Latest Updates
-
குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
இந்தியாவின் லண்டன் என்று அழைக்கப்படும் அழகிய நகரம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கோங்குரா முட்டை குழம்பு ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - ஹோடடலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
Aadi Perukku 2026: ஆடிப் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? ஆடிப் பெருக்கின் வரலாறும், முக்கியத்துவமும் -
கோலாப்பூரி மட்டன் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
செவ்வாய் இன்று மிதுன ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
சன்டே ஸ்பெஷல் செட்டிநாடு ஸ்டைல் மட்டன் உப்புக்கறி - எப்படி செய்றதுன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 02 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப டென்ஷன் நிறைந்த நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (02 August 2026-08 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது!
மே 13-ல் மூன்றாம் உலகப்போர் - டொனால்ட் டிரம்பின் வெற்றியை யூகித்த மாயாவியின் கணிப்பு!
உலகம் அழியும் என்ற கணிப்புகளை தாண்டி இப்போது மூன்றாம் உலக போர் எப்போது துவங்கும் என்ற கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா, சிரியா மத்தியில் போர் நடந்துக் கொண்டிருக்கிறது. இதை இன்னும் தூண்டும் வகையிலும், மக்கள் இடத்தில் அச்சத்தை அதிகரிக்கும் வகையிலும் மூன்றாம் உலக போர் கூடிய விரைவில் துவங்கும் என்ற கணிப்புகள் வெகுவாக வெளியாகி வருகின்றன.
டிரம்பின் வெற்றியை யூகித்த இந்த மாயாவி கூற்றுகளில் இந்த மூன்றாம் உலக போர் துவக்கத்தின் பற்றிய கூற்றுகளும் அடங்கியுள்ளன. அதில் மூன்றாம் உலக போரின் தேதி உட்பட கணிக்கப்பட்டுள்ளது.

கடவுளின் செய்தியாளர்..
டெய்லி ஸ்டார் என்ற பத்திரிக்கையில், மாய சக்தி கொண்ட ஹோரிசியோ வில்லேஜஸ் தன்னை தானே ஒரு கடவுளின் செய்தியாளர் என கூறிக்கொண்டவர் எனவும். இவர் டொனால்ட் டிரம்ப் தான் வெற்றி பெறுவார் என 2015-லேயே கூறியுள்ளார்.

மே 13
இவர் உலகில் நடந்த பல அசம்பாவிதங்கள் குறித்து முன்னரே கூறியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இவர் டொனால்ட் டிரம்ப் மூலமாக தான் மூன்றாம் உலகப் போர் துவங்கும் என்றும். அது மே 13 தேதியே துவங்கும் என்றும் கூறியுள்ளார்.

அக்டோபர் 17 வரை..
மே 13 ல் துவங்கி அக்டோபர் 17 வரையிலும் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் அதிக பேரழிவுகள், அதிர்ச்சி மற்றும் பெருமளவில் மரணங்கள் உண்டாகும் என்றும் இவர் கணித்துள்ளார்.

சிரியா மீதான தாக்குதல்
மேலும், இவர் டிரம்ப்பின் சிரியா மீதான தாக்குதல் பற்றியும் தனக்கு முன்பே தெரியும் என கூறியுள்ளார். மேலும், இதனால் ரஷ்யா, வடக்கொரியா மற்றும் சீனா மத்தியில் சண்டை எழும் என்றும் கூறுகிறார். மேலும், சமீபத்தில் இவருக்கு , வானத்தில் இருந்து பூமியில் நெருப்பு பந்துகள் விழுவது போன்ற கனவு வந்ததாம்.

திருமணம்?
தான் திருமணம் செய்துக் கொள்ள வில்லை, பிள்ளைகள் பெற்றுக் கொள்ளவில்லை.. நான் தனி ஆளாக இருந்து மக்களுக்கு செய்திகள் பரப்ப வேண்டும் எனவே, கடவுள் தன்னை தனி ஆளாக இருக்க செய்துள்ளார் என்றும் இவர் கூறுகிறார்.

புத்தகம்!
இவர் கடைசி எச்சரிக்கை (The Final Warning) என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். ஆனால், இவர் ஆரம்பம் முதலே மக்களை அச்சுறுத்தவே இப்படிப்பட்ட கருத்துக்களை பரப்பி வருகிறார் என இவரை பலரும் ஒதுக்கியே வைத்துள்ளனர். இவரது புத்தகத்தை ஆலயங்களுக்கு அனுப்பியுள்ளார், அங்கேயும் இவர் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதே வேலையாக பலர்...
ஏற்கனவே கண் பார்வை அற்ற ஒரு மூதாட்டி இப்படி தான் பல கணிப்புகள் கூறி அவர் நடந்தன என சென்ற வருடம் பிரபலமாக பேசப்பட்டார். அவர் உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது புதிதாக ஹோரிசியோ வில்லேஜஸ் இவர் கிளம்பியுள்ளார். இன்னும் இரண்டே வாரங்களில் இவர் எப்படிப்பட்டவர் என்பது வெட்டவெளிச்சம் ஆகிவிடும். மே 13-ல் அப்படி என்ன தான் நடக்கப் போகிறது என பார்ப்போம்...



Click it and Unblock the Notifications