Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
வெள்ளிக்கிழமையில் இதை மட்டும் செய்தால் போதும் வறுமை நீங்கும்..!
இந்து மதத்தில் லட்சுமி தேவிக்கு தனி இடம் உண்டு. செல்வத்தின் தெய்வமாக அனைவரும் லட்சுமி தேவியை வழிபடுகின்றனர். லட்சுமி தேவி செல்வம், புகழ் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் சின்னம். மாதா லட்சுமியின் ஆசீர்வாதத்தால் வீடு மற்றும் வணிகக் கருவூலம் நிரம்பி வழியும்.
லட்சுமி தேவி செல்வத்தின் தெய்வம் என்றும் அழைக்கப்படுகிறார், எனவே லட்சுமி தேவியை வழிபடுவதால் பொருளாதார நெருக்கடிகள் நீங்குவது மட்டுமல்லாமல் செல்வமும் கிடைக்கும். அதிலும் வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி தேவியை வணங்கினால் வறுமை நீங்கி செல்வம் பெருகும் என்பது ஐதீகம்..

லட்சுமி தேவிக்கு எப்போது பூஜை செய்ய வேண்டும்?
மகாலட்சுமியை நாம் எந்த அளவுக்கு மனப்பூர்வமாக வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு செல்வ செழிப்பு உண்டாகும். லட்சுமியின் அம்சமாக பல்வேறு லட்சுமியின் அவதாரங்கள் உள்ளன. அதில் உங்களுக்கு இஷ்டமான லட்சுமி தேவி எதுவோ அதை நினைத்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வழிபடுவது நல்லது..
நாளை வெள்ளிக்கிழமை காலை-மாலை இருவேளையும் லட்சுமி பூஜை செய்யப்பட வேண்டும். காலை பூஜையை அதிகாலையிலே முடித்து விட வேண்டும். மாலை நேரத்து பூஜையை 6 மணி அளவில் வைத்துக் கொள்ளலாம். மாலையில் பால் நைவேத்தியம் செய்வது நல்லது. இரு பூஜைகளிலும் லட்சுமி பாடல்களை பாட வேண்டும்.
பூஜையின் போது செய்ய வேண்டியவை
1. காலையில் குளித்து ஆடைகளை அணிந்து, சிவப்பு துணியில் லட்சுமி தேவியின் படம் அல்லது சிலையை வைக்க வேண்டும். அதே போல் ஸ்ரீ யந்திரம் வைக்க வேண்டும். முதலில் நெய் தீபம் ஏற்றவும். ஸ்ரீ யந்திரம் மற்றும் லட்சுமி தேவிக்கு அஷ்ட கந்தம் திலகமாக கொடுக்கப்பட வேண்டும்.
2. வடகிழக்கில் பூஜை வைத்து லட்சுமி தேவியை கிழக்கு திசையில் அமர்ந்து வழிபடவும். தொழுகை நடக்கும் இடத்திற்கு அருகில் சமையலறையோ, கழிவறையோ இல்லாமல் கவனம் செலுத்த வேண்டும்.
3. லட்சுமி தேவி சுத்தமான இடத்தில் வசிப்பதாக நம்பப்படுகிறது. வீடு அசுத்தமாக இருந்தால் அந்த வீட்டில் லட்சுமி தேவி நுழையமாட்டாள்.. எனவே எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமைகளில் வழிபடும் இடம் சுத்தமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது வறுமையை நீக்கி நன்மை பயக்கும்.
4. லட்சுமி தேவியை மகிழ்விக்க..அவளுக்குப் பிடித்தமான தாமரை மலர், சங்கு, சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு துணியை பூஜை அறையில் சமர்ப்பிக்கவும். இது நிதி சிக்கல்களை நீக்கும்.
5. வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து உங்கள் குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து இதை செய்து வர குடும்பத்தில் பண புழக்கம் அதிகரிக்கும்.
6. வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் சேரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட அனைத்து விதமான செல்வமும் கிடைக்கும்..
7. தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம் செய்வாள் என்பது நம்பிக்கை..
8. வெள்ளிக்கிழமையில் பூஜை முடிந்த பிறகு சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், பூ, தட்சணை வைத்து கொடுக்க வேண்டும். உங்கள் சக்திக்கேற்ப எத்தனை சுமங்கலி பெண்களுக்கு வேண்டுமானாலும் செய்யலாம். குறைந்தபட்சம் 2 சுமங்கலி பெண்களுக்காவது தானம் செய்ய வேண்டும்.



Click it and Unblock the Notifications