Latest Updates
-
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..! -
1 கப் தேங்காயும், 1 கைப்பிடி புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
100 ஆண்டுகள் கழித்து நிகழும் அபூர்வ கிரக பெயர்ச்சி: ஜூன் 11-ல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்! -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. ஒருவாட்டி இந்த சட்னியை செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள சமசப்தக் யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்! -
கொத்தமல்லி மாங்காய் சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாருங்க.. -
உஷார்.. இந்த 5 உணவுகள் ஒருவரது ஆயுளை பாதியாக குறைக்குமாம்.. எச்சரிக்கும் டாக்டர். பிள்ளை! -
கடகம் செல்லும் சுக்கிரன்: ஜூன் 08 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.!
ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
ஒவ்வொரு கிரகங்களுக்கும் தனித் தனி முக்கியத்துவம் உள்ளது. அவை, தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கும். அப்படி, நாம் பிறக்கும்போது இருக்கின்ற கிரக அமைப்பு நிலவரப்படிதான் நம்முடைய ஜனன ஜாதகம் அமைகின்றது. கிரகங்களின் ஆதிக்கம் நமக்கு திசையாக நடந்தாலும், புத்தியாக நடந்தாலும் அதற்குரிய கோயில்களுக்கு சென்று இறைவனை வழிபட்டு வருவது நல்லது.
ஒரு மனிதனின் வாழ்வில் மொத்தம் 9 திசைகள் நடைபெறும் என ஜோதிடம் கூறுகிறது. அந்த 9 திசைகள் ஒருவருக்கு நடந்து முடிய 120 வருடங்கள் ஆகுமாம். அவை என்னென்ன திசைகள், அதன் காலம் மற்றும் பரிகாரங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

நவ கிரகங்களின் திசை மற்றும் காலம்
சூரிய திசை - 6 வருடங்கள்.
சந்திர திசை - 10 வருடங்கள்.
செவ்வாய் திசை - 7 வருடங்கள்.
ராகு திசை - 18 வருடங்கள்.
குரு திசை - 16 வருடங்கள்.
சனி திசை - 19 வருடங்கள்.
புதன் திசை - 17 வருடங்கள்.
கேது திசை - 7 வருடங்கள்.
சுக்ர திசை - 20 வருடங்கள்.
திசைகளும் வழிபாட்டு முறைகளும்
சூரிய திசை
வணங்க வேண்டிய தெய்வம் - சிவன்
அர்ச்சனை செய்ய வேண்டிய மலர் - செந்தாமரை, வில்வம்
யோகம் - சூரிய நமஸ்காரம்
வஸ்திரம் - ஆரஞ்சு நிற ஆடை
பரிகார நாள் - ஞாயிறு
தானம் - கோதுமை பண்டம்
சந்திர திசை
வணங்க வேண்டிய தெய்வம் - சக்தி அல்லது திருப்பதி.
அர்ச்சனை செய்ய வேண்டிய மலர் - வெள்ளை அல்லி, மல்லிகை.
வஸ்திரம் - வெண்ணிற ஆடை.
பரிகார நாள் - திங்கள்.
தானம் - பச்சரிசி, அன்னதானம்.
செவ்வாய் திசை
வணங்க வேண்டிய தெய்வம் - முருகன்.
அர்ச்சனை செய்ய வேண்டிய மலர் - செண்பகப்பூ.
வஸ்திரம் - சிவப்பு நிற ஆடை.
பரிகார நாள் - செவ்வாய்.
தானம் - துவரம் பருப்பு, செவ்வாழை.
புதன் திசை
வணங்க வேண்டிய தெய்வம் - மகா விஷ்ணு.
அர்ச்சனை செய்ய வேண்டிய மலர் - துளசி, வெண்காந்தள் - வாழைப்பழமும், வெண்ணெயும் கலந்த நைவேத்தியம்.
வஸ்திரம் - பச்சை ஆடை.
பரிகார நாள் - புதன்கிழமை.
தானம் - பச்சை பயிறு.
குரு திசை
வணங்க வேண்டிய தெய்வம் - திருவாலங்குடி குரு, மற்றும் திருச்செந்தூர் முருகன்.
அர்ச்சனை செய்ய வேண்டிய மலர் - முல்லை, தங்க அரளி.
வஸ்திரம் - மஞ்சள் நிற பட்டாடை.
பரிகார நாட்கள் - வியாழன்.
தானம் - கொண்டைகடலை, மஞ்சள் நிற வாழைப்பழம்.
சுக்கிர திசை
வணங்க வேண்டிய தெய்வம் - ஶ்ரீ ரங்கநாதர், மகாலட்சுமி.
மலர் - வெண்தாமரை, வெள்ளைநிற பூ.
வஸ்திரம் - வெண்ணிற பட்டு.
பரிகார நாள் - வெள்ளிக்கிழமை.
தானம் - பச்சரிசி, தேங்காய், வெண் நிற மொச்சை.
சனி திசை
வணங்க வேண்டிய தெய்வம் - சாஸ்தா.
மலர் - நீல நிற மலர்கள், கருங்குவளை.
வஸ்திரம் - கறுப்பு வஸ்திரம்.
பரிகார நாட்கள் - சனிக்கிழமை.
தானம் - காகத்திற்கு உணவு, ஏழைக்கு எள்ளு சாதம், நல்லெண்ணை தானம்.
ராகு திசை
வணங்க வேண்டிய தெய்வம் - நாகராஜன், துர்கை.
அர்ச்சனை மலர் - மந்தாரை, பால், மஞ்சள் பொடி, பால் பாயசம் நிவேதனம்.
வஸ்திரம் - நீல ஆடை.
பரிகார நாட்கள் - சனிக்கிழமை.
தானம் - பூனைக்கு உணவு, மற்றும் கறுப்பு நிற உளுந்து தானம்.
கேது திசை
வணங்க வேண்டிய தெய்வம் - சாமுண்டி, விநாயகர், நாகராஜா, ஹனுமன், சரபர்.
அர்ச்சனை மலர் - செவ்வல்லி, பால் அபிஷேகம்.
வஸ்திரம் - சிவப்பு நிறம்.
பரிகார நாட்கள் - செவ்வாய் கிழமை.
தானம் - நாய்களுக்கு உணவு, குதிரைக்கு கொள்ளு, சிவப்பு துணி தானம்.



Click it and Unblock the Notifications