Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உலகெங்கிலும் உள்ள மிகவும் விசித்திமான சில முதல் மாதவிடாய் மரபுகள்! அட இப்படியெல்லாம் கூடவா இருக்கும்?
Menstrual Hygiene Day 2025: மாதவிடாய் என்பது ஒரு சாதாரண உயிரியல் செயல்முறை. மேலும் இது ஒரு பெண்ணின் இனப்பெருக்க ஆரோக்கியத்தின் முக்கிய அறிகுறியாகும். ஆனால் பல கலாச்சாரங்களில், இந்த மாதவிடாய் காலமானது ஒரு தீண்டக்கூடாத அல்லது பெண்களை ஒதுக்கி வைக்கும் ஒன்றாக கருதப்படுகிறது. என்ன தான் மார்டன் உலகில் வாழ்ந்து வந்தாலும், பல்வேறு துறைகளில் மாற்றம் ஏற்பட்டாலும், இன்னும் மாதவிடாயை சுற்றி பல மூடநம்பிக்கைகளும், தவறான எண்ணங்களும் உலகெங்கிலும் நீடித்து வருகின்றன.
அதுவும் ஒரு பெண் முதல் மாதவிடாயை சந்திக்கும் போது உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு மரபுகள் பின்பற்றப்படுகின்றன. அதில் உலகின் சில பகுதிகளில் மேற்கொள்ளும் முதல் மாதவிடாய் மரபுகளானது விசித்திரமாகவும், அதிர்ச்சியூட்டும் வகையிலும் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் மே 28 ஆம் தேதி மாதவிடாய் சுகாதார தினம் என்பதால், உலகெங்கிலும் உள்ள அந்த விசித்திரமான முதல் மாதவிடாய் மரபுகளைக் காண்போம். இதில் சில முகத்தை சுளிக்கும் வகையில் மோசமாக இருக்கும்.

1. பிலிப்பைன்ஸ்
பிலிப்பைன்ஸில் ஒரு பெண் முதல் மாதவிடாயை சந்தித்தால், அந்த பெண்ணின் உள்ளாடையை நீரில் அலசி, அந்த நீரை அப்பெண்ணின் முகத்தை தெளிப்பார்களாம். இப்படி செய்வதனால் முகப்பருக்கள் வராமல், முகம் பளபளப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை அங்கு உள்ளது. இது மிகவும் அதிர்ச்சியூட்டும் ஒரு மோசமான மரபு என்றே கூற வேண்டும்.
2. கானா
கானாவில், முதல் முறை ஒரு பெண் மாதவிடாயை சந்திக்கும் போது, அந்த பெண் வேக ஒரு முழு முட்டையை அப்படியே விழுங்க வேண்டுமாம். ஒருவேளை அப்படி விழுங்கும் போது அப்பெண் முட்டையை கடித்துவிட்டால், அது அவளது குழந்தையை கொல்வதற்கு சமமாக நம்பப்படுகிறது.
3. துருக்கி
துருக்கியில் ஒரு பெண் முதல் முறை மாதவிடாயை சந்தித்தால், அப்பெண்ணின் கன்னத்தில் ஒரு அறை கொடுக்கும் வழக்கம் உள்ளது. இப்படி செய்வதனால் அந்த பெண்ணின் கன்னம் எப்போதும் சிவந்திருப்பதோடு அழகாக மாற்றும் என்று நம்பப்படுகிறது. இந்த பாரம்பரியம் மெதுவாக மறைந்து வந்தாலும், சில சமூகங்களில் இது இன்னும் பின்பற்றப்படுகிறது.
4. மேற்கு வங்கம்
மேற்கு வங்காளத்தில் சில கிராமபுறங்களில் மிகவும் விசித்திரமான பாரம்பரியம் உள்ளது. அது ஒரு பெண் முதல் முறை மாதவிடாயை சந்திக்கும் போது, அந்த பெண் தனது மாதவிடாய் இரத்தத்தை பால் மற்றும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து குடிக்கும் சடங்கு உள்ளது. இப்படி செய்வது உடலுக்கு சக்தி கிடைப்பதாக நம்பப்படுகிறது.
5. ஜப்பான்
ஜப்பானில் உள்ள ஒரு பெண் முதல் மாதவிடாயை சந்தித்தால், அந்த பெண்ணின் அம்மா, அவளுக்கு சிவப்பு அரிசியைக் கொண்டு ஒரு உணவை செய்து கொடுப்பாராம். இந்த உணவில் பீன்ஸ், எள்ளு விதைகள் மற்றும் வேர்க்கடலை போன்றவை சேர்க்கப்பட்டிருக்குமாம். இந்த உணவை அந்த பெண்ணின் முழு குடும்பத்தினரும் சாப்பிட்டு, மகிழ்ச்சியாக இதை கொண்டாடுவார்களாம்.
6. பிரேசில்
பிரேசிலில் உள்ள டிகுனா என்னும் பழங்குடியினர் ஒரு தனித்துவமான பாரம்பரியத்தை பின்பற்றுகின்றனர். அது முதல் மாதவிடாயை சந்திக்கும் பெண், வீட்டை விட்டு வெளியே சென்று, தனியாக ஒரு வீட்டில் ஒரு ஆண்டு காலம் இருக்க வேண்டும் மற்றும் இந்த பெண்ணின் பாட்டி மட்டும் தான் இவளை காண வர வேண்டுமாம். இக்காலத்தில் இப்பெண்ணின் பாட்டி அவளுக்கு பாரம்பரிய வழக்கங்களை சொல்லிக் கொடுப்பாராம்.
7. அசாம்
இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தில் ஒரு தனித்துவமான பாரம்பரியம் உள்ளது. அது ஒரு பெண் முதல் மாதவிடாயை சந்திக்கும் போது, அவள் சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பின் அவருக்கு ஒரு வாழைமரத்துடன் திருமணம் நடத்தப்படுமாம். இந்த சடங்கு தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கிறது மற்றும் திருமணத்திற்கு முன் அப்பெண்ணை சுத்திகரிப்பதாக நம்பப்படுகிறது.
8. இஸ்ரேல்
இஸ்ரேலில் ஒரு பெண் முதல் மாதவிடாயை சந்தித்தால் ஒரு மென்மையான பாரம்பரியம் பின்பற்றப்படுகிறது. அது என்னவெனில், அப்பெண்ணுக்கு ஒரு ஸ்பூன் தேன் கொடுக்கப்படும். இதனால் எதிர்காலத்தில் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் வலி தடுக்கப்படுவதாக மக்கள் நம்புகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
