Latest Updates
-
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க!
உங்க கனவில் இதெல்லாம் வந்தா.. நீங்க பணக்காரர் ஆக போறீங்கன்னு அர்த்தமாம்.. உங்களுக்கு இந்த மாதிரி வந்துருக்கா?
ஒவ்வொருவருக்குமே பணக்காரர் ஆக வேண்டுமென்ற ஒரு ஆசை இருக்கும். நீங்கள் கோடீஸ்வரர் ஆக வேண்டுமென்று விரும்புகிறீர்களா? அப்படியானால் அதற்கு நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். அதுவும் நமக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும் காலகட்டத்தில் இப்படி கடினமாக உழைத்தால், நிச்சயம் அதற்கான நல்ல பலனை உடனே கண்டு வாழ்வில் முன்னேற்றத்தைக் காணலாம். அதை உணர்த்தும் வகையில் இயற்கையானது நமக்கு ஒருசில கனவுகளை வரவழைக்கும்.
அந்த கனவுகளை கவனித்து, அப்போது கடினமாக உழைத்தால் செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழலாம். இதுவரை நீங்கள் உங்கள் கனவுகளுக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள முயலவில்லை என்றால், இனிமேலாவது புரிந்து கொள்ள முயலுங்கள். கனவுகள் நம் இதயத்துடனும் ஆழ் மனதுடனும் ஆழமான தொடர்பைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு கனவுக்கும் ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் உள்ளது.

நீங்கள் பணக்காரர் ஆக விரும்புபவரா? அப்படியானால் உங்கள் கனவில் நீங்கள் ஒருசிலவற்றை கண்டால், உங்களைத் தேடி பெரிய அளவில் பணம் வரப்போகிறது, நீங்கள் செல்வந்தர் ஆவதற்கான காலம் நெருங்கிவிட்டது என்று அர்த்தம்.
நீர்
நீருக்கும், பணத்திற்கும் ஆழமான தொடர்பு உள்ளதாக நம்பப்படுகிறது. இவ்விரண்டுமே ஒரே தன்மையைக் கொண்டவை. எனவே உங்கள் கனவில் கன மழை பெய்தாலோ அல்லது கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதைக் கண்டாலோ, விரைவில் எங்கிருந்தோ பணம் வரப்போகிறது என்று அர்த்தம். மேலும் நீங்கள் ஆறு அல்லது கடல் அல்லது நீரில் நீந்துவது போன்று கண்டால், அது அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.
வெள்ளை நிறம்
வெள்ளை நிறம் அமைதி மற்றும் செழிப்புடன் தொடர்புடையது. எனவே கனவில் ஒருவர் வெள்ளை நிற பூக்கள், வெள்ளை நிற ஆடைகள், பனியால் சூழப்பட்ட மலைகள் அல்லது வெள்ளை நிற கோவில் போன்றவற்றைக் காண்பது செல்வத்தின் அடையாளமாகும். எனவே எந்த ஒரு வெள்ளை நிற பொருட்களை கண்டாலும், அது செல்வ செழிப்பைக் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.
பழங்கள்
பழங்கள் நிறைந்த மரத்தைக் கண்டாலோ அல்லது ஆப்பிள், நெல்லிக்காய், முந்திரிப்பழம் போன்றவற்றைக் கண்டாலோ, உங்களைத் தேடி பணம் வரப் போகிறது என்று அர்த்தம். ஆனால் வாழைப்பழத்தைக் காண்பது அசுபமாக கருதப்படுகிறது. சில நேரங்களில் இது மோசமான நோயால் பாதிக்கப்படப் போவதைக் குறிக்கலாம்.
பூக்கள்
வெள்ளை அல்லது சிவப்பு நிற தாமரை, நந்தியாவட்டை பூ, சம்பங்கி, மல்லிகைப்பூ, நாகேசர் பூ, செம்மயிர்க்கொன்றை பூ போன்ற பூக்களை கனவில் காண்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த வகையான பூக்கள் கனவில் வந்தால், அது உங்கள் வாழ்க்கையில் பணம் உங்களைத் தேடி வரப்போகிறது என்பதைக் குறிக்கிறது. மேலும் லட்சுமி தேவி உங்கள் அதிர்ஷ்ட கதவை திறந்து வைக்கப் போகிறார் என்பதையும் குறிக்கிறது.
விலங்குகள்
கனவுகளில் விலங்குகள் வருவது ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை. அதுவும் யானை, மாடு, குதிரை, எருமை, தேள், திமிங்கலம், வெள்ளை நிற பாம்பு, குரங்கு, ஆமை, மான் போன்றவை உங்களுக்கு நல்ல காலம் தொடங்கிவிட்டது என்பதைக் குறிக்கின்றன. மேலும் ஒருவரது கனவில் தேனீ வந்தால் அது அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. இந்த விலங்குகளை கனவில் காண்பவர்கள் லட்சுமி தேவியின் அருளால் அபரிமிதமான செல்வத்தைப் பெறப் போகிறார்கள் என்று நம்பப்படுகிறது.
தானியங்கள்
ஒருவர் தங்கள் கனவில் தானியங்கள், கோதுமை போன்றவற்றை கண்டால், அது அந்நபரின் அதிர்ஷ்ட கதவு விரைவில் திறக்கப் போகிறது என்று அர்த்தம். இந்த கனவுகளை காண்பவர்களின் கையில் பணம் அதிகம் புரளத் தொடங்கும்.
பாத்திரங்கள்
ஒருவரது கனவில் நீர் நிரம்பிய பாத்திரம் வருகிறது என்றால், அது அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பைக் குறிக்கிறது. அதுவும் மண் பாத்திரங்களை கனவில் காண்பது இன்னமும் நல்லது. இப்படியான கனவை காண்பவர்கள் ஏராளமான செல்வத்தைப் பெறுவதோடு, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்.
மூதாதையர்கள்
கனவில் மூதாதையர்கள் வந்தால், அது அவர்களின் ஆசீர்வாதம் முழுமையாக உள்ளது என்று அர்த்தம். அதுவும் கனவில் கோவில், சங்கு, சிவலிங்கம், மெழுகுவர்த்தி, மணி, முழு நிலவு போன்றவை வருவது மங்களகரமானதாக கருதப்படுகிறது மற்றும் இது அதிர்ஷ்டத்தைத் தருகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications