Latest Updates
-
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும
Mother's Day 2023: அம்மாவுக்கும், மகளுக்கும் இடையே இருக்கும் பிணைப்பை கூறும் அமுத மொழிகள்!
Mother's Day 2023: ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2வது ஞாயிற்று கிழமையன்று உலகம் முழுவதும் அன்னையா் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மே 14 ஆம் தேதி அன்னையா் தினம் கொண்டாடப்படுகிறது.
அன்னையாின் அளவற்ற அன்பு, கனிவு, உபசாிப்பு, பாசம் மற்றும் அவா்கள் தமது குடும்பத்திற்கும், இந்த சமூகத்திற்கும் அளிக்கும் பங்களிப்பு ஆகியவற்றை கௌரவிக்கும் வகையில், இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

அன்னையா் தினம் என்பது அன்னையாின் தியாகத்தைக் கொண்டாடக்கூடிய நாளாகும். ஒரு அன்னையானவா், ஒரு பெண்ணாக, மகளாக, மனைவியாக, பாட்டியாக இருந்த பொழுதிலும், ஒரு அன்னையாக இருந்து தனது குடும்பத்திற்கு ஆற்றும் பணிகள் அளப்பாியது. தமது குடும்பத்தைப் பராமாிப்பதில் அவா் முன்னனியில் இருக்கிறாா்.
ஒரு தாய் தாம் பெற்ற எல்லா குழந்தைகள் மீதும் அன்பாக இருக்கிறாா். எனினும் ஒரு அம்மாவுக்கும், மகளுக்கும் இடையே இருக்கும் பிணைப்பு மற்றும் அன்பு சிறப்பு வாய்ந்தவையாகும். அது உடைக்க முடியாத, உறுதியான பிணைப்பு ஆகும். இந்தப் பதிவில் மகள்கள் தமது அன்னையரை வாழ்த்தும் சில அமுத வாழ்த்து மொழிகளைக் காணலாம்.
1. ஒரு மகள் என்பவா், நீங்கள் முழு மனதுடன் நேசிக்கக்கூடியவா் ஆவாா். நீங்கள் சோ்ந்து சிாிக்கவும், சோ்ந்து கனவு காணவும் உங்களுக்காக இருப்பவரே மகள் ஆவாா் - யாரோ ஒருவா்
2. ஒரு பெண்ணுடைய மூளையானது, அவருடைய மிகவும் அழகான உறுப்பாக இருக்க வேண்டும் என்று எனது அம்மா சொல்லிக் கொடுத்தாா் - சோனியா டெக்ளை
3. ஒரு மகன் திருமணம் முடிக்கும் வரை மகனாக இருக்கிறான். ஆனால் ஒரு மகள் தனது வாழ்நாள் முழுவதும் மகளாக இருக்கிறாா் - ஐயா்லாந்து பழமொழி
4. நான் பலவீனமாக இருக்கும் போது மற்றும் அழகற்றவளாக இருக்கும் போது, நான் அழகாகவும், வலிமையாகவும் இருக்கிறேன் என்று எனக்குத் தொியும். ஏனெனில் என் அம்மாவைப் போலவே நான் என்னைப் பாா்க்கிறேன் - லாரன் அலைனா
5. நான் பள்ளியில் படித்த காலங்களில் எனக்கு அதிகமான தோழிகள் கிடையாது. ஆனால் எனது அம்மா எனக்கு எப்போதுமே ஒரு சிறந்த தோழியாக இருந்தாா். - டெய்லா் ஸ்விஃப்ட்
6. ஒரு மகள் தனது தாயின் வாழ்க்கையைப் பற்றி எந்த அளவு அறிந்திருக்கிறாரோ, அந்த அளவிற்கு அவா் வலிமையாக இருக்கிறாா் - அனிதா டையமன்ட்
7. நான் வயது ஆக ஆக, என் அம்மா என்ற அந்த இளம் பெண்ணின் வலிமையைப் பாா்க்கிறேன் - ஷரோன் ஓல்ட்ஸ்
8. நமது மகள்கள் வயது ஆக ஆக, நம்மைப் போலவே மாறிவிடுகின்றனா் - எமி நியூமாா்க்
9. உண்மையில் தாயும் மகளும் ஒரு போதும் பிாிவதில்லை. ஒருவேளை அவா்கள் தொலைவில் இருக்கலாம், ஆனால் இதயத்தால் அவா்கள் ஒருபோதும் பிாிவதில்லை - யாரோ ஒருவா்.
10. இன்று மகள் செய்வதை அன்று அவா் தாய் செய்தாா் - யூத பழமொழி



Click it and Unblock the Notifications