Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
சினிமா நட்சத்திரங்களின் விசித்திரமான பொழுது போக்குகள்!!!
சினிமா நட்சத்திரங்கள் என்பவர்கள் பல பேருக்கு வழிக்காட்டுதலாக உள்ளனர். ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு சினிமா நடிகரை பிடிக்கும். அந்த நட்சத்திரங்களை பின்பற்றி அவர்களை போலவே இவர்களும் இருக்க விரும்புவார்கள். அதனால் சினிமா நட்சத்திரங்கள் என்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகமாகிறது. அவர்களை இந்த உலகமே திரும்பி பார்ப்பதால் அவர்கள் என்ன செய்தாலும் அதில் கவனம் தேவை. அதனால் அவர்களுக்கு ஏதேனும் வினோதமான பொழுது போக்கு இருந்தால் அதனை அனுபவிக்க அவர்கள் சிரமப்படுவார்கள். சில சினிமா நடிகர்களுக்கு இவ்வகையான விந்தையான பொழுது போக்குகள் இருக்கத் தான் செய்கிறது. அதனை அவர்கள் வெளிப்படையாக கூறவும் செய்துள்ளனர்.
இவ்வகை சினிமா நடிகர்களை பின்பற்றும் ரசிகர்களும் கூட அவர்கள் ஈடுபட்டிருக்கும் விசித்திரமான பொழுதுபோக்குகளை பார்த்து ரசிக்க ஆரம்பித்துள்ளனர். இந்த நட்சத்திரங்களுக்கு இருக்கும் இந்த விந்தையான பழக்கத்தை என்னும் போது நமக்கெல்லாம் வேடிக்கையாக கூட தோன்றும். அவர்களை திரையில் பார்க்கும் போது ஒரு விதமாக கற்பனை செய்து வைத்திருப்போம். இவ்வகை பொழுது போக்குகளில் அவர்கள் ஈடுபட்டிருக்கும் போது அவர்கள் தான் இவர்கள் என்று நமக்கே சந்தேகம் ஏற்படும்.
ALSO KNOW: Embarrassing Celebrity Moments
அப்படி பட்ட சில விந்தையான பொழுது போக்குகளை நாமும் தான் தெரிந்து கொள்வோமே. இவ்வகை பொழுது போக்குகள் அவர்களை நம்மை போல் ஒரு சாதாரண மனிதனாகவே எடுத்துக் காட்டுகிறது. விந்தையான பொழுது போக்குகளிலே சிறந்தவைகள் சிலவற்றை பார்க்கலாமா?

"டர்டி பிக்சர்" வித்யா பாலன்
"டர்டி பிக்சர்" படத்தில் நமக்கு சூட்டை ஏற்படுத்திய நடிகை வித்யா பாலனுக்கு கவிதை எழுதுவது பொழுது போக்காம். அவர் இந்த பொழுது போக்கை பற்றி அதிகமாக வாய் திறக்காவிட்டாலும் கூட, நமக்கு அவருடைய கவிதைகளையெல்லாம் என்றாவது படிப்பதில் விருப்பம் இருக்கத் தான் செய்கிறது. வித்யா பாலன் இந்த திறமையை நமக்காக விரைவிலேயே உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுவார் என்று நம்புவோம். அவர் எழுதிய கவிதைகளை அவர் தன் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருக்கமான நண்பர்களுடன் மட்டுமே இப்போது பகிர்ந்து கொள்கிறாராம்.

"ராஞ்சி ராம்" ரன்வீர் சிங்
குறும்புத்தனம் மற்றும் கலகலப்பான மனப்பான்மையை கொண்டவராக அறியப்பட்ட ரன்வீர் சிங்கிற்கு ராப் வகை பாடல்களை பாடுவது தான் பொழுதுபோக்காம். இந்திய அகான் என்று மாறும் அளவிற்கு அவருடைய இந்த பொழுதுபோக்கை மேடை ஏற்ற வேண்டும் என்பது அவருடைய ஆசையாம். தன்னுடைய திறமையை "லேடீஸ் வெர்சஸ் ரிக்கி பெஹ்ல்" என்ற படத்தில் ஒரு பாடலில் வெளிக்காட்டியிருந்தார். வருங்காலத்தில் இன்னும் பல ராப் வகை பாடல்களை அவர் பாடுவார் என்று நாம் எதிர் பார்ப்போம்.

சோனம் கபூர்
வோக் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் சமீபத்தில் கலக்கிய சோனம் கபூருக்கு அநேகக பெண்களை போல் ஷாப்பிங் செய்வது தான் பொழுதுபோக்காம். ஷாப்பிங் என்றால் அவருக்கு கொள்ளை பிரியமாம். இதில் என்ன விந்தையான விஷயம் என்று தானே கேட்கிறீர்கள்? இருக்கிறது! அவர் ஷாப்பிங் செய்யும் போது அங்கேயே சாப்பிட்டு, உறங்கி பிரார்த்தனை செய்யும் அளவிற்கு ஷாப்பிங் செய்வாராம். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் மணிக்கணக்கில் அவர் ஷாப்பிங் செய்வாராம். ஷாப்பிங்கில் அதிகமாக செலவும் செய்வாராம். ப்ராண்ட் பார்த்து பொருட்கள் வாங்குவதில் அவருக்கு அலாதி பிரியமாம். அதனால் பல ப்ராண்ட் பொருட்களை வாங்கி குமித்து வைத்திருக்கிறாராம். இந்த பொழுதுபோக்கு தான் ஆயிஷா என்ற அவரின் படத்திற்கு அவருக்கு உத்வேகமாக இருந்திருக்கும்.

சல்மான் கான்
டபாங் படத்தின் ஆக்ஷன் ஹீரோவான நம்ம சல்லு பாய்க்கு ஆக்கப்பூர்வமான ஓவியக்கலையின் மீது அலாதி பிரியமாம். அவருடைய பெர்சனாலிட்டி மற்றும் மனப்பான்மைக்கும் இந்த பொழுபோக்கு விந்தையாகத் தானே தோன்றுகிறது? சர்ச்சைக்கு பெயர் போன நம் சல்மான் கானை அவருடைய இந்த ஓவிய திறமைக்காகவும் அவரை கண்டிப்பாக உயர்த்தி காட்ட வேண்டும். அவருடைய இந்த பொழுது போக்கை எண்ணி அவருடைய ரசிகர்கள் கண்டிப்பாக சந்தோஷப்படுவார்கள்.

ஜானி டெப் (Johnny Depp)
சர்வதேச ஹாலிவுட் நடிகரான ஜானி டெப், கேப்டன் ஜாக் ஸ்பாரோ மற்றும் வில்லி வோன்கா என்ற பலதரப்பட்ட பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவருக்கு பார்பி பொம்மைகள் வாங்கி அதனுடன் விளையாடும் ஒரு விந்தையான பொழுதுபோக்கு உள்ளது. ஒரு ஆணுக்கு இவ்வகை பொழுதுபோக்கு இருக்கிறது என்றால் அது ஆச்சரியப்பட வேண்டியவை. அவரிடம் அனைத்து வகையான பார்பி பொம்மைகளும் உள்ளதாம். ஓய்வு நேரத்தில் அவைகளுடன் விளையாடுவாராம்.
நாங்கள் மேற்கூறியது சில சினிமா நடிகர் மட்டும் தான். அவர்களின் புகழ் மற்றும் கவர்ச்சியை வைத்து கூறப்பட்டவையே அவை. நம்மை போலவே சினிமா நட்சத்திரங்களும் சாதாரண விருப்பு வெறுப்புக்களை கொண்டவர்களே. அவர்களுக்கும் நம்மை போல அனைத்து பொழுதுபோக்குகளும் இருக்கத் தான் செய்யும். நமக்கெல்லாம் இந்த பொழுது போக்குகள் சாதாரணமாக தோன்றும். ஆனால் சினிமா நடிகர்கள் என்று வந்து விட்டால் இது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் அவர்களை பல ஆயிரம் பேர் ரசிகர்கள் என்ற பெயரில் குருட்டுத்தனமாக பின்பற்றுகின்றனர். அதனால் தான் ஜானி டெப்பின் பார்பி பொம்மை சேகரிப்பு பொழுதுபோக்கு பல பேருக்கு வியப்பாக இருக்கலாம். அதே போல் சல்மான் கான் ஓவியம் வரைவார் என்று கேள்விப்படுவோருக்கு அது விந்தையாக தோன்றும்.



Click it and Unblock the Notifications