For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டாப் 10: நீங்கள் அறியாத அதிசயிக்க வைக்கும் அறிவியல் உண்மைகள்!

டாப் 10: நீங்கள் அறியாத அதிசயிக்க வைக்கும் அறிவியல் உண்மைகள்!

By Staff
|

அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் நாம் அறிந்ததும், கண்டுப் பிடித்ததும் கைய்யளவு தான் எனிலும். அதில் நாம் பள்ளி, கல்லூரிகளில் கற்று அறிந்தது நகக்கண் அளவு தான்.

உலகறிந்த கைய்யளவு அறிவியல் உண்மைகளில் சிலவன ஆபாயத்தை கண்டுபிடித்திருக்கும், சிலவன மனித குலத்தை காத்திருக்கும். வியப்பை ஏற்படுத்திய கண்டுபிடிப்புகளும் உண்டு, கோபத்தை வரவழைத்த கண்டுபிடிப்புகளும் உண்டு.

இந்த பெரும் பட்டியலில் நாம் சற்றும் எதிர்ப்பார்த்திடாத வகையில் அமைந்த அறிவியல் உண்மைகளும் சிலவன இருக்கின்றன. இதை சிலர் வேடிக்கையாக எடுத்துக் கொள்ளலாம். சில உண்மைகள் இப்படியுமா நடக்கும் என உங்களை ஆச்சரியத்திலும் ஆழ்த்தலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விலங்குகள் மழையே!

விலங்குகள் மழையே!

மீன் மழை, தவளை மழை பற்றி நீங்கள் அறிந்ததுண்டா? இது ஒரு விண்வெளிசார் நிகழ்வு. இப்படி சில மழை உலகின் பல நாடுகளில் நிகழ்ந்துள்ளதாக பதிவாகியுள்ளன. பலதரப்பட்ட மக்கள் இப்படிப்பட்ட மக்களை கண்டுள்ளதாகவும் கருத்துகள் பதிவு செய்துள்ளனர். மீன், தவளை என்று மட்டுமின்றி, சில சமயங்களில் பறவை மழை கண்டுள்ளதாகவும் நிகழ்வுகள் வரலாற்றில் பதிவாகி உள்ளன.

செர்பியா - தவளை மழை 2005

லண்டன் - தவளை மழை - 1998

இந்தியா - மீன் மழை - 2006

வேல்ஸ் - மீன் மழை - 2004

பிணத்திற்கும் விறைப்பு?

பிணத்திற்கும் விறைப்பு?

இதை டெத் எரக்ஷன் என்கிறார்கள். சில சமயங்களில் இதை Angle Lust என்றும் குறிப்பிடுவதுண்டு. இறந்த ஆண் உடல்களை போஸ்ட் மார்டம் செய்யும் போது இந்த நிகழ்வுகளை கண்டுள்ளதாக பலர் கூறுகிறார்கள். செங்குத்து நிலையில் இருந்தவாறு இறந்திருந்தால் இது நடக்க வாய்ப்பு இருக்கிறதாம். இதயம் தான் உடல் முழுக்க இரத்த ஓட்டம் சீராக செல்ல உதவுகிறது.

உயிர் இழந்த பிறகு, இது நின்று போவதால், புவி ஈர்ப்பு சக்தியை பொருத்து உடலில் இருக்கும் இரத்தம் உடலின் ஒரு பகுதியில் அதிகம் தேங்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். ஒருவேளை கீழ் உடல் பகுதியில் அதிக இரத்த ஓட்டம் செல்லும் பட்சத்தில் இப்படி டெத் எரக்ஷன் நிகழ வாய்ப்பிருக்கிறது.

Image Credit: nevsepic

உணர்வுகள்!

உணர்வுகள்!

நமது பள்ளிகளில் பார்த்தல், தொடுதல், நுகர்தல், சுவைத்தல் மற்றும் சப்தம் கேட்பது போன்ற உணர்வு மனிதர்கள் கொண்டிருப்பதாக கற்பித்துள்ளனர். ஆனால், நரம்பியலாளர்கள் சிலர் ஒன்பது உணர்வுகள் இருக்கிறது என்றும், வேறு சில ஆய்வாளர்கள் மனிதர்களுக்கு இருபது வகையான வெவ்வேறு உணர்வுகள் இருப்பதாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

வாயு!

வாயு!

ஒரு நபர் இறந்த பிறகும் அவரது உடலில் இருந்து வாயு வெளியேறலாம். ஒருவரது உடலில் இருக்கும் எந்த வகையான வாயுவாக இருந்தாலும், இறந்த பிறகு தசைகளில் ஏற்படும் இறுக்கத்தால் வாயு தானாக உடலில் இருந்து வெளியேறிவிடும்.

தேன்!

தேன்!

உண்மையான தேன் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாது. ஆம்! சேமித்து வைக்கப்பட்ட உண்மையான தேன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சாப்பிடும் தரம் கொண்டிருக்கும், கெட்டுப் போகாது.

ஆக்ஸிஜன்!

ஆக்ஸிஜன்!

உலகத்தில் உற்பத்தியாகும் பாதி அளவு ஆக்ஸிஜன் கடலில் இருந்து தான் வருகிறதாம். நமக்கான முழு ஆக்ஸிஜன் மரத்தில் இருந்து கிடைப்பதில்லை. கடலில் இருக்கும் சிறிய நீர்வாழ் தாவரங்கள் இருக்கின்றன. இவை கார்பன்டை ஆக்சைடு மற்றும் சூரிய ஒளியை உட்கொண்டு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து வெளிபடுத்துகின்றன.

ஆண் கர்ப்பம்!

ஆண் கர்ப்பம்!

கடல் குதிரை மற்றும் பைப்பிஷ் இரண்டும் தான் கடல் வாழ் உயிரினங்களில் கருத்தரிக்கும் ஆண் உயிரினங்கள் ஆகும். இதை ஆங்கிலத்தில் Male Pregnansy என கூறுகிறார்கள்.

சிசு கர்ப்பம்!

சிசு கர்ப்பம்!

சில சமயங்களில் கருவில் இரட்டையர்கள் தரிக்கும் போது, ஒரு சிசுவின் உடலில் ட்வின் சிசு சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. சிசு உருவாகும் பொது, வளரும் போது ஏற்படும் கோளாறாக காணப்படுகிறது. சில சமயங்களில் கூடுதல் உடல் உறுப்புகளுடன் பிறப்பது. ஓட்டிப் பிறப்பது, வளராத கூடுதல் உறுப்புகளுடன் பிறப்பது எல்லாம் இப்படிப்பட்ட கோளாறால் தான் நிகழ்கின்றன.

சூரியகாந்திப் பூ

சூரியகாந்திப் பூ

சில சமயங்களில் அணு ஆயுத கழிவுகள் மற்றும் கதிரியக்க மண்ணை சுத்தம் செய்ய சூரியகாந்தி மலர்கள் உதவுகின்றன.

ட்ரிப்பில் பாயிண்ட்!

ட்ரிப்பில் பாயிண்ட்!

ஒரு வெட்ப நிலையில் நீர் கொதிக்கவும் முடியும், உறைந்து போகவும் முடியும். இதை ட்ரிப்பில் பாயிண்ட் என அறிவியலில் கூறுகிறார்கள்.இந்த பாயிண்டில் நீர், வாயுவாக, நீராக, கட்டியாக என மூன்று நிலையிலும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 10: Weird Science Facts!

Top 10: Weird Science Facts!
Desktop Bottom Promotion