உலகையே கலக்கிய இந்திய கடத்தல்காரர்கள் பற்றிய திகிலூட்டும் உண்மைகள்!!!

நாம் அறிந்தது எல்லாம் தாவூத் இப்ராஹீம், அபு சலீம், சோட்டா ராஜன் போன்ற சிலர் தான். ஆனால், எப்.பி. ஐ.யில் இருந்து சி.பி.ஐ. வரையிலும் தேடப்படும் பல இந்திய கடத்தல்காரர்கள் இருக்கின்றனர்.

இந்தியர்கள் மிகவும் திறமைசாலிகள், தாங்கள் காலூன்றிய துறைகளில் எல்லாம் வலுவான தடங்களை பதித்தவர்கள். நாசா, மைக்ரோசாப்ட் என மென்பொருள் தொழில் மட்டுமின்றி, கடத்தல், கொள்ளை என மிரட்டும் வகையிலும் சில இந்திய கடத்தல்காரர்கள் உலகையே கலக்கியுள்ளனர்.

நாம் அறிந்தது எல்லாம் தாவூத் இப்ராஹீம், அபு சலீம், சோட்டா ராஜன் போன்ற சிலர் தான். ஆனால், எப்.பி. ஐ.யில் இருந்து சி.பி.ஐ. வரையிலும் தேடப்படும் பல இந்திய கடத்தல்காரர்கள் இருக்கின்றனர். அவர்களை பற்றிய ஓர் பார்வை....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாவூத் இப்ராஹிம்

தாவூத் இப்ராஹிம்

நிழல் உலக தாதா என்று கூறப்படும் மிகபெரிய கடத்தல் மன்னன். இவனது வாழ்க்கையை மையமாக வைத்தும், கடத்தல் நிகழ்வுகளை கொண்டும் பல இந்திய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இவனது சொத்து மதிப்பு மட்டும் 6.7 பில்லியன் டாலர்கள். அல்-கொய்தாவுடன் இவனுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஐ.எஸ்.ஐ (Inter-Service-Intelligence) எனப்படும் பாகிஸ்தானின் பாதுகாப்பு வளையம் இவனை பாதுகாத்து வருவதாகவும் சில செய்திகள் கூறுகின்றன. 1993 மற்றும் 2008 ஆண்டுகளில் நடந்த மும்பை குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் இவனுக்கும் தொடர்பு இருந்தது.

இந்திய கிரிக்கெட் அணியுடன் சந்திப்பு

இந்திய கிரிக்கெட் அணியுடன் சந்திப்பு

ஒருமுறை இந்திய கிரிக்கெட் அணியின் டிரெஸ்ஸிங் ரூமிற்குள் வந்து பாகிஸ்தான் அணியை மிகவும் கேவலமாக தோற்கடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும், அப்படி செய்தால் அனைவருக்கும் சொகுசு கார்கள் பரிசளிப்பதாவும் கூறியதாக முன்னாள் விளையாட்டு வீரர் திலிப் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.

Image Courtesy

அபு சலீம்

அபு சலீம்

பல நாசக் காரியங்கள் மற்றும் கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற வழக்குகளில் தேடப்படும் பயங்கர குற்றவாளி தான் இந்த அபு சலீம். அபு சலீம் இந்தி நடிகர் சஞ்சய் தத்திற்கு ஆயுதங்கள் தந்து உதவியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மற்றும் இவன் பல நடிகர்களிடம் இருந்து பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது. மனிஷா கொய்ராலாவின் உதவியாளரை கொன்றது மற்றும் பல இந்தி திரையுலக பிரபலங்களை கொள்வதாக மிரட்டல் விட்டது என பல வழக்குகள் இவன் மீது உள்ளது. இவனது தந்தை ஒரு வக்கீல் ஆவார்.

Image Courtesy

டைகர் மேனன்

டைகர் மேனன்

இவனுக்கு இந்த பெயர் வர காரணம், ஓர் முறை போலீஸ் இவனை பிடிக்க துரத்தியப் போது, 100 கி.மீ வேகத்திற்கு மேல் ஒருவழி பாதையில் வண்டியை ஒட்டி, தப்பி சென்றானாம். அதனால் இவனுக்கு "டைகர்" மேனன் என்ற புனைப்பெயர் வந்தது. 1993ஆம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளி இவன். ஒருமுறை இவனது வீட்டில் ரைடு நடந்த போது, தங்கத்தை பறிமுதல் செய்ய முனைந்த போது, அந்த வருமான வரி அதிகாரியை தாக்கிவிட்டு தப்பித்துவிட்டான். அன்று முதல் இவன் மிக பிரபலமாகிவிட்டன.

Image Courtesy

சோட்டா ராஜன்

சோட்டா ராஜன்

17 கொலை வழக்கு, பல கொலை முயற்சி வழக்குகள், போதை பொருள் கடத்தல், கொள்ளை, மற்றும் பல குற்ற வழக்குகள் இவன் மீது சுமத்தப்பட்டுள்ளது. முன்னர், இவன் தாவூத் இப்ராஹீம் உடன் இருந்தான். பிறகு போட்டியாளர்கள் ஆன இவர்கள், இருவரை ஒருவர் கொல்ல பலமுறை முயற்சி செய்தனர்.

Image Courtesy

படா ராஜன் (Bada Rajan)

படா ராஜன் (Bada Rajan)

கருப்பு பணம் பரிவர்த்தனை, 1970 - 80களில் பல கருப்பு சந்தை வேலைகளில் ஈடுபட்டது என பல வழக்குகள் இவன் மீது உள்ளன. தாவூத் இப்ராஹீம் நிழல் உலக தாதாவாக உருவாக பின்னணியில் பல வேலைகளில் ஈடுபட்டு, முக்கிய பங்கு வகித்தவன் இவன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Courtesy

ஹசி மஸ்தான்

ஹசி மஸ்தான்

இவன் இந்தியாவின் பிரபல கடத்தல்காரன் என்று குறிப்பிடலாம். ஏனெனில், இவன் படங்களும் தயாரித்துள்ளான். இவன், அமிதாப்பச்சன், தர்மேந்திரா, திலிப்குமார், ராஜ்கபூர் போன்ற பல பிரபலங்களுடன் நெருங்கி பழகியதாகவும் கூறப்படுகிறது. அமிதாப்பச்சனின் "Deewaar", மற்றும் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த "Once Upon a Time in Munbai" போன்ற படங்கள் மையமாக கொண்டு வெளிவந்த படங்கள் என கூறப்படுகிறது.

Image Courtesy

ரவி பூஜாரி

ரவி பூஜாரி

கரன் ஜோகர், அக்ஷய் குமார், சல்மான் கான் போன்ற பிரபலங்களை மிரட்டியதர்கான குற்றவழக்குகள் இவன் மீது சுமத்தட்டிருந்த போதும். கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த ஷாருக்கானின் "ஹேப்பி நியூயற்" என்ற படத்தின் போது ஷாருக்கானை மிரட்டிய போது தான் மிகவும் பிரபலமானதாக கூறப்படுகிறது. அப்போது, இவன் ஷாருக்கான் வீட்டிற்கு வெளியே எறிகுண்டு வீச கூறியதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது.

Image Courtesy

வரதராஜன் முதலியார்

வரதராஜன் முதலியார்

மும்பையை ஒருகாலத்தில் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தவர் இந்த வரதராஜன் முதலியார். துறைமுகத்தில் கூலியாக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். நாயகன் திரைப்படம் வரதராஜன் முதலியாரின் வாழ்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதாக என்று கூறப்பட்டது.

Image Courtesy

கரீம் லாலா

கரீம் லாலா

மும்பையின் உண்மையான டான் என்று புகழாரம் சூட்டப்பட்ட கரீம் லாலா, இந்தியாவின் மாபெரும் கொடிய குற்றவாளியாக பேர்போனவன். ஆப்கானிஸ்தானை சேர்ந்த லாலா ஓர் ஏழை குடும்பத்தை சேர்ந்தவன். பின்னாளில் இவன் கொள்ளை, கடத்தலில் ஈடுபட்டு பெரிய கடத்தல்காரனாக உருவெடுத்தான்.

Image Courtesy

அலி புதீஸ்

அலி புதீஸ்

பிக்-பாக்கெட்டாக இருந்து பிரபலங்களை ப்ளாக் மெயில் செய்யும் வகையில் உருவானது தான் இவனது வளர்ச்சி. வைர கற்கள் கடத்தல்களும்,கொடூரமான கொலைகளும் செய்தவை இவனது சாதனைகள். திரையுலக பிரபலங்களிடம் நிறைய மிரட்டி பணம் வாங்கியது இவனது சிறப்பு.

Image Courtesy

சோட்டா ஷகீல்

சோட்டா ஷகீல்

தாவூதின் மிக நெருங்கிய உதவியாளனாக இருந்தவன் தான் இந்த சோட்டா ஷகீல். ஒருமுறை "இந்தியா டுடே" பத்திரிகைக்கு இவன் அளித்த பேட்டியில், தான் பல இந்தி திரைப்படங்களுக்கு பண உதவி செய்ததாக கூறியது குறிப்பிடத்தக்கது. ஓர் முறை அதிகாரிகள் இவனை துறைமுகத்தில் வைத்து பிடிக்க முயன்ற போது, ஜன்னலை உடைத்து கடலில் குதித்து தப்பித்துவிட்டான்.

Image Courtesy

சரத் செட்டி

சரத் செட்டி

தாவூதின் கிரிக்கெட் சூதாட்டங்களை எல்லாம் இவன் தான் கையாண்டு வந்தான்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion