சுவாமி விவேகானந்தர் பற்றி நீங்கள் அறிந்திராத சில முக்கிய தகவல்கள்!!!

By Ashok CR

வேதாந்த தத்துவங்களை மேற்கத்திய நாடுகளுக்கு எடுத்துச் சென்று, இந்து மதத்தை கடுமையாக சீர்திருத்திய ஒருவர் இருந்தார் என்றால் அது தான் சுவாமி விவேகானந்தர். கிட்டத்தட்ட பரம ஏழையாக இருந்தாலும் கூட சிகாகோவில் நடைபெற்ற மதங்களின் உலக பாராளுமன்றத்தில் கலந்து கொள்ள அமெரிக்காவிற்கு பயணித்தார். கிழக்கு தத்துவங்களை சீர்த்திருத்தம் செய்து, மற்றவைகளை விட இந்து மத தத்துவங்கள் உயர்ந்தது என மேற்கத்திய நாடுகளை ஏற்றுக்கொள்ளும் படி வற்புறுத்தினார்.

"ஏழ்மையில் முளைத்த விடிவெள்ளி" அப்துல் கலாம் பற்றிய அழியாத நினைவுகள்!!!

கல்கத்தாவில் ஒரு உயர்குல பெங்காலி குடும்பத்தில் நரேந்திர நாத் தட்டாவாக பிறந்தவர் தான் சுவாமி விவேகானந்தர். இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட விவேகானந்தர், ஏழைகள் மற்றும் இல்லாதவர்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தார். புகழ்பெற்ற ராமகிருஷ்ண மடம் மற்றும் பேலூர் மடத்தை கல்கத்தாவில் இவர் தொடங்கினார். இந்து மதத்தை புகழடையச் செய்வதிலும், இல்லாதவர்களுக்கு உதவி செய்வதிலும், இன்னமும் இவைகள் அர்பணிப்புடன் உழைக்கிறது.

சுவாமி விவேகானந்தரின் மறக்க முடியாத சில பொன்மொழிகள்!!!

சுவாமி விவேகானந்தர் மக்களைக் கவர்ந்த தலைவராக விளங்கினார். மதங்களின் சிகாகோ பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை, ஆன்மிகம் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முதன்மையான நாடுகளில் இந்தியாவையும் இடம் பிடிக்க வைத்த தலைசிறந்த உரையாகும். வெள்ளையர்களை எதிர்த்து இந்திய சுதந்திரத்திற்காக நடந்த போராட்டங்களில் இவர் முனைப்புடன் பங்குபெற்று வந்தார். ஆனால் சுவாமி விவேகானந்தர் பற்றி உண்மையிலேயே நமக்கு எவ்வளவு தெரியும்? அதிகமாக தெரியாதா?

தன்னம்பிக்கையை வளர்க்கும் டாக்டர். அப்துல் கலாமின் பொன்மொழிகள்!!!

அப்படியானால் உங்களை ஆச்சரியப்பட வைக்கும், சுவாமி விவேகானந்தர் பற்றிய 10 அறிய தகவல்களைப் பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விவேகானந்தர் ஒரு சராசரியான மாணவன்

விவேகானந்தர் ஒரு சராசரியான மாணவன்

அவருடைய தேனொழும் உரைகளை உலகமே அறியும். ஆனால் சுவாமி விவேகானந்தர் ஒரு சராசரி மாணவனாகவே திகழ்ந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா? பல்கலைகழக நுழைவு அளவிலான தேர்வில் அவர் வெறும் 47% மட்டுமே பெற்றார். அதே போல் எஃப்.ஏ.-வில் (பின்னாளில் இந்த பரீட்சை இன்டெர்மீடியேட் ஆர்ட்ஸாக மாறியது) 46 சதவீதமும் பி.ஏ. பரீட்சையில் 56 சதவீதம் மட்டுமே பெற்றார்.

விவேகானந்தர் என்பது அவரே வைத்துக் கொண்டே பெயரே

விவேகானந்தர் என்பது அவரே வைத்துக் கொண்டே பெயரே

சுவாமி விவேகானந்தர் என்ற பெயரை ஒரு துறவியாக மாறிய பின்பு அவரே வைத்துக் கொண்டார். உண்மையிலேயே அவருக்கு விரேஷ்வரா என்ற பெயரை அவர் தாய் வைத்தார். அவரை செல்லமாக 'பில்லி' என அழைத்து வந்தனர். பின் அவருக்கு நரேந்திர நாத் தட்டா என்ற பெயரை வைத்தனர்.

விவேகானந்தருக்கு எப்போதுமே வேலை கிடைக்கவில்லை

விவேகானந்தருக்கு எப்போதுமே வேலை கிடைக்கவில்லை

பி.ஏ. பட்டத்தை பெற்றிருந்தாலும் கூட, வேலை தேடி ஒவ்வொரு கதவையும் தட்ட வேண்டிய நிலை சுவாமி விவேகானந்தர்விற்கு ஏற்பட்டது. கடவுள் மீதான நம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்பட்டதால், ஒரு நாத்திகனாக மாறும் அளவிற்கு சென்று விட்டார்.

சுவாமிஜியின் குடும்பம் கடும் வறுமையில் வாழ்ந்தது

சுவாமிஜியின் குடும்பம் கடும் வறுமையில் வாழ்ந்தது

தன் தந்தையின் மரணத்திற்கு பிறகு, சுவாமிஜியின் குடும்பம் கடும் வறுமையில் வாழ்ந்தது. ஒரு வேளை உணவிற்கே அவரின் தாயும் சகோதரிகளும் போராட வேண்டியிருந்தது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உணவு கிடைக்கும் என்பதால், பெரும்பாலும் பல நாட்கள் அவர் உண்ணாமலேயே இருந்தார்.

காக்கப்பட்ட ரகசியம்

காக்கப்பட்ட ரகசியம்

குடும்பத்தின் நிதி பிரச்சனைகளை சமாளிக்க உதவும் வண்ணம், சுவாமிஜியின் தாய்க்கு சீரான அடிப்படையில் 100 ரூபாயை அனுப்பி வைத்து வந்தார் கேத்ரியின்யின் மகாராஜாவான அஜித் சிங். இந்த ஏற்பாடு பாதுகாக்கப்பட்ட ரகசியமாக இருந்து வந்தது.

தேநீர் மீதான விவேகானந்தரின் காதல்

தேநீர் மீதான விவேகானந்தரின் காதல்

தேநீரின் ரசிகனாக இருந்து வந்தார் விவேகானந்தர். அக்காலத்தில் தேநீர் குடிப்பதை எதிர்த்தனர் இந்து பண்டிதர்கள். ஆனால் தன் மடத்தில் இவர் தேநீரை குடிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தினார்.

சுவாமிஜியும்.. லோக்மான்யரும்..

சுவாமிஜியும்.. லோக்மான்யரும்..

பேலூர் மடத்தில் தேநீர் தயாரிக்கும் படி ஒரு முறை பால கங்காதர் திலகரை சுவாமிஜி வற்புறுத்தினார். மிகச்சிறந்த அந்த சுதந்திர போராட்ட வீரர் ஜாதிக்காய், சாதிபத்திரி, ஏலக்காய், கிராம்பு மற்றும் குங்குமப்பூவை தன்னுடன் எடுத்து வந்து, அனைவருக்கும் மொகலாய தேநீரை தயார் செய்து கொடுத்தார்.

ராமகிருஷ்ணரை அவர் முழுவதுமாக நம்பவில்லை

ராமகிருஷ்ணரை அவர் முழுவதுமாக நம்பவில்லை

ராமகிருஷ்ண பரமஹம்சர் தான் சுவாமி விவேகானந்தர்வின் குரு ஆவார். ஆரம்ப கால கல்வியின் போது, விவேகானந்தர் அவரை முழுவதுமாக நம்பவில்லை. அவர் சொன்னவைகள் அனைத்திற்கும் விடை கிடைக்காதவரை, அவர் சொல்லிக் கொடுத்த அனைத்தையும் சோதித்துக் கொண்டே இருந்தார் விவேகானந்தர்.

தன் சொந்த சாவை சுவாமிஜி முன்னரே கணித்தார்

தன் சொந்த சாவை சுவாமிஜி முன்னரே கணித்தார்

ஃபிரெஞ்ச் ஒபேரா பாடகியான ரோசா எம்மாவிடம் தான் ஜூலை 4-ஆம் தேதி இறந்து விடலாம் என எகிப்தில் வைத்து விவேகானந்தர் அறிவித்துள்ளார். அதே போல் 1902-ஆம் ஆண்டு, ஜூலை 4-ஆம் தேதி அவர் இறந்தார்.

தான் இறப்பதற்கு முன்பு, 31 வியாதிகளை கொண்டிருந்தார் சுவாமிஜி

தான் இறப்பதற்கு முன்பு, 31 வியாதிகளை கொண்டிருந்தார் சுவாமிஜி

புகழ் பெற்ற பெங்காலி எழுத்தாளர் எழுதிய 'தி மான்க் அஸ் ஏ மேன்' புத்தகத்தின் படி, சுவாமி விவேகானந்தர் 31 வியாதிகளை கொண்டிருந்தார். தூக்கமின்மை, ஈரல் மற்றும் சிறுநீரக நோய், மலேரியா, மைக்ரைன், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்கள் போன்ற சில தான் விவேகானந்தர் தன் வாழ்வில் சந்தித்த அந்த 31 உடல்நல பிரச்சனைகள் என அந்த புத்தகம் பட்டியலிட்டுள்ளது. பல முறை, தாங்கிக் கொள்ள முடியாத ஆஸ்துமா நோயாலும் கூட அவர் அவதிப்பட்டு வந்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, August 6, 2015, 11:05 [IST]
Desktop Bottom Promotion