‘சஞ்சு’ திரைப்படத்தில் காட்டப்படாத சஞ்செய் தத்தின் சில ரகசியங்கள்!

சஞ்செய் தத் பற்றிய வாழ்க்கை வரலாறு படமாக வந்திருக்கும் சஞ்சு திரைப்படத்தில் உண்மையை மறைத்த சில நிகழ்வுகள்

கோலிவுட்டில் கடந்த மாத இறுதியில் வெளியாக சக்கைபோட்டு போட்டுக் கொண்டிருக்கிறது சஞ்சு திரைப்படம். பாலிவுட் உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த சஞ்செய் தத் பற்றிய வாழ்க்கை வரலாற்று கதையாக வெளிந்த அந்த படம் பற்றிய பல செய்திகள் தொடர்ந்து வலம் வந்து கொண்டேயிருக்கின்றன.

சஞ்சு திரைப்படத்தில் உண்மையில் சஞ்செய் தத் பற்றிய முழுமையான விவரங்கள் சொல்லப்பட்டதா என்ற கேள்வியும் ஒரு பக்கம் எழுப்பப்படுகிறது. இதில் சஞ்செய் தத் பற்றிய பல விஷயங்கள் மறைக்கப்பட்டிருக்கிறது என்றும் ஒரு பக்கம் புகார் வாசிக்கிறார்கள். உண்மையில் சஞ்சு திரைப்படத்தில் அப்படி என்ன தான் மறைத்திருக்கிறார்கள் என்பது குறித்து ஒர் பார்வை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

சஞ்சு திரைப்படத்தில் அவர் நட்புக்காக ஏங்கினார். அவருடன் ஒரே நண்பனாக பழகிய கமலேஷுக்கு மிகவும் உண்மையாக இருந்தார் அவருக்கு எந்த தொந்தரவும் கொடுக்க விரும்பவில்லை என்பது போன்று காட்டப்பட்டிருந்தது.

ஆனால் உண்மை அப்படியில்லை. சஞ்செய் தத் தன்னுடன் இருந்த பல நண்பர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தி இக்கட்டான சூழலை உருவாக்கியிருக்கிறார் .

 #2

#2

சஞ்செய் தத்தின் நண்பரான அஜய் மார்வா என்பவர் ஒரு தியேட்டரின் உரிமையாளர். 1993 ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது அஜயிடம் 9mm பிஸ்டலை கொடுத்திருக்கிறார்.

இதனால் TADA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று இறுதியில் விடுதலையானார். அதே போல சஞ்செய் தத்தின் இன்னொரு நண்பரான யூசஃப் நல்வாலா ஐந்தாண்டு சிறைத்தண்டனை பெற்றார்.

Image Courtesy

#3

#3

யூசஃப் சிறைத் தண்டனை பெற்றதற்கு ஒரே காரணம் சஞ்செய் தத் நண்பராக இருந்ததும் அவரின் பேச்சைக்கேட்டு அவருக்கு உதவி செய்ய நினைத்ததும் தான் காரணம்.

சஞ்செய் தத் சொன்னபடி அவரின் வீட்டிலிருந்த ஏகே-56 ரக துப்பாக்கியை எடுத்து அதனை அப்புறப்படுத்த முயன்றிருக்கிறார். இதனால் போலீசில் சிக்கிய யூசஃப் ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்றார்.

Image Courtesy

#4

#4

திரைப்படத்தில் சஞ்செய் தத்துக்கு பெயில் கிடைத்ததாக போகிற போக்கில் ஒரு காட்சியாக காட்டப்படுகிறது ஆனால் அது எப்படி கிடைத்தது என்று காண்பிக்கப்படவில்லை.

உண்மையில் அவ்வளவு எளிதாக சஞ்செய் தத்துக்கு பெயில் கிடைத்துவிடவில்லை. சஞ்செய் தத்தின் தந்தை சுனில் தஹ் மற்றும் ஒரு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அரசியல்வாதி இருவரும் சேர்ந்து ஷிவ் சேனா கட்சித் தலைவரான பால் தாக்ரேவை சந்தித்து பேசியிருக்கிறார்கள்.

 #5

#5

அப்போது மஹாராஸ்டிரா மாநிலத்தை ஷிவ் சேனா மற்றும் பிஜேபி கூட்டணி ஆட்சி செய்து கொண்டிருந்தது. அந்த ஆட்சியில் பால் தாக்ரேயின் கை தான் ஓங்கியிருந்தது. அவர் சஞ்செய் தத் விஷயத்தில் தலையிட்டு அவர் மூலமாகவே சஞ்செய் தத்துக்கு பெயில் கிடைத்தது.

பெயிலில் வெளியில் வந்ததும் முதல் வேலையாக பால் தாக்ரேவை சந்தித்து நன்றி கூறினார் சஞ்செய் தத். மகனை பெயிலில் எடுக்க வேண்டுமென்றால் சுனில் தத் லோக் சபா தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று கேட்டிருந்தார் பால் தாக்ரே .அதே போல தந்தை சுனில் தத்தும் தேர்தலில் போட்டியிடவில்லை.

 #6

#6

சஞ்சு திரைப்படத்தில் ஒரு பத்திரிக்கையின் எடிட்டர் சஞ்செய் தத்துக்கும் ஒரு கேங்கஸ்டருக்கும் இருக்கிற தொடர்புகள் குறித்து அதாவது இருவருக்கும் இடையில் நடந்த போன் உரையாடலை சுனில் தத்திடம் கேட்க வைக்கிறார். அதன் பின்னர் சஞ்செய் தத் கணபதி பூஜையில் பங்கேற்க வேண்டும் என்று ஹிந்து ஆதரவாளர்கள் மிரட்டி சம்மதிக்க வைப்பதாக காட்சி இருக்கும்.

ஆனால் உண்மையில் சஞ்செய் தத் கராச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கிய சோட்டா சாகீல் என்பவருடன் தொடர்பில் இருந்தார். இந்த தொடர்பு சஞ்செய் தத் பெயிலில் வந்த போதும் நீடித்தது.

 #7

#7

2002 ஆம் ஆண்டு மும்பை போலீஸ் சோட்டா சாகீலுக்கும் சஞ்செய் தத்துக்கும் இடையில் நடந்த போன் உரையாடலை பதிவு செய்தனர். அதில் அவர் சினிமா குறித்த தகவல்கள் ஷூட்டிங் நேரத்தில் நேர்ந்த பிரச்சனைகள் குறித்து தான் பேசியதாக சொல்லப்பட்டது.

சினிமாவிற்கு சற்றும் தொடர்பில்லாத அதுவும் ஒரு கேங்கஸ்டரிடம் பேச வேண்டிய அவசியம் என்ன அதுவும் ஷூட்டிங் குறித்தும் அப்போது நடக்கிற சின்ன சின்ன பிரச்சனைகள் குறித்தும் சோட்டா சாகிலிடம் விவாதிக்க வேண்டிய அவசியமென்ன?

#8

#8

கோர்ட் இந்த சாக்கு போக்குகளை எல்லாம் ஏற்றுக் கொள்ளாமல் தீவிரவாதியான சோட்டா சாகிலுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறி மீண்டும் கைது செய்தது.

இந்த விஷயம் செய்திகளில் கசிந்து பெரும் பரபரப்பு உண்டானது. தீவிரவாதியுடன் சஞ்செய் தத்துக்கு தொடர்பா என்று ஏகப்பட்ட விவாதங்கள். நிலைமை பொதுமக்களிடம் சென்று விட்டதால் மேற்கொண்டு தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கையை விரித்துவிட்டிருக்கிறார் பால் தாக்ரே.

#9

#9

சஞ்சு திரைப்படத்தில் சஞ்செய் தத் எப்போதும் ஒருவித பயத்துடன் இருப்பவராகவே காட்டப்பட்டார். குறிப்பாக அண்டர் வேர்ல்டு தொடர்பு என்று வரும் போது ஒரு வித பயத்துடன் தான் அவர்களை அணுகியதாக காட்டப்படுகிறது.

ஆனால் உண்மை அப்படியிருக்கவில்லை. பாலிவுட்டின் அஞ்சா நெஞ்சராக சஞ்செய் தத் இருந்தார்.

அதோடு ஒரு பேட்டியின் போது சோட்டா சாகிலுக்காக தான் ஒரு டீ ஷர்ட் வாங்கியதாகவும் சஞ்செய் தத் குறிப்பிட்டிருக்கிறார்.

#10

#10

சஞ்சு திரைப்படத்தில் சஞ்செய் தத் மான்யதா தத்தை திருமணம் செய்து கொண்டதாக காட்டப்படும். ஆனால் ரிச்சாவை கடைசி நேரத்தில் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போதைக்கு அடிமையானதாக காட்டப்படும்.

ஆனால் உண்மையில், சஞ்செய் தத் 1987 ஆம் ஆண்டு ரிச்சா ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ட்ரிஷாலா என்ற மகள் இருக்கிறாள். அதன் பிறகு மாடல் அழகி ரியா பிள்ளையுடன் நீண்ட காலம் உறவில் இருந்தார். ஒரு கோவிலில் வைத்து ரியா பிள்ளையை திருமணம் செய்து கொண்டார் சஞ்செய் தத். சஞ்செய் தத் முதன் முதலாக ஜெயிலுக்கு சென்ற போது அவருக்கு துணையாக நின்றவர் ரியா பிள்ளை.

#11

#11

திரைப்படத்தில் தன்னுடைய குடும்பத்தை மிகவும் நேசித்தவராகவும் அதோடு தன் தங்கைகளின் மேல் தீவிர அன்பு கொண்டவராகவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் உண்மையில் சஞ்செய் தத் எப்படி தெரியுமா? 2005 ஆம் ஆண்டு சஞ்செய் தத்தின் தந்தை சுனில் தத் காலமானார். அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு ஒரு முறை மீடியாவிடம் பேசிய சஞ்செய் தத், தத் குடும்பத்தின் ஒரே வாரிசு நானும் மான்யதாவும் தான் என்றார். இவரது தங்கை ப்ரியா தத் ஓவன் ரொன்கோன் என்பவரை 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பிறகும் தன் பெயரை ப்ரியா தத் என்றே தொடர்ந்தார். கணவரின் பெயரை இணைத்துக் கொள்ளவில்லை.

#12

#12

மான்யதாவை தன் வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுத்ததில் கூட தங்கைகளுக்கு விருப்பமில்லை. மும்பையின் காங்கிரஸ் எம்.பி யாக இருந்த ப்ரியா தத் மற்றும் சஞ்செய் தத் இடையிலான உறவு மேலும் மோசமடைந்ததற்கு இன்னொரு மிக முக்கியமான காரணம் தந்தை இறந்த அதே ஆண்டு அதாவது 2009 ஆம் ஆண்டு சஞ்செய் தத் சமாஜ்வாதி கட்சி இணைந்தது தான்.

அப்பா உயிருடன் இருந்தவரை சமாஜ்வாதி கட்சியில் இணைய விரும்பியதில்லை. அவர் இறந்த பிறகு அவரின் ஒரே வாரிசு என்று சொல்லிக் கொள்ளும் சஞ்செய் அந்தக் கட்சியில் இணைந்திருக்கிறார். இது போன்ற இழிவான செயலை பார்பதற்குள்ளாக அப்பா நல்ல வேலையாக கண்ணை மூடினார் என்றிருக்கிறார் ப்ரியா தத்.

#13

#13

சஞ்செய் தத்தின் நீண்ட சிறை வாசத்திற்கு பின்னர் தான் அண்ணன் தங்கை உறவுக்கு இடையில் சற்றே நல்லபடியான முன்னேற்றம் நடந்திருக்கிறது. அதோடு மான்யதா மீதும் நல்ல அபிப்ராயம் ஏற்பட்டிருக்கிறது.

திரைப்படத்தில் சுனில் தத் நர்கீஸ் என்ற முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்று மும்பையைச் சேர்ந்த ஒரு கேங்கஸ்டர் மிரட்டியதாக காட்டப்படும்.

 #14

#14

திரைப்படத்தில் காட்டப்படுகிற கேங்கஸ்டர் ஹாஜி மஸ்தான் மிர்சா என்பவராக இருக்கக்கூடும். நிஜத்தில் இவர் கேங்கஸ்டராக இருந்து பின்னர் அரசியல்வாதியாக உருவெடுத்தார்.

நர்கீஸ் 1950களில் ஹிந்துவான ராஜ் கப்பூருடன் உறவில் இருந்தார். ஆனால் அப்போது எந்த பிரச்சனையும் எழவில்லை. சுனில் தத் விஷயத்தில் மட்டும் எப்படி தடை எழுப்பியிருக்க முடியும்? அதைவிட 1958 ஆம் ஆண்டு சுனில் தத் நர்கீஸை திருமணம் செய்து கொண்டார். அந்த நேரத்தில் மும்பையின் நிழல் உலகம் அவ்வளவாக வலுப்பெறவில்லை.

#15

#15

இவை விட மிக முக்கியமான ஒரு சம்பவம் இருக்கிறது. ஹாஜி மஸ்தான் சுந்தர் சேகர் என்ற ஹிந்து பையனை தத்தெடுத்து மகனாக வளர்த்தார். கடைசி காலத்தில் அகில இந்திய தலித் முஸ்லிம் சுரக்‌ஷா மஹாசங் என்ற கட்சியை துவக்கி நடத்தினார்.

மூஸ்லிம்களின் மேல் தீவிர பற்றுக் கொண்டிருந்தவராக இருந்தால் ஏன் ஓர் ஹிந்து மகனை தத்தெடுக்க வேண்டும்? தான் ஆரம்பிக்கும் கட்சியில் ஏன் தலீத் மக்களை சேர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion