Latest Updates
-
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்..
சாணக்கிய நீதி படி இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் வாழ்க்கையில் புத்திக்கூர்மையால் சாதனையாளர்களாக இருப்பார்களாம்!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு சிறந்த அறிஞர், தத்துவஞானி மற்றும் பொருளாதார நிபுணராவார். சாணக்கியரின் அறிவுரைகளும், அவற்றின் பலன்களும் அளவிட முடியாதது. வருங்கால சந்ததியினருக்கு வாழ்வில் உள்ள சந்தேகங்களை நீக்கவும், வெற்றியை அடையவும், உறவுகளை நிலைநிறுத்தவும், பாதுகாக்கவும், செல்வம் பெறவும் என வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் வெற்றிபெற சாணக்கியர் பயனுள்ள அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
சாணக்கியர் கூறிய அறிவுரைகள் இப்போது மட்டுமல்ல எக்காலத்திற்கும் பொருத்தமானதாக இருக்கும். மக்கள் அவற்றை வாழ்க்கையில் பின்பற்றுவது அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், வெற்றியையும் கொடுக்கும். இந்த பதிவில் வெற்றிகரமான வாழ்க்கைக்கு பின்பற்ற வேண்டிய சாணக்கியர் கூறும் வழிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

சாணக்கிய நீதி
சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் ஒரு ஸ்லோகத்தில், ஒருவரின் வித்யா நிலையை அவர்களின் பயிற்சியில் நிலைத்திருப்பதாகக் கூறுகிறார், குடும்பப்பெருமை அவரது குணாதிசயங்களால் அங்கீகரிக்கப்படுகிறது, ஞானி அவரது குணங்களால் அங்கீகரிக்கப்படுகிறார், கோபம் அவரது கோபமான கண்களால் அங்கீகரிக்கப்படுகிறது என்று விளக்குகிறார்.
அறிவைப் பயன்படுத்த வேண்டும்
ஒருவர் எவ்வளவு அறிவைப் பெற்றதாகக் கூறினாலும், அந்த அறிவை பயன்படுத்தாத வரை அதனால் எந்தப் பயனும் இல்லை என்கிறார் சாணக்கியர். நாம் பெறும் அறிவை பயன்படுத்த வாழ்க்கையில் வாய்ப்புகள் வரும். ஆனால் அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதவர், அறிவைப் பெற்றவராக கூற தகுதியற்றவர். அறிவு நிலையான பயிற்சி மற்றும் அதனை வாழ்க்கையில் பயன்படுத்துவதன் மூலமே வெளிப்படும்.
குடும்பபெருமை
சாணக்கியர் தனது ஒரு ஸ்லோகத்தில் ஒருவரின் குணாதிசயம் அவர்களின் குடும்பப்பெயரில் நிலைத்திருப்பதாகக் கூறுகிறார். ஒருவருடைய குடும்பப் பாரம்பரியம், குடும்பத்தின் பெருமை மற்றும் தங்களின் பெருமை பற்றி தற்பெருமை பேசக் கூடாது. அந்த மகத்துவம் நம் குணத்தில் பிரதிபலிக்க வேண்டும். தனது தவறான செயல்கள் மூலம் குடும்பப் பெருமையை கெடுப்பவர்கள் அந்த குடும்பத்திற்கு சாபம் போன்றவர்கள் என்கிறார் சாணக்கியர்.
தற்பெருமை பேசக்கூடாது
ஒரு புத்திசாலி அல்லது உன்னதமான நபர் தனது திறன்கள் மற்றும் புத்திக்கூர்மைப் பற்றி ஒருபோதும் விளம்பரப்படுத்திக் கொள்ள மாட்டார். அவருடைய நற்பண்புகள் மற்றவர்களால் அங்கீகரிக்கப்பட்டு அவர் புத்திசாலி என்றும் உன்னதமானவர் என்றும் அழைக்கப்படுவார். புத்திக்கூர்மை இல்லாத ஒருவர் நீண்ட காலம் புத்திசாலியாக நடிக்க முடியாது. யாராலும் தங்களுடைய குணங்களை நீண்ட காலம் மறைக்க முடியாது. எவ்வளவோ நடிக்க முயன்றாலும் அவர்களின் உண்மையான குணம் வெளிவரும்.
கோபம்
கோபம் என்பது ஒருவர் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் ஆயுதமாகும். ஒருவர் எந்த சூழ்நிலையிலும் தனது ஆற்றலை கோபத்தின் மூலம் வெளிப்படுத்தக்கூடாது. ஏனெனில் கோபம் உங்களின் உண்மையான நோக்கத்தை மறைத்து உங்களை ஒரு முட்டாளாக அனைவரின் முன்னிலையிலும் தோற்றமளிக்க வைக்கும். ஒரு புத்திசாலி எப்போதும் கோபப்பட மாட்டார். கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய இடத்தில் மட்டுமே வெளிப்படுத்த வேண்டும், இல்லையெனில் அதற்கு எப்போதும் மதிப்பு இருக்காது.



Click it and Unblock the Notifications
