Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
மழை வெள்ளத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
கடந்த வாரம் பெருமழையினால் அவதிப்பட்டு வந்த மும்பையில் பெண்ணொருவர் சந்தித்தப் பிரச்சனை தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
பெருமழை பாதிப்பிலிருந்து மும்பை நகரம் இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்நிலையில் வெள்ள பாதிப்பிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள நினைத்த பெண்ணை மும்பை வாசிகள் செய்த செயல் சமூகவலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன் வீட்டிலிருந்து காரில் வெளியேறிய குஷ்னுமா என்னும் பெண்மணி வீட்டை விட்டு சிறிது தூரம் வந்ததும் சாலையில் அதிக நீர் இருந்ததால் அங்கிருந்த ஒரு அப்பார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்துள்ளார். அப்போது அப்பார்ட்மெண்ட்வாசிகள் நடந்து கொண்ட விதம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடும் மழை :
மும்பையில் பணிபுரியும் குஷ்னுமா கடந்த வாரம் கடும் மழையில் சிக்கிக் கொண்டார். சாலையில் அதிகமான நீர் இருந்ததாலும், அந்த தண்ணீர் வற்றியபிறகே காரை செலுத்த முடியும் என்பதால் காருடன் அங்கிருக்கும் ஓர் அப்பார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்துள்ளார்.

அப்பார்ட்மெண்ட் வாசி :
இவர் காருடன் உள்ளே நுழைவதைப் பார்த்த அந்த அப்பார்ட்மெண்ட் வாசி ஒருவர், சத்தம் போட்டு வெளியேறுமாறு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். அத்துடன் காரின் டயரை பஞ்சர் செய்தும், அப்பார்ட்மெண்ட் கதவினை மூடியும் இங்கிருந்து வெளியேற முடியாது என்றும் மிரட்டியுள்ளார்.

பயம் :
இதனால் பயந்து போன குஷ்னுமா காரின் சாவியை அவர்களிடமே கொடுத்து விட்டு வெளியேற நினைத்த போது தான் அதே அப்பார்ட்மெண்ட்டில் இருக்கும் இன்னொரு நபர் விசாரித்து ஆறுதல் சொல்லியுள்ளார் அத்துடன் உதவ முன்வந்துள்ளார். அவரைப்பார்த்து இன்னும் சிலரும் உதவ முன்வந்துள்ளனர்.

சென்னை வெள்ளம் :
சென்னையில் ஏற்ப்பட்ட வெள்ள பாதிப்பின் போது ஒருவருக்கு ஒருவர் உதவிகள் செய்து கொண்டு மனிதத்துடன் செயல்பட்ட அதே நேரத்தில் மும்பையில் நடைப்பெற்ற இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
https://www.facebook.com/596803661/videos/10156542814833662/



Click it and Unblock the Notifications