Latest Updates
-
ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க! -
வாஸ்து படி உங்கள் பாத்ரூமில் ஒரு கிண்ணம் உப்பை வைப்பதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
தயிர் Vs. மோர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது? -
தமிழ் புத்தாண்டில் உருவாகும் அசுப யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படலாம்! -
சூப்பரான செட்டிநாடு பச்சை சுண்டக்காய் கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க -
வரகரிசி கஞ்சியும், முட்டை ஆம்லெட்டும் - எப்படி செய்றது-ன்னு பாத்து இந்த காம்போவை ட்ரை பண்ணி பாருங்க! -
இன்றைய ராசிபலன் 10 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
சனி நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 17 முதல் சனி பகவான் இந்த 3 ராசிக்காரர்களை சோதிக்க போகிறார்! ரெடியா இருங்க -
வாஸ்துப்படி, நைட் தூங்கும் முன் மறக்காம இந்த 3 விஷயங்களை செய்யுங்க.. செல்வம் பெருகும்! -
தமிழ் புத்தாண்டு நாளில் சுக்கிரனால் உருவாகும் ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பணம் பெருகும், தொழில் வளரும்!
மாணவர் ஜனாதிபதி அப்துல் கலாம் பற்றிய அழிக்க முடியாத உண்மைகள்!
இந்தியாவின் 11-வது குடியரசு தலைவராக பணியாற்றியவர் அப்துல் கலாம் ஐயா அவர்கள். இவரது முழுப்பெயர் அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம். இவர் இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும், மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.
உலக அளவில் தலைசிறந்து விளங்கும் இந்திய விஞ்ஞானிகளின் அறிய கண்டுப்பிடிப்புகள்!!!
இந்திய குடியரசு தலைவராக பதவி ஏற்கும் முன்னர், அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அழைக்கப்பட்டு வந்தார்.
நகைச்சுவை நடிகர்கள் வாழ்வில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவங்கள்!!
குடியரசு தலைவராக இருந்த போது, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பங்கு தான் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு மிக மிக்கியமான பங்குவகிக்கும் என கூறியதோடு மட்டுமில்லாமல், மாணவர் மத்தியில் ஓர் எழுச்சி நாயகனாக திகழ்ந்தார். தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் மாணவர் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நிறைய உரையாற்றியுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி பற்றி நீங்கள் அறிந்திராத பல வியக்கத்தக்க தகவல்கள்!!!
இவரது மறைவை எண்ணி வருந்துபவர்களில் ஆராச்சியாளர்கள், அரசியல்வாதிகளை விட மாணவர்களும், இளைஞர்களும் தான் மிக அதிகம்...
உலகின் டாப் 10 பயங்கரவாதிகளில் நரேந்திர மோடியின் பெயர் - கூகுள் தேடலில் அதிர்ச்சி!!

ஏழ்மையில் முளைத்த விடிவெள்ளி
அப்துல் கலாம் அவர்கள் மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர். படிப்பு எட்டாக்கனியாக கனியாக இருந்த போதும் கூட, தனது விடா முயற்சியால் எட்டிப்பிடித்தவர். தனது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு சிறுவயதிலேயே வேலைக்கும் சென்றவர். வீடு வீடாய் சென்று நாளிதழ் போட்டு வருமானம் ஈட்டி, தனது குடும்பத்திற்கு பணம் சம்பாதித்து கொடுத்தவர் அப்துல் கலாம்.

கல்வி கட்டணம் கட்ட முடியாத நிலையில் இருந்த கலாம்
எம்.ஐ.டி-யில் சேர அனுமதி கட்டணம் கட்ட கூட பணம் இன்றி தவித்தார் அப்துல் கலாம். அவரது தந்தையாலும் பணம் தர இயலாத சூழ்நிலை இருந்தது. அப்போது, கலாம் அவர்களது அக்கா தான் தனது வளையல்களை விற்று பணம் கொடுத்து கலாம் படிக்க உதவினார்.

டி.ஆர்.டி.ஓ (DRDO)
டி.ஆர்.டி.ஓ-வில் (DRDO) விஞ்ஞானியாக இருந்த போது இவரது முதல் சாதனையாக கருதப்பட்டது, இவர் கண்டுபிடித்த சிறிய ரக ஹெலிகாப்டர். இதை இந்திய இராணுவத்திற்காக உருவாக்கினார் அப்துல் கலாம்.

இந்தியாவின் முதல் அணு சோதனையில் பங்கு
அப்துல் கலாம் அவர்கள், ராஜ ராமண்ணா என்ற விஞ்ஞானியின் குழு நடத்திய இந்தியாவின் முதல் முறை அணு ஆயுத சோதனையில் பங்கெடுத்திருந்தார்.

உடன் பணிபுரிபவர் மீது அதிக அக்கறை
தன்னுடன் பணிபுரிபவர்கள் மீது அதிக எப்போதும் அதிக அக்கரை எடுத்துக்கொள்வார் அப்துல் கலாம் அவர்கள். ஒருமுறை, கலாம் உடன் பணிபுரிந்த ஒருவர் தனது குழந்தைகளை ஓர் திருவிழாவிற்கு அழைத்து செல்வதாய் வாக்களித்திருந்தார். ஆனால், வேலை நிமித்தம் காரணமாக அவர் செல்ல மறந்துவிட்டார். கடைசி தருணத்தில் நினைவு வந்து வீட்டிற்கு சென்ற போது தான் தெரிந்தது, முன்னரே சென்ற கலாம், அவரது குழந்தைகளை, திருவிழாவிற்கு கூட்டி சென்று விட்டார் என்று.

விருதுகளும் பெருமைகளும்
அரசின் சார்பில், பத்மா பூஷன்(1981), பத்மா விபூஷன் (1990) விருதுகளும். அறிவியல் சார்ந்து இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் பங்குவகித்ததன் காரணமாய் பாரத ரத்னா விருதும் (1997)அப்துல் கலாம் அவர்கள் பெற்றிருக்கிறார்.

மாணவர் தலைவர்
மாணவர்கென்று ஓர் தலைவர் இருக்கிறார் என்றால் அது எப்போதும், அப்துல் கலாம் ஐயா அவர்கள் தான். அவர் மறைந்தாலும், அவர் ஏற்றிய எழுச்சி தீ மாணவர் மனதில் என்றும் எரிந்துக் கொண்டே தான் இருக்கும். கடந்த 2003 மற்றும் 2006 ஆம் ஆண்டு எம். டிவி-யின் யூத் ஐகான் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்.

சுவிட்சர்லாந்து அரசாங்கம் கௌரவம்
நமது முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஐயா அவர்களை, அவரது அறிவியல் அறிவை போற்றும் வகையில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் கௌரவம் செய்துள்ளது. இவர் சுவிட்சர்லாந்து சென்று வந்த நாளை, அவர்கள் அந்நாட்டின் அறிவியல் நாளாக கொண்டாடி வருகிறார்கள்.

வல்லரசு என்னும் விதையை விதைத்தவர்
இந்தியா 2020-ல் வல்லரசு நாடாக மாறும் என்று, நீண்ட நாள் வெறும் கனவாக எந்த தூண்டுதலும் இன்றி இருந்த ஓர் விஷயத்திற்கு, மாணவர் மற்றும் இளைஞர்கள் மூலம் உயிரோட்டம் அளித்து, பெரும் விதையை ஒவ்வொரு இந்தியனின் மனத்திலும் விதைத்தவர் அப்துல் கலாம் அவர்கள்.

உலக கௌரவங்கள்
உலகெங்கிலும் இருக்கும் பல பல்கலைக்கழகங்கள் கலாம் ஐயா அவர்களுக்கு டாக்டர் பட்டமளித்து கௌரவித்துள்ளது. இது மட்டுமின்றி, ராமானுஜன் விருது, இந்திரா காந்தி விருது, வீர் சவர்கர் (Veer Savarkar) விருது, கிங் சார்லஸ் II பதக்கம் என பல வகைகளில் கௌரவம் செய்யபட்டுள்ளார் கலாம் ஐயா.



Click it and Unblock the Notifications











