Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சாணக்கிய நீதி படி வாழ்க்கையில் இந்த தருணங்களில் பேசாமல் அமைதியாக இருப்பதுதான் உங்களுக்கு நல்லது...!
Chanakya Niti: ஆச்சார்ய சாணக்கியர் பண்டைய இந்தியாவின் சிறந்த தத்துவவாதி, பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல்வாதி ஆவார். சாணக்கிய நீதியில் அவரது வாழ்க்கை தரிசனங்கள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான அறிவுரைகள் உள்ளன. அவரது எழுத்துக்களில் நீங்கள் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும் பற்றிய ஆழமான அறிவையும், வழிகாட்டுதலையும் பெறலாம்.
சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் ஒருவர் எப்போது பேச வேண்டும், வாழ்க்கையின் வெவ்வேறு சூழ்நிலைகளில் எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறார். இதனை கடைபிடித்தால் ஒருவர் வாழ்க்கையில் நிறைய சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

பேச்சின் முக்கியத்துவம்
ஆச்சார்ய சாணக்கியரின் அறிவுரையையின் படி, பேசும் போது, யாரிடம், என்ன பேசுகிறீர்கள் என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். நாக்கு மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் மக்கள் அதை அடிக்கடி கட்டுப்பாடு இல்லாமல் பயன்படுத்துகிறார்கள், இதனால் அவர்கள் பின்னர் வருத்தப்படுவார்கள். வில்லில் இருந்து வெளிவரும் அம்பு எப்படி திரும்பப் பெற முடியாதோ, அதே போல் நாவிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளையும் திரும்பப் பெற முடியாது. அதனால்தான் பேசுவதற்கு முன், உங்களுக்கு முன்னால் யார் இருக்கிறார்கள் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பெற்றோர்களிடம் கெட்ட வார்த்தை பேசக்கூடாது
மக்கள் கோபமாக இருக்கும்போது, அவர்களின் கோபத்திற்கு முதலில் இலக்காவது அவர்களுடைய பெற்றோர்கள்தான். இதனை நாமே பலமுறை செய்திருப்போம். மக்கள் தங்கள் பெற்றோரிடம் மிகவும் புண்படுத்தும் வார்த்தைகளைப் பேசுகிறார்கள். அந்த நேரத்தில், நாக்கு அவர்களின் அறிவை மீறுகிறது. இதனால் நீங்கள் பெரிய சாபத்திற்கு ஆளாகலாம்.
குடும்பத்தில் எப்போது அமைதியாக இருக்க வேண்டும்?
சாணக்கிய நீதியின் படி குடும்பத்தில் பெரியவர்கள் பேசும்போது குறுக்கிடாதீர்கள், அவர்களைப் பேசவிடுங்கள் என்கிறார் சாணக்கியர். சாணக்கிய நீதி படி, நண்பர்கள் பேசும்போது, அவர்கள் பேசுவதைக் குறுக்கிடாமல் முழுமையாகக் கேட்க வேண்டும். இப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பேசி முடித்த பின் நிம்மதியாக உங்கள் எண்ணங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.
எதிர்வினைகளை கவனிக்க வேண்டும்
ஒரு நபருடன் பேசும்போது, அவர்களின் எதிர்வினைகளை கவனமாகக் கவனியுங்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் அல்லது அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்களா என்பதை அவர்களின் வெளிப்பாடுகள் மற்றும் எதிர்வினைகளிலிருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
எப்போது அமைதியாக இருக்க வேண்டும்
குடிகாரர்கள், வன்முறையாளர்கள், கோபக்காரர்கள், ஆபாசமான சிந்தனை கொண்டவர்கள், கொடூரமான எண்ணம் கொண்டவர்கள், குடிபோதையில் அல்லது மயக்கமடைந்தவர்களிடம் அமைதியாக இருப்பது நல்லது என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார். இவர்களிடம் பேசுவது உங்களுக்கே ஆபத்தானதாக மாறும். மேலும், அவர்களுடன் ஏதேனும் மோதல்கள் அல்லது பிரச்சனைகள் ஏற்பட்டால், மற்ற தரப்பினர் அமைதியாகக் கேட்டு, நிதானமாக பதிலளிக்க வேண்டும். வாக்குவாதம் அல்லது சண்டை ஏற்படும் போது தொடர்ந்து பேசுவது நிலைமையை மேலும் மோசமாக்கும்.



Click it and Unblock the Notifications
