Latest Updates
-
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம்
2026 புத்தாண்டின் முதல் நாளில் இந்த 5 பொருட்களை வாங்குங்க.. லட்சுமி தேவியின் ஆசி ஆண்டு முழுவதும் கிட்டும்..
New Year 2026 Vastu Tips: அனைவரும் வருகிற புத்தாண்டு சிறப்பாகவும், செழிப்பாகவும் இருக்க பல்வேறு வழக்கங்களைக் கொண்டிருப்பார்கள். அதில் சிலர் புத்தாண்டின் முதல் நாளில் கோவில்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொள்வார்கள்.
ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின் படி, வருகிற புத்தாண்டு சிறப்பாகவும், செழிப்பாகவும் இருக்க, புத்தாண்டின் முதல் நாளில் சிறப்புமிக்க மற்றும் மங்களகரமான சில பொருட்களை வாங்கி வீட்டிற்கு கொண்டு வருவதன் மூலம், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி, நேர்மறை ஆற்றல் நிரம்பி ஆண்டு முழுவதும் செல்வ செழிப்போடு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்.

அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். வருகிற இந்த புத்தாண்டு சிறப்பாக இருக்கவும், லட்சுமி தேவியின் முழு அருள் கிடைத்து பணப் பிரச்சனை இல்லாத வாழ்க்கையை வாழவும், புத்தாண்டின் முதல் நாளில் பின்வரும் 5 பொருட்களுள் ஏதேனும் ஒன்றை வீட்டில் வாங்கி வாருங்கள்.
இந்த பொருட்கள் அனைத்துமே மங்களகரமானது மற்றும் லட்சுமி தேவியின் பரிபூர்ண அருளை பெற உதவும். முக்கியமாக இந்த பொருட்களை புத்தாண்டு நாளன்று ராகு காலத்தில் மறந்தும் வாங்கிவிடாதீர்கள். புத்தாண்டின் முதல் நாளில் நல்ல நேரத்தில் வாங்கினால் மட்டுமே நல்ல பலனைத் தரும்.
உலோக ஆமை
வாஸ்துப்படி, உலோக ஆமை அதிர்ஷ்டம் மற்றும் நீண்ட ஆயுளின் அடையாளமாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட உலோக ஆமையை புத்தாண்டின் முதல் நாளில் வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்து, வீட்டின் வடக்கு திசையை நோக்கி வைக்க வேண்டும். இவ்வாறு வாங்கி வைப்பதன் மூலம், வீட்டில் உள்ளோரின் வேலை மற்றும் தொழிலில் நல்ல வெற்றி கிடைப்பதோடு, குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
துளசி செடி
உங்கள் வீட்டில் துளசி செடி இல்லாவிட்டால், அந்த துளசி செடியை புத்தாண்டின் முதல் நாளில் வாங்குங்கள். ஏனெனில் துளசி லட்சுமி தேவி வாசம் செய்யும் ஒன்றாகும். இப்படிப்பட்ட துளசி செடியை வாங்கி வைப்பதன் மூலம், வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகள் நீங்குவதோடு, லட்சுமி தேவியின் பரிபூர்ண அருள் ஆண்டு முழுவதும் கிடைக்கும். இதன் மூலம் நிதி பிரச்சனைகளும் நீங்கும்.
சிரிக்கும் புத்தர்
வாஸ்துப்படி, சிரிக்கும் புத்தர் சிலை வீட்டில் இருப்பது மிகவும் நல்லது. சிரிக்கும் புத்தர் செழிப்பின் அடையாளமாகும். இதை வீட்டின் வடகிழக்கு மூலையிலோ அல்லது பிரதான நுழைவாயிலை நோக்கியோ வைத்தால், நேர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரித்து, வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் எப்போதும் நிலைத்திருக்கும்.
மயில் இறகு
புத்தாண்டின் முதல் நாளில் வீட்டிற்கு மயில் இறகை கொண்டு வருவதும் நல்லது. வாஸ்துப்படி, வீட்டில் மயில் இறகை வைத்திருந்தால், வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகள் நீங்கி, வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும், செழிப்பையும் கொண்டு வரும்.
தேங்காய்
புத்தாண்டின் முதல் நாளில் தேங்காய் வாங்கி வீட்டிற்கு கொண்டு வருவது நல்லது. ஏனெனில் வாஸ்துப்படி, தேங்காய் லட்சுமி தேவியின் அடையாளமாக கருதப்படுகிறது. அதுவும் இந்த தேங்காயை ஒரு சிவப்பு துணியில் வைத்து கட்டி, லட்சுமி தேவிக்கு அருகில் வைத்து, பூஜை செய்து, பின் அதை பணம் வைக்கும் அலமாரியில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் வீட்டில் செல்வம் அதிகரித்து, தேவையற்ற செலவுகள் குறையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications