கொட்டும் மழையில் உடைகளை அவிழ்த்து, அரைநிர்வாணமாக நடனமாடியவர் கைது!

Posted By:
Subscribe to Boldsky

சிங்கபூர் சாங்கி ரோடு செக்ஷன் பகுதியில் பெயர் அறியப்படாத வியாட்நாம் பெண் ஒருவர் திடீரென கொட்டும் மழையில் உடைகளை அவிழ்த்து நடனமாடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நீண்ட நேரம் அவர் இந்த செயலில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்ததை அறிந்த போலீசார் அப்பகுதிக்கு விரைந்து அவரை கைது செய்தனர். அவர் ஏன் இப்படி ஒரு செயலில் ஈடுபட்டார் என்பது அறியப்படவில்லை.

மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என கருதி, அவரை மனநல மருத்துவ மையத்தில் சேர்த்துள்ளனர் சிங்கப்பூர் போலீசார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காலை 7 மணி!

காலை 7 மணி!

39 வயதுமிக்க வியாட்நாமை சேர்ந்த பெண் ஒருவர் மக்கள் நடமாட்டம் நிறைந்த சிங்கபூர் சாலையில் மழையில் நடமாடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தொடர்ந்து எட்டு மணி நேரம் நடனம் ஆடியுள்ளார்.

ஆனால், இவர் நடனமாடும் போது தான் உடுத்தியிருந்த உடைகளை ஒவ்வொன்றாக கழற்றி நடனமாடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

Image Credit: singaporeable.cc

கொட்டும் மழை!

கொட்டும் மழை!

காலை ஏழு மணிக்கு நடனமாட துவங்கிய அந்த வியாட்நாம் பெண்மணி, மாலை மூன்று மணிவரை கொட்டும் மழையில் ஆடிக் கொண்டே இருந்துள்ளார்.

தனது உடைகள் நனைய, நனைய ஒவ்வொரு உடையாக கழற்றி ஏறிய துவங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் அவர் வெறும் கீழாடை மட்டும் அணிந்து அரைநிர்வாண நிலையில் ஆடிக் கொண்டிருந்த போது போலீஸ் கைது செய்தனர்.

Image Credit: singaporeable.cc

ரெயின் கோர்ட்!

ரெயின் கோர்ட்!

விபரம் அறிந்து அங்கே விரைந்த ஐந்து பெண் போலீசார் முதலில் அந்த பெண்ணுக்கு ரெயின் கோர்ட் கொடுத்து அணிந்துக் கொள்ள கூறியுள்ளனர். ஆனால், அந்த பெண் அதற்கு ஒப்புக் கொள்ளாமல், மறுத்து தொடர்ந்து மழையில் ஆடிக் கொண்டே இருந்துள்ளார்.

பிறகு போலீஸ் அந்த பெண்மணியின் உடைகளை கொண்டே அவரது கால்களை கட்டி கைது செய்துள்ளது.

Image Credit: singaporeable.cc

மனநல காப்பகம்!

மனநல காப்பகம்!

கைதுக்கு பிறகு அந்த பெண்மணி, மனநல மருத்துவ மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அந்த பெண்ணை மனநல மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகிறார்கள்.

அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

Image Credit: singaporeable.cc

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Vietnamese Female Arrested in Singapore for Striping Down to her underwear in Rain!

Vietnamese Female Arrested in Singapore for Striping Down to her underwear in Rain!