிடத்தில் தானே ஆய்வு நடத்துகிறோம் என்று நியாயம் கற்பித்தார்கள்.

Image Courtesy

#4

#4

எட்வர்ட் கோஹன் என்ற உயிர்வேதியியலாளர் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். இவர் 1942 ஆம் ஆண்டு அமெரிக்க கப்பற்படையினருக்காக ஓர் ஆய்வினை மேற்கொண்டார். அமெரிக்க கப்பற்படையினர் இந்த டாஸ்கை ரகசியமாக முடிக்கும்படி எட்வர்ட்டிடம் கூறியிருந்தார்கள்.

அதாவது பயாலாஜிக்கில் முறையிலான ஆயுதத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்பது தான் டாஸ்க். அதற்காக எட்வர்ட் சிறைகைதிகளின் உடலில் மாட்டின் ரத்தத்தை ஏற்றி சோதித்தார், இது தவிர சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட கெமிக்கல்கள் ரத்தத்தில் ஏற்றி சோதிக்கப்பட்டது. எதை ஏற்றினால் மரணம் ஏற்படுகிறது என்பதற்கான ஆய்வு அது.

Image Courtesy

#5

#5

இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அணு குண்டு உருவாக்க ஐக்கிய அமெரிக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தான் மான்ஹாட்டன் திட்டம். இந்த அணுகுண்டு வீசப்பட்டால் அதன் தாக்கம் எந்தளவிற்கு இருக்கும் பாதிப்பு எத்தகையதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அந்த அணுகுண்டில் அதிகளவு பயன்படுத்தப்பட்ட ரேடியோஆக்டிவ் துகள்களில் ஒன்று ப்ளூட்டோனியம். அதனால் ப்ளூட்டோனியம் அதிகளவு உடலில் சேர்ந்தால் என்ன நடக்கிறது அதற்கு ஏதேனும் மருந்து இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய மக்களின் உடலில் ஊசி மூலமாக ப்ளூட்டோனியம் ஏற்றப்பட்டது.

Image Courtesy

#6

#6

ஏற்றப்பட்ட சில நாட்களுக்குள்ளாகவே மக்கள் கடுமையாக உடல்நலக்குறைவினால் கோமா நிலைக்குச் செல்வது அல்லது இறந்துவிடுவது தொடர்ந்தது. இதனால் மருந்தின் தாக்கம் குறித்தோ அல்லது அவர்களுக்கு தேவையான எந்த விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடியவில்லை.

இரண்டாம் உலகப்போர் துவங்கும் வரை தங்களிடம் அணுகுண்டு இருப்பது ரகசியமாக இருக்க வேண்டும் என்று நினைத்ததினால் மக்களிடையே இப்படியானதொரு ஆய்வு நடத்தப்படுகிறது என்று எந்த தகவலும் கூறப்படவில்லை.

ப்ளூட்டோனியம் ஏற்றப்பட்டவுடன் சில காலம் தாக்குபிடித்தவர்களும் உண்டு... அவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அவர்களையாவது காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அறிகுறிகள் எப்படி தெரிகிறது இதன் தீவிரம் எப்படியிருக்கும் என்று அறிந்து கொள்ள விரும்பி எந்த சிகிச்சையும் வழங்கப்படவில்லை.

Image Courtesy

 #7

#7

இதே இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் நிகழ்த்தப்பட்ட இன்னொரு கொடூரம் இது. எதிரியை தோற்கடிக்க விரும்பி தன்னை பலப்படுத்திக் கொள்ள நினைத்த அமெரிக்கா, தன் படை வீரர்களிடையே பல ஆய்வுகளை நடத்தியது.

போர்களத்தில் போர்வீரர்களுக்கு போது உணவு,உடை,போன்றவற்றில் எப்படியெல்லாம் சிக்கல்கள் வரும் என்று முன்கூட்டியே அறிய இந்த ஆய்வுகள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. கிட்டத்தட்ட அறுபதாயிரம் பேர் வரை இந்த ஆய்வுக்கு ஈடுபடுத்தப்பட்டார்கள். அமெரிக்க படையில் இருந்த ஜப்பானிய வீரர்கள்,ஆப்ரிக்கா அமெரிக்க வீரர்கள் அவர்களின் நிறம் அடிப்படையில் ஏதேனும் மாற்றம் நிகழ்கிறதா என்று அறிய அவர்கள் அதிகளவு பயன்படுத்தப்பட்டனர்.

Image Courtesy

#8

#8

விஷப்புகை பரவும் போது குறிப்பிட்ட துணி வகை அல்லது மாஸ்க் வீரர்களை காப்பாற்றுகிறதா என்று ஆய்வு செய்ய ஒரு திறந்த வெளியில் வீரர்களை குழுமச் செய்து விஷப்புகை கசியவிட்டார்கள். இதிலிருந்து யார் யார் தப்பித்தார்கள், விஷப்புகை சுவாசித்து எவ்வளவு நிமிடங்களில் மரணம் நிகழ்கிறது என ஆய்வு செய்தார்கள்.

அதே நேரத்தில் அங்கிருந்த விலங்கு,உணவுப்பொருட்கள், தண்ணீரில் எல்லாம் அதன் தாக்கம் இருக்கிறதா என்றும் பரிசோதிக்கப்பட்டது, அதே நேரத்தில் விஷப்புகை பரவும் போது எந்த விதமான தற்காப்பு உடை மற்றும் மாஸ்க் இல்லாதவர்கள் இருந்தால் என்ன நடக்கும் என்று அறிய வீரர்கள் எந்த பாதுகாப்பு உடை இல்லாமலும் நிறுத்தப்பட்டார்கள்.

விஷப்புகை கசிய விடப்படும் நேரம் முதற்கொண்டு இதில் ஆய்வு செய்யப்பட்டது.

Image Courtesy

#9

#9

செப்டம்பர் மாதம் 1950 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவம் மேற்கு கடற்கரை பகுதியில் பயோலாஜிக்கல் வார் நடத்த திட்டமிட்டார்கள். பாக்டீரியாக்கள் மக்களிடையே செலுத்தப்பட்ட அவை எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று சோதிக்கப்பட்டது. இது குறித்தான எந்த அறிவிப்போ தகவலோ முன்கூட்டி சொல்லப்படவில்லை.

இதனை ஆப்ரேசன் சீ ஸ்ப்ரே என்று அழைத்தார்கள். சேன் ஃபிரான்சிஸ்கோவில் கிட்டத்தட்ட ஆறு முறை இது போன்ற பயாலாஜிக்கல் வார் ஆய்வு மேற்கொண்டார்கள், இதில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டார்கள்.

Image Courtesy

#10

#10

1955 ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கம் ஒரு ஆய்வுக்காக மக்கள் வாழும் பகுதியில் ஏடெஸ் அஜெப்டி என்ற கொசுவை பரவ விட்டார்கள். யெல்லோ ஃபீவருக்கு இந்த வகை கொசுக்கள் தான் காரணம் என்று சொல்லப்பட்டது.

அந்த கொசு எவ்வளவு வேகமாக மக்களை தாக்குகிறது, அதன் வீரியம் எவ்வளவு நாட்களில் தெரிகிறது உண்மையிலேயே வைரஸ் காய்ச்சல் பரவ இந்த கொசுக்கள் தான் காரணமா என்று அறிய ஜியார்ஜியாவில் உள்ள பூங்காக்களில் இந்த கொசுவை பரவச் செய்தார்கள்.

Image Courtesy

#11

#11

ஹெபடைட்டிஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் வகையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 1956 முதல் 1970 வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு குழந்தைகளிடத்தில் நடத்தப்பட்டது என்பது தான் கொடுமை. நியூயார்க்கில் இருக்கும் ஸ்டேட் ஐலேண்டில் அமைந்திருக்கும் வில்லோப்ரோக் என்ற மாநிலப் பள்ளியில் தான் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

மாணவர்களிடத்தில் பல்வேறு மருந்துகள் ஊசி மூலமாக செலுத்தப்பட்டது. மருந்தின் வீரியத்தால் ஏராளமான குழந்தைகள் இறந்தார்கள். சில குழந்தைகளுக்கு வேண்டுமென்றே நோயை உருவாக்கி ஆரம்ப நிலையில் மருந்து எடுத்துக் கொண்டால் என்ன விளைவு ? நோய் முற்றிய நிலையில் மருந்து எடுத்துக் கொண்டால் எத்தனை நாட்களில் சரியாகிறது அல்லது வேறு ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Image Courtesy

#12

#12

மீசல்ஸ் என்ற நோய் தடுப்பு மருந்துக்கான ஆய்வு 1990 மற்றும் 1991 ஆண்டுகளில் நடத்தப்பட்டது. குழந்தைகளிடத்தில் இயற்கையாகவே அந்த நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறதா என்று ஆய்வு செய்து ஏராளமான பச்சிளம் குழந்தைகளுக்கு இந்த மருந்து செலுத்தபப்ட்டது.

இது குழந்தைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகளை உண்டாக்கியது. அது தவிர பல குழந்தைகள் மருந்தின் வீரியத்தால் உயிரிழந்தார்கள்.எவ்வளவு குழந்தைகள் இறந்தார்கள் என்பதற்கான சரியான கணக்கு கூட இல்லை.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, July 18, 2018, 14:04 [IST]
Desktop Bottom Promotion