Latest Updates
-
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன?
பேரழிவை ஏற்படுத்திய 1941 காலெண்டரைப் போன்றே இருக்கும் 2025 காலெண்டர்.. அப்ப 2025-ம் பேரழிவு ஆண்டாக இருக்குமா?
2025 Calendar Same As 1941 Calendar: 2025 ஆம் ஆண்டின் 6 மாத காலங்கள் முடிந்துள்ளன. இந்த 6 மாத காலத்தில் மட்டும் உலகில் பல கொந்தளிப்பான விஷயங்கள் நடந்துள்ளன. அதில் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் காரணமாக இந்தியாவின் பதிலடியான ஆபரேஷன் சிந்தூர், மகா கும்ப மேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து, ரயில் விபத்துக்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இப்படி 2025 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து ஏராளமான மோசமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதோடு கிரக நிலைகளும் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே மோசமாக உள்ளன. முக்கியமாக ஜோதிட ரீதியாக இந்த ஆண்டு செவ்வாயின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இதனால் உலகில் பேரழிவுகள் ஏற்படும் என்று ஜோதிடர்கள் பலர் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் 2025 ஆம் ஆண்டின் காலெண்டர் 1941 ஆம் ஆண்டின் காலெண்டரைப் போன்றே இருப்பதாக ஒரு செய்தி பரவி வருகிறது. அதுவும் இந்த ஆண்டின் காலெண்டர் மட்டுமல்ல, நிகழ்வுகளும் அதே மாதிரி இருப்பது தான் ஆச்சரியமாக உள்ளது. என்ன புரியவில்லையா?
ஆம், 1941 ஆம் ஆண்டில் நடந்த சம்பவங்களைப் பார்த்தால், இந்த ஆண்டில் உலகில் ஒரு பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இந்த ஆண்டில் தான் இரண்டாம் உலகப் போர் நடந்தது, பஞ்சம், தொற்றுநோய், பொருளாதார நெருக்கடி போன்றவையும் இருந்தது. அதோடு இந்த ஆண்டில் தான் அமெரிக்கா ஜப்பானை தாக்க தயாரானது. மொத்தத்தில் 1941 ஆம் ஆண்டு வரலாற்றில் ஒரு இருண்ட காலங்களில் ஒன்றாகும்.
இந்த 1941 ஆம் ஆண்டின் காலெண்டர் 2025 ஆம் ஆண்டின் காலெண்டரைப் போன்றே இருப்பதோடு, சில சம்பவங்களும் அதேப் போன்று மீண்டும் நிகழ்வதை காண முடிகிறது என்றே கூறலாம். அதுவும் ஜோதிட ரீதியாக, இந்த காலெண்டரின் தேதியும், வாரமும் பொருந்துவது மட்டுமின்றி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளன.
கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலைகள்
கடந்த காலமாக 1937 ஆம் ஆண்டை எடுத்துக் கொண்டால், அப்போது நீதிமான் சனி பகவான் மீன ராசிக்குள் நுழைந்தார். அப்படி நுழையும் போது தான் இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. சீனா ஜப்பானைத் தாக்கியது, உலகில் பதட்டங்கள் மெதுவாக அதிகரித்தன. அதன் பின் சனி மேஷ ராசியில் நுழைந்த போது பேர்ல் துறைமுகம் தாக்கப்பட்டது மற்றும் ஜப்பான் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டன. இந்த காலத்தில் குரு பகவான் ஆக்ரோஷமான நிலையில் பயணித்து வந்தார் மற்றும் அப்போது பல அசுப யோகங்களும் உருவாகின.
1941-ல் நடந்த சம்பவங்கள்
* 1941 அக்டோபர் 30 ஆம் தேதியில் விமான விபத்து ஒன்று ஏற்பட்டது. அந்த விமானத்தில் பயணம் செய்த 15 பேரில் 14 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் உயிர் தப்பினார்.
* 1941 டிசம்பர் 07 அன்று ஹவாய் தீவுகளில் உள்ள அமெரிக்க கடற்படை தளமான பேர்ள் ஹார்பர் மீது ஜப்பான் திடீர் தாக்குதலை நடத்தியது. அதில் 2400 பேர் உயிரிழந்ததோடு, பெரிய சேதம் ஏற்பட்டது. இந்த தாக்குதல் காரணமாக அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் நுழைந்தது.
* 1941-ல் ஜெர்மனி சோவியத் யூனியனைத் தாக்கியது. அந்தப் போர் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது.
* மாலியில் நடந்த போரால் இராணுவம், வாக்னர் குழு மற்றும் ஆயுதக் குழுக்களுக்கு இடையேயான சண்டை முற்றியது. மக்கள் பசியால் இறந்து கொண்டிருந்தனர்.
* நாஜிக்கள் போலந்து விஞ்ஞானிகளையும் எழுத்தாளர்களையும் கொன்றனர்.
* யூதர்களின் படுகொலை
* பிரிட்டிஷ் கப்பல் ஒரு ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பலால் மூழ்கடிக்கப்பட்டது.
* பல போர்கள் தொடங்கின. அதாவது வேக் தீவு, மலாயாவில், பிலிப்பைன்ஸில், ஹாங்காங்கில் பெரும் இழப்புகளுடன் போர்கள் நடந்தன.
* முக்கியமாகக பிலிப்பைன்ஸில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
2025-ல் நடந்த சம்பவங்கள்
* 2025-ல் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குப் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா போயிங் 787-8 விமானம் விபத்துக்குள்ளாகி 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் உயிர் தப்பினார்.
* ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது, ஆனால் தற்போது அது ஒரு பயங்கரமான வடிவத்தை எடுத்துள்ளது.
* 2025 ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரில் திடீரென்று ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மே மாதத்தில் எடுத்தது. இந்தியா, பாகிஸ்தனுக்கு இடையே ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களுடன் போர் நடக்கும் சூழ்நிலை உருவானது.
* தைவானுக்கும், சீனாவிற்கும் இடையிலான பதற்றத்தால் போர் பயம் எழுந்துள்ளது.
* இஸ்ரேல், ஈரான் போர் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் வேளையில், உலகப் போர் ஏற்படும் என்ற அச்சத்தை எழுப்புகிறது.
* பல நாடுகளில் மக்கள் கிளர்ச்சிகள் மற்றும் அதிகார மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
* ஆஸ்திரேலியாவில் ஆல்ஃபிரட் புயல், ஜோர்டானில் வெள்ளம், சவுதி அரேபியாவில் புழுதிப்புயல், துனிசியா மற்றும் குவைத்தில் மோசமான வானிலை, பனிப்பாறைகள் உருகுதல் போன்ற பல இயற்கை பேரழிவுகளால் உலகம் மெதுவாக அழிந்து வருகிறது.
இப்படியான பல சம்பவங்கள் ஒரே மாதிரியாக 1941-ல் நடந்ததைப் போன்றே 2025-ல் காணப்படுவதோடு, 2025 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் 6 மாத காலங்கள் உள்ளன. இந்த காலகட்டத்தில் இன்னும் எம்மாதிரியான பேரழிவுகள் ஏற்படும் என்பதை நினைத்து ஒருவித அச்சம் மனதில் எழ தான் செய்கின்றன. இருப்பினும், பொறுத்திருந்து பார்ப்போம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications