Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 5 ராசிக்காரங்க மத்தவங்களுக்கு உதவ பணத்தை தண்ணியா செலவழிப்பாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
மனித வாழ்வின் அடிப்படைத் தத்துவமே பகிர்தலை அடிப்படையாகக் கொண்டதுதான். அன்போ, பணமோ உணவோ எதுவாக இருந்தாலும் அதனை இல்லாதவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போதுதான் ஒருவரின் வாழ்க்கை முழுமையடைகிறது. ஆனால் இந்த பகிரும் குணம் துரதிர்ஷ்டவசமாக அனைவரிடமும் இருப்பதில்லை.
ஒரு பரோபகாரர் என்பவர் தனது பணம், நேரம், திறமை அல்லது அனுபவத்தை மற்றவர்களுக்கு உதவுவதற்காகவும், தான் வாழும் உலகத்தை ஒரு சிறந்த இடமாக உருவாக்குவதற்காகவும் நன்கொடையாக வழங்குபவர்.

அவர்கள் பிறருக்கு சேவை செய்வதற்காக எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்கிறார்கள். நம்மில் சிலர் நமக்கேத் தெரியாமல் நல்ல காரியங்களைச் செய்ய விரும்பும் பரோபகாரர்களாக இருப்போம். ஜோதிடத்தின் படி சில ராசிக்காரர்கள் இந்த தாராள மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் பிறருக்கு தொண்டு செய்வதை விரும்பும் தாராள மனதை பிறப்பிலேயே கொண்டவர்கள். அவர்கள் பிறருக்கு உதவவும், அவர்களுக்குச் சேவை செய்யவும் விரும்புவார்கள். அவர்கள் அதைச் செய்வதில் மனஅமைதியைக் காண்கிறார்கள் மற்றும் மக்களை சிரிக்க வைக்க விரும்புகிறார்கள். பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்களில் கும்ப ராசிக்காரர்கள் எப்போதும் முதலிடத்தில் இருப்பார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் எப்போதும் புதிய அனுபவங்களை விரும்பும் சாகசக் காதலர்கள். பொருள் சார்ந்த விஷயங்களில் அவர்களுக்கு எப்போதும் ஈர்ப்பு இல்லை. எனவே அவர்கள் தங்களுடைய உடைமைகளை மற்றவர்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு எளிதாக தானம் செய்யலாம். இது அவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைப் பெற உதவும். மேலும் அவர்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த துணையாக எப்போதும் இருப்பார்கள்.
கடகம்
அன்பான ராசிகள் என்று வரும்போது அதில் கடக ராசிக்காரர்களை ஒருபோதும் தவிர்க்க இயலாது. கடக ராசிக்காரர்கள் மற்றவர்களை அன்போடும், அவர்களைக் கவனித்துக்கொள்வதையும் விரும்புபவர்கள். அவர்கள் தங்களுடன் இருக்கும் அனைவரின் மீதும் சமமான அரவணைப்பையும் ஆறுதலையும் வழங்க விரும்புகிறார்கள். இந்த நபர்கள் எப்பொழுதும் தங்களின் தேவைகளை விட மற்றவர்களின் தேவைகளை முதலிடத்தில் வைத்து அவர்களின் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்க முயற்சி செய்கிறார்கள்.
கன்னி
எப்போதும் பர்பெக்ட்டானதை விரும்பும் ராசிக்காரர்களான கன்னி ராசிக்காரர்கள் எப்போதும் தங்களை சார்ந்தவர்களுக்கு சிறந்ததைச் செய்ய முயற்சிப்பார்கள். அவர்கள் அறிவுரை வழங்குவதில் சிறந்தவர்கள் மற்றும் எப்போதும் மற்றவர்களின் பிரச்சினைகளை சரியான தீர்வுடன் தீர்க்க முயற்சிப்பார்கள். ஒரு கன்னி ராசிக்காரர்கள் உங்களுக்கு உதவிசெய்யும் போது அவர்கள் உங்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை நிச்சயம் தீர்த்து வைப்பார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் உண்மையான பரோபகாரர்கள், அவர்கள் தங்கள் உடைமைகளை தேவைப்படுபவர்களுக்கு தானம் செய்ய எப்போதும் தயாராக இருப்பார்கள். அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எந்தவொரு பொருளாசை விஷயங்களிலும் வீணாக்க விரும்ப மாட்டார்கள், மாறாக அதை வேறொருவரின் முன்னேற்றத்திற்காக ஒரு நல்ல நோக்கத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.



Click it and Unblock the Notifications

