Latest Updates
-
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்!
நடிகர் சென்றாயன் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்!
நடிகர் சென்றாயன் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்!
இதுவரை தான் நடித்த திரைப்படங்களில் காமெடி மற்றும் வில்லன் கதாப்பாத்திரங்கள் ஏற்று அதிகம் நடித்திருந்தாலும், பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியில் தற்சமயம் மக்களிடம் ஹீரோவாக காணப்படும் நபர் சென்றாயன் தான்.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரையும் போலியாக காணும் மக்கள், இவரையும், பொன்னம்பலம் இருவரையும் தான் நேர்மையாக நடந்துக் கொள்வதாக கருதுகிறார்கள்.
சென்றாயன் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்த வந்தவர். முறையான கல்வி படிப்பு பெறாதவர். அவரது தவறான ஆங்கிலமும் அவருக்கு பக்கபலமாக இருக்கிறது. வீட்டில் இருக்கும் சிலர் சென்றாயன் வெகுளியாக நடிக்கிறார் என்ற குற்றசாட்டும் வைத்துள்ளனர்.
ஆனால், நிஜத்தில் சென்றாயன் யார்? அவர் வெகுளியா? கோபக்கார ஆளா? அவர் கோபம் எப்படி? யார் மீது வெளிப்படும். ஒரு சாதான சாமானிய மனிதனாக தன் வாழ்வில் சென்றாயன் எப்படிப்பட்டவர் என்று இந்த தொகுப்பில் காணலாம்...

போராட்டம்!
சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்த சென்றாயனுக்கு எடுத்தவுடன் வாய்ப்பு கிடைத்துவிடவில்லை. கிடைக்கும் வேலைகளை செய்வது, கையில் பணம் இல்லாத சூழலில் கடைகளில் சாப்பாட்டுக்காக வேலை கேட்டு அலைந்த நிகழ்வுகளும் அவரது வாழ்வில் நடந்துள்ளன.
ஏறத்தாழ சினிமாவில் ஒரு நல்ல வாய்ப்புக்காக 15 ஆண்டுகள் போராடி இருக்கிறார் சென்றாயன். அதற்கு பிறகு தான், பொல்லாதவன் படத்தில் பைக் திருடும் நபர் கதாப்பாத்திரம் அவருக்கு கிடைத்தது.

கயல்விழி!
சென்றாயனின் நண்பரின், நண்பர் தான் கயல்விழி. தன் நண்பர் மூலமாக சென்றாயன் உடன் அறிமுகமாகி சாதரணமாக பயணித்த நட்பு நாள்பட காதலாக மாறியது. தங்கள் காதலை கயல்விழி பெற்றோரிடம் எடுத்து செல்ல, அவர்கள் எல்லா பெற்றோர் போல காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவர்களிடம் காதல் குறித்து எடுத்துக் கூறி, சமாதானபடுத்தி திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள வைத்திருக்கிறார்கள். நீண்ட கால காதல் 2013ல் இவர்களை திருமணத்தில் இணைத்தது.

திட்டம்?!
இன்று சிலர் சென்றாயன் வெகுளி போல நடிக்கிறார், அவர் திட்டமிட்டு தான் இப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால், சென்றாயன் இயல்பாகவே வெகுளி தான்.
அவருக்கு ஒரு விஷயத்தை எடுத்து கூறி புரிய வைப்பது கடினம். இதனாலேயே எங்களுக்குள் அதிகம் சண்டை வரும் என்கிறார் சென்றாயனின் மனைவி கயல்விழி. மற்றபடி சென்றாயன் நிஜமாகவே வெகுளி தான்.
அவருக்கு திட்டமிட்டு ஒரு செயலை செய்ய வராது. அதுக்கு எல்லாம் அவர் சரிப்பட்டு வரமாட்டார் என்றும் தான் அளித்த பேட்டி ஒன்றில் கயல்விழி நகைச்சுவையாக கூறியுள்ளார்.
மேலும், சென்றாயன் என்றாலே அவரது சுருள் முடி தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். தனது அடையாமாக சென்றாயனும் அதை தான் கருதுகிறார். அதனால், தான் தனது முடியை பெரிதாகவும், கட் செய்யாமலும் பேணிக்காக்கிறாராம் சென்றாயன்.

கோபம்!
இன்று பிக் பாஸ் வீட்டில் சென்றாயன் யார் என்ன செய்தாலும் அமைதியாக நடந்துக் கொள்கிறார். ஆனால், டேனியல் சென்றாயனுக்கு அதிகமாக கோபம் வரும். அவர் இப்போது மாறிவிட்டாரா, அல்ல நடிக்கிறாரா என்று தெரியவில்லை என்றும் நிகழ்ச்சியில் கூறி இருந்தார்.
ஆனால், சென்றாயனுக்கு கோபம் வரும் என்பது உண்மை தான். ஆனால், அது கயல்விழி மேல் மட்டும் தான். உறவினர்கள், நண்பர்கள், உடன் பணிபுரியும் நபர்கள் என யார் மீதும் சென்றாயன் தன் கோபத்தை வெளிப்படுத்துவது இல்லை.
என்ன கோபம் வந்தாலும் அது மொத்தமும் கயல்விழி மீது மட்டும் தான் வெளிப்படுத்துவாராம். வீட்டில் புலி, ரோட்டில் எலி என்பார்களே... அப்படியான சுபாவத்தை பின்பற்றி வந்திருக்கிறார் சென்றாயன்.

உணவு!
சென்றாயன் சாப்பிட சென்ற போது, தட்டில் இருந்த உணவுடன் பிளேட் பிடுங்கப்பட்ட சம்பவம் பலர் மத்தியிலும் ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியது.
உண்மையில் ஒரு திருமண விழாவில் திருட்டுத்தனமாக சாப்பிட சென்ற போது, இலையில் சாப்பாடு பரிமாறப்பட்ட பிறகு, முதல் வாய் எடுத்து உண்ணும் போது, கண்டறிந்து திருமண வீட்டார் அவரை வெளியே அனுபிவிட்டார்கள் என்று சென்றாயன் தானே கூறி இருந்தார்.
உண்மையிலும் கூட அதிகம் சாப்பிடும் பழக்கம் இல்லாத நபர் சென்றாயன். குறைந்தபட்சம் பிடித்த உணவாக இருந்தாலாவது சிலர் அதிகம் சாப்பிடுவார்கள். ஆனால், சென்றாயன் தனக்கு பிடித்த உணவை சமைத்தாலும் கூட குறைவாக தான் சாப்பிடுவாராம்.

பிடிப்பு இல்லை!
காதலித்து திருமணம் செய்திருந்தாலுமே கூட, இதுநாள் வரை சென்றாயன் அவர்களுக்கு குடும்பத்தில், உறவில் ஒரு பிடிப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பிறகாவது, அவருக்கு குடும்பத்தின் மீதும், உறவுகள் மீதும் ஒரு பிடிப்பானாம் உருவாகும் என்று அவரது மனைவி கருதுகிறார். மேலும், இனிமேல்... சென்றாயனுக்கு உறவுகள் மீது ஒரு பிடிப்பு உருவாக வேறொரு நற்செய்தியும் காத்திருக்கிறது.

குழந்தை!
திருமணமாகி நான்காண்டுகள் ஆகியும் சென்றாயன் - கயல்விழி தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. சமீபத்தில் கூட நிகழ்ச்சியில் சென்றாயன் கமலிடம் நீங்கள் அனுமதி அளித்தால் குழந்தை தத்தெடுத்து வளர்ப்பேன் என்று கூறி இருந்தார்.
ஆனால், சென்றாயனுக்கு ஒரு நற்செய்தி காத்திருக்கிறது. கயல்விழி கருவுற்றிருக்கிறார். சென்றாயன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சில நாட்களில் இந்த இன்பசெய்தி அறியவந்துள்ளது.
எனவே, அவர் நூறு நாட்கள் இந்த நிகழ்ச்சியில் வென்று திரும்பும் போது, அதை கூறவேண்டும் என்று கயல்விழி பேரார்வத்துடன் காத்திருக்கிறார்.



Click it and Unblock the Notifications