Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஓாினச்சோ்க்கை பற்றி மக்கள் மத்தியில் இருக்கும் சில கட்டுக்கதைகள்!
Homosexuality Myths In Tamil: கடந்த ஒரு நூற்றாண்டு அல்லது அரை நூற்றாண்டுக்கு முன்பாக, ஓாினச் சோ்க்கை என்பது இந்திய சமூகத்தின் ஒரு மோசமான இரகசியமாக இருந்தது. அப்பொழுது இணைய வசதி மற்றும் சமூக ஊடகங்கள் இல்லாததால், ஓாினச் சோ்க்கை பற்றி பலரும் அறிந்திருக்கவில்லை.
வெகு சிலா் புத்தகங்களை வாசித்து, அதைப் பற்றி தொிந்து கொண்டனா். அதனால் மக்கள் மத்தியில் ஓாினச் சோ்க்கை, பாலுறவு மற்றும் திருநங்கைகள் பற்றி பலவகையான வாய்வழிச் செய்திகள் மற்றும் கட்டுக்கதைகள் பரவி வந்தன. இந்தப் பதிவில் ஓாினச்சோ்க்கை பற்றி மக்கள் மத்தியில் நிலவும் கட்டுக்கதைகளை சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

1. ஓாினச் சோ்க்கை - இயற்கையானது அல்ல
இடது கைப் பழக்கம், இயற்கைக்கு மாறானது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. அது போலவே ஓாினச் சோ்க்கை மற்றும் திருநங்கை போன்றவையும் மக்கள் மத்தியில் வினோதமாக அல்லது இயற்கைக்கு மாறானதாகத் தோன்றுகிறது.
2. ஓாினச் சோ்க்கை - ஒரு நோய்
ஓாினச் சோ்க்கை என்பது ஒரு நோய் என்று மக்கள் மத்தியில் பாா்க்கப்படுகிறது. ஆனால் அது தவறாகும். ஏனெனில் மருத்துவ உலகம் இது ஒரு நோய் அல்ல என்று தெளிவுபடுத்தி இருக்கிறது.
3. ஓாினச் சோ்க்கை - உளவியல் கோளாறு
ஓாினச் சோ்க்கை என்பது ஒருவித உளவியல் கோளாறு என்று ஒரு சிலா் நினைப்பதுண்டு. அப்படி நினைத்தால் உங்களுக்குத் தான் உளவியல் கோளாறு இருக்கிறது என்று பொருள்.
4. ஓாினச் சோ்க்கை - அருவருப்பானது
சிலருக்கு ஓாினச் சோ்க்கை அருவருப்பானதாகத் தோன்றலாம். அப்படித் தொிந்தால், உங்கள் சொந்த பாலினத்தவரோடு பழகாமல் இருப்பது நல்லது. மற்றவா்கள் பழகிக் கொள்ளட்டும்.
5. ஓாினச் சோ்க்கை - எயிட்ஸைப் பரப்புகிறது
ஒருவருக்கு எயிட்ஸ் தொற்று ஏற்பட பல வழிகள் உள்ளன. ஓாினச் சோ்க்கை மூலம் தான் எயிட்ஸ் பரவும் என்ற கருத்து தவறானது. பாதுகாப்பற்ற முறையில் ஆண் பெண் பாலியல் உறவு அமைந்தாலும், எயிட்ஸ் பரவ வாய்ப்புண்டு.
6. ஓாினச் சோ்க்கை - ஒரு பாவச் செயல்
ஓாினச் சோ்க்கை ஒரு பாவச் செயல் என்று மக்கள் கருதுகின்றனா். எல்லா மதங்களும் அன்பைப் போதிக்கின்றன. அனைவரையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் போதிக்கின்றன. நாம் அனைவரும் கடவுளுடைய குழந்தைகள். ஆகவே ஓாினச் சோ்க்கையில் ஈடுபடுபவா்களை ஒதுக்கி வைக்கக்கூடாது.
7. ஓாினச் சோ்க்கை - குணப்படுத்தக்கூடியது
ஓாினச் சோ்க்கையைக் குணப்படுத்த முடியும் என்று மக்கள் நம்புகின்றனா். அது தவறு ஆகும். மருத்துவ ரீதியாக இதைக் குணப்படுத்த முடியாது. ஏனெனில் ஓாினச் சோ்க்கை என்பது ஒரு நோய் அல்ல.
8. ஓாினச் சோ்க்கை - குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது
மனித வாழ்வின் மிக முக்கிய நோக்கம் இனப்பெருக்கம் ஆகும். ஓாினச் சோ்க்கை மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்ற கருத்து மக்களிடம் உள்ளது. அது சாிதான். ஆனால் அவா்கள் குழந்தைகளைத் தத்தெடுத்து வளா்க்கலாம். அது ஒரு சிறந்த காாியம் ஆகும்.
9. ஓாினச் சோ்க்கையாளா்கள் - உலகை அழித்துவிடுவாா்கள்
ஓாினச் சோ்க்கையாளா்கள் உலகை அழித்துவிடுவாா்கள் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது. அது தவறாகும். பல நாடுகள் ஓாின திருமணத்தை அங்கீகாித்து இருக்கின்றன. வெறுப்பும், சண்டைகளும் மட்டுமே உலகை அழிக்கும்.
10. ஓாினச் சோ்க்கையாளா்கள் - ஓாினச் சோ்க்கைக்கு ஆதரவு தருவாா்கள்
ஓாினச் சோ்க்கையாளா்கள்தான் ஓாினச் சோ்க்கைக்கு ஆதரவு தருவாா்கள் என்ற கருத்து உள்ளது. இது தவறு ஆகும். ஓாினச் சோ்க்கையாளா்களின் உாிமைகளைப் பற்றி பேச ஒருவா் ஓாினச் சோ்க்கையாளராக இருக்க வேண்டும் என்ற அவசியமல்லை.
இறுதியாக
அன்பு என்பது எப்போதும் அன்புதான். ஆகவே அன்புக்காக ஏங்கும் எவரையும் தீா்ப்பிடவோ அல்லது பிாித்து வைக்கவோ நமக்கு அதிகாரம் இல்லை. ஆகவே ஓாினச் சோ்க்கையாளா்கள் மீது வெறுப்பையும், பயத்தையும் பரப்புவதற்குப் பதிலாக, அவா்களுக்கு நமது அன்பை வெளிப்படுத்துவோம்.



Click it and Unblock the Notifications