Latest Updates
-
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்!
உங்க அலுவலகத்தில் வெற்றி உங்களை தேடி வரணுமா? இந்த பொருட்களில் ஒன்றை உங்க மேஜையில் வையுங்க போதும்...!
நாம் வேலை செய்யும் அலுவலகத்தின் சூழல் என்பது நம் ஒட்டுமொத்த நல்வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. ஏனெனில் நாம் வீட்டில் செலவழிக்கும் நேரத்தை விட அலுவலகத்தில்தான் அதிக நேரத்தை செலவழிக்கிறோம். இந்த வாழ்க்கை முறையில் அலுவலக சூழல் நேர்மறையானதாகவும், அழுத்தம் இல்லாததாகவும் இருக்க வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான அலுவலகங்கள் மிகுந்த அழுத்தம் நிறைந்ததாகவே இருக்கிறது. உங்கள் பணிச்சூழல் அழுத்தம் நிறைந்ததாக இருந்தால் அதனை நேர்மறையானதாக மாற்ற சில எளிய வழிகளை பின்பற்றலாம்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்கள் அலுவலக மேஜையில் அல்லது அலுவலகத்தில் சில பொருட்களை வைப்பதன் மூலம் உங்கள் அலுவலகத்தில் நேர்மறையான சூழலை ஏற்படுத்துவதுடன் அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் உங்களை நோக்கி ஈர்க்கும்.
செடிகள்
பசுமையான செடிகள் எப்பொழுதும் நேர்மறையான சூழலை ஏற்படுத்துவதாகும். உங்கள் அலுவலக மேஜையில் ஏதேனும் ஒரு பசுமையான செடியை வைப்பது உங்கள் மனஅழுத்தத்தை குறைக்கும். வாஸ்து கூறும் சில அதிர்ஷ்ட செடிகளை வைப்பது பாசிட்டிவ் ஆற்றலுடன், அதிர்ஷ்டத்தையும் ஈர்க்கும். நீங்கள் அலுவலகத்தில் வளர்ச்சியை ஊக்குவிக்க முயற்சிக்கும்போது, எந்த தாவரங்களை சேர்க்க வேண்டும் மற்றும் எதை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசிய.
வெவ்வேறு தாவரங்கள் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளன, ஆனால் பொதுவாக, தாவரங்கள் வளர்ச்சியைக் குறிக்கின்றன மற்றும் அடையாளப்படுத்துகின்றன. எனவே உங்கள் அலுவலக மேசையில் அவற்றை வைத்திருப்பது நீங்கள் வேலையில் வளர்ந்து நன்றாக முன்னேறுகிறீர்கள் என்று அர்த்தம்.
வெள்ளி பொருட்கள்
வெளிப் பொருட்கள் நேர்மறை ஆற்றலை பரப்பக்கூடிய சக்தி கொண்டவை. அதனால்தான் வீட்டின் சாவிக்கொத்தில் வெள்ளி சேர்க்கப்படுகிறது. இது அலுவலங்களுக்கும் பொருந்தும். எனவே உங்கள் அலுவலக மேஜையில் வெள்ளிப் பொருட்களை வைப்பது நேர்மறை ஆற்றலையும், முன்னேற்றத்தையும் குறிக்கும். இது உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கான வளர்ச்சியை உறுதிப்படுத்தும்.
தண்ணீர்
நீர் சமநிலை, நேர்மறை ஆற்றல் மற்றும் செல்வத்தை குறிக்கிறது. ஒரு மினியேச்சர் நீர் நீரூற்று அல்லது ஆற்றல் மற்றும் படைப்பாற்றலின் ஓட்டத்தை அடையாளப்படுத்த ஆறு அல்லது நீர்வீழ்ச்சி போன்ற பெரிய நீரின் ஓவியம் அல்லது புகைப்படத்தை வைக்கலாம். நகரும் நீரோட்டங்களைக் கொண்ட ஒரு சிறிய மீன் தொட்டியையும் நீங்கள் வைத்திருக்கலாம். இது உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும்.
படிகங்கள் அல்லது கற்கள்
படிகங்கள் கெட்ட ஆற்றலை உறிஞ்சி, அவை இருக்கும் சூழலைச் சுத்தப்படுத்துகின்றன. படிகங்கள் மற்றும் சிறிய உலோகச் சிற்பங்களை மேஜையில் வைப்பது உங்களை சுற்றியுள்ள ஆற்றலை சமநிலைப்படுத்துகிறது. படிகங்கள் உங்கள் மேசையின் வலது மூலையில் வைக்கப்பட வேண்டும். இது வேலையில் உள்ள அழுத்தமான ஆற்றல்களை தகர்த்தெறிய உதவுகிறது. இது 'தந்திரமான' நபர்கள் அல்லது உங்களை ஏமாற்ற விரும்புபவர்களிடமிருந்து வரும் தாக்குதல்களையும் குறைக்கலாம். படிகங்களை மிகவும் பயனுள்ளதாக இருக்க அவற்றைத் தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும்.
கண்ணாடிகள்
அலுவலக மேஜையில் கண்ணாடி தந்திரமான இடத்தில் வைக்கப்பட வேண்டும். சூரிய ஒளியை பிரதிபலிக்கும் இடத்தில் கண்ணாடி வைக்கப்பட வேண்டும். இது நேர்மறை ஆற்றலை பிரதிபலித்து உங்களுக்கு முன்னேற்றத்தைக் கொண்டுவரும். தவறான இடத்தில் கண்ணாடி வைக்கப்பட்டால் அது உங்கள் வாழ்க்கையில் எதிர்மறை ஆற்றலை இருமடங்காக அதிகரிக்கும்.
உண்டியல்
பணம் சேர்க்கும் உண்டியல் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. இதனை அலுவக மேஜையில் வைப்பதும், அதில் தினமும் ஒரு நாணயம் போடுவதும் உங்களுக்கு தொடர்ச்சியான முன்னேற்றத்தையும், அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். பிளாஸ்டிக் உண்டியலுக்குப் பதிலாக உலோகத்தால் செய்யப்பட்ட உண்டியலை வைப்பது நல்ல பலன்களை அளிக்கும். உண்டியலை மேஜையின் மேற்கு, வடமேற்கு அல்லது வடக்கு திசையில் வைக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications

