Latest Updates
-
குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
இந்தியாவின் லண்டன் என்று அழைக்கப்படும் அழகிய நகரம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கோங்குரா முட்டை குழம்பு ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - ஹோடடலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
Aadi Perukku 2026: ஆடிப் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? ஆடிப் பெருக்கின் வரலாறும், முக்கியத்துவமும் -
கோலாப்பூரி மட்டன் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
செவ்வாய் இன்று மிதுன ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
சன்டே ஸ்பெஷல் செட்டிநாடு ஸ்டைல் மட்டன் உப்புக்கறி - எப்படி செய்றதுன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 02 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப டென்ஷன் நிறைந்த நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (02 August 2026-08 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது!
ரயில் நிலையத்தில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி! (வீடியோ)
ரயில் நிலையத்தில் வைத்து பொதுமக்கள் முன்னிலையில் ஒரு பெண்ணை பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்ட போலீஸ் அதிகாரியை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பழைய பஞ்சாகங்கத்தையே பாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று பெண்கள் பலரும் பல துறைகளில் முன்னேறி சென்று கொண்டிருக்கிறார்கள் என்று வெளியலகத்தை பார்த்து பேசுபவர்களுக்கு இந்த கதை நிச்சயமாக தக்க பாடத்தை கொடுத்திடும்.
இன்னமும் பெண்கள் பல இடங்களில் பாலியல் அத்துமீறல்களை சந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அது அலுவலகவோ, அல்லது பொதுமக்கள் கூடும் இடமோ அது கோவிலாக கூட இருக்கலாம் உனக்கு முன்னால் ஒரு பெண் இருந்தால் அவளைச் சீண்டு, பாலியல் வன்முறையில் ஈடுபடு என்று ஆண்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்களோ தெரியவில்லை. அவள் இரண்டு வயது குழந்தையாக இருந்தாலென்ன, பள்ளி செல்லும் வயதில் இருந்தாலென்ன, கிழவியாய் இருந்தாலென்ன அவள் ஒரு பெண் அவ்வளவு தான்.

#1
சொன்னால் உன் மானம் போய்டும் என்று சொல்லி வைப்பதால் தான் பெண்கள் தனக்கு எதிராக நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை பற்றி வாய்திறந்து பேசவே பயப்படுகிறார்கள். அவ என்ன பண்ணாலோ எப்டி போனாலோ அதான் அவனுக்கு டெம்ப்ட் ஆகிடுச்சு என்று சொல்ல அசிங்கமாக இல்லையா?
சுயக்கட்டுப்பாடு, சுய ஒழுக்கம் எல்லாம் பெண்களுக்கு மட்டும் தானா?

#2
யாரென்றே தெரியாத ஒரு நபர், பொது இடத்தில் நம்மை ஈவ் டீசிங் செய்கிறார் என்றால் தைரியமாக போலீசில் புகார் கொடு என்று சொல்கிறோம். எனக்கு இந்தப் பிரச்சனை நடந்திருக்கிறது என்று வெளியில் சொல்வதே மிகப்பெரிய வெற்றியாக பார்க்கிறோம். அந்தப் பிரச்சனைக்கு தீர்வு கிடைப்பது எல்லாம் இரண்டாம் பட்சம் ஆனால் தைரியமாக வெளியில் சொல்லிவிட்டாள் என்பதே பெரிய வெற்றியாகத்தான் பார்க்கப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தை பற்றி அறிந்தால் போலீசிடம் கூட இனி ஜாக்கிறதையாக இருக்க வேண்டும் போல...

#3
நமக்கு இருக்கும் பழக்கங்களில் ஒன்று, படித்தவர் அல்லது பண பலமோ ஆள் பலமோ இருப்பவர் என்று தெரிந்து கொண்டால் அவர் நம்மீது செலுத்துகிற வன்முறைகளை எல்லாம் பொறுத்துக் கொள்வோம். அவங்க கிட்ட எல்லாம் நம்ம பேசி ஜெயிக்க முடியாது என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொண்டு பொறுமையுடன் இருப்பது தான் புத்திசாலித்தனம் என்று தேற்றிக் கொள்ளும் மனிதர்கள் கண்டிப்பாக இந்த கதையை முழுவதுமாக படிக்க வேண்டும்.

#4
இந்த சம்பவம் ஜூன் 19 ஆம் தேதி இரவு மும்பையில் உள்ள கல்யாண் என்ற ரயில் நிலையத்தில் நடந்திருக்கிறது. இது எதுவும் ஏதோ ஆள் நடமாட்டமே இல்லாத ரயில் நிலையம் கிடையாது. அதோடு ஒதுக்குப்புறமான பகுதியிலும் இந்த சம்பவம் நடைபெறவில்லை.
மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையக்கூடிய முக்கியமான வழித்தடங்களில் கல்யாண் மிக முக்கியமானது. இந்தியாவில் நான்காவது அதிக ஜனக்கூட்டம் இருக்கிற ரயில் நிலையம் இது.

#5
எட்டு பிளாட்ஃபார்ம் இருக்கிற இந்த ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் டிரைன், மற்றும் லோக்கல் ட்ரைன் ஆகியவை வருகிறது. அவ்வளவு கூட்டம் இருக்கும் போது ஒரு தாயும் மகளும் கல்யாண் ரயில் நிலையத்திற்கு வருகிறார்கள். அங்கிருந்து லோக்கல் டிரைன் பிடித்து செல்ல வேண்டியதாய் அவர்களது திட்டம்.
வந்திருந்த பெண் கையில் கைக்குழந்தை வைத்திருந்தமையால் காத்திருப்போருக்கு அமைக்கப்பட்டிருந்த சேரில் உட்கார்ந்திருந்த ஒரு நபர் எழுந்து இடம் கொடுக்கிறார். அந்த பெண்ணும் குழந்தையுடன் சேரில் உட்கார்ந்து கொண்டார்.

#6
சிறிது நேரம் கழித்து அவருடன் வந்திருந்த அந்த பெண்ணின் தாய்க்கும் இடம் கிடைத்தது. சேர் மாற்றி உட்காரும் போது குழந்தையுடன் உட்கார்ந்திருந்த பெண்ணுக்கு அருகில் போலீஸ் அதிகாரி ஒருவர் வந்து உட்கார்ந்தார்.
போலீஸ் உடையில் கையில் பெரிய பையுடன் டிரைனுக்காக காத்திருந்தார்.

#7
முதல் ஐந்து நிமிடம் ஆட்கள் வருவதும் போவதுமாய் பயங்கர பிஸியாக அந்த ரயில் நிலையம் இருந்திருக்கிறது. குழந்தையை சமாதானப்படுத்திக் கொண்டே அந்த பெண் உட்கார்ந்து குழந்தைக்கு வேடிக்கை காண்பித்துக் கொண்டிருந்தார்.
திடீரென்று குழந்தை வீரிட்டு அழ ஆரம்பிக்கிறது. தாய்ப்பால் கொடுக்க வேண்டும் , இப்போது அந்த பெண் அவ்வளவு கூட்டத்திற்கு மத்தியில் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க, சேரில் உட்கார்ந்த படியே இந்தப்பக்கம் திரும்பி குழந்தைக்கு பால் கொடு என்று சொல்லி அவரின் தாய் சொல்கிறார்.

#8
அந்த பெண்ணும் தாயின் பக்கமாக திரும்பி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து குழந்தையை தூங்க வைக்கிறார். அதன் பிறகு தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. சேரின் மீது கை வைத்திருப்பது போல உட்கார்ந்திருந்த அந்த போலீஸ் அதிகாரி மெல்ல அந்த பெண்ணின் முதுகில் கை வைக்கிறார்.
ஆரம்பத்தில் தெரியாமல் கவனக்குறைவாக பட்டிருக்கும் என்று நினைத்து அந்தப் பெண் அமைதியாக இருந்திருக்கிறார்.

#9
ஓயாமல் அவர் கை என் மீது படுகிறது அப்படியென்றால் இது வேண்டுமென்றே வைக்கிறார் என்பதை யூகித்துக் கொண்ட அந்த பெண் சற்று தள்ளி உட்காருவது போல நெளிகிறார். இதற்கிடையில் தாய்க்கு போன் வந்துவிட அவர் போனில் பேசிக் கொண்டேயிருக்கிறார்.
மடியில் குழந்தையுடன் உட்கார்ந்திருக்கும் பெண் தாயிடமும் சொல்ல முடியாமல் போலீஸ் அதிகாரியிடமும் சொல்ல முடியாமல் நெளிந்து கொண்டேயிருந்தார்.

#10
ஒரு கட்டத்தில் அவன் கை வைக்கிறான் என்று தாயிடம் சொல்ல அருகிலிருந்தவர்கள் பார்த்து விட்டார்கள் உடனேயே பொதுமக்கள் கூடி அவனுக்கு தர்ம அடி கொடுக்க அங்கிருந்து தப்பித்துச் சென்றிருக்கிறான்.
இந்த அத்தனை களேபரங்களையும் அங்கிருந்த ஒரு பயணி தன்னுடைய மொபைல் மூலமாக வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார்.
வீடியோவைக் காண க்ளிக் செய்யவும்



Click it and Unblock the Notifications