Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
சாணக்கிய நீதி படி ஆண்கள் பெண்களின் இந்த 5 குணங்களை திருமணத்துக்கு முன்னாடியே தெரிஞ்சிக்கணும்..இல்லனா அவ்ளோதான்
Chanakya Niti: சாணக்கியர் அனைத்து பாடங்களையும் கற்ற ஒரு சிறந்த அறிஞராக இருந்தார். பல நூற்றாண்டுகளுக்கு முன் கூறிய அவரது அறிவுரைகள் இன்றும் பொருத்தமானவையாக இருக்கிறது. மனிதர்களின் வாழ்க்கைப் பற்றிய பல அம்சங்களைப் பற்றிய அவரது கருத்துக்கள் நன்கு அறியப்பட்டவை. அதனால்தான் அவரது சாணக்கிய நீதி இன்றும் பிரபலமானதாக இருக்கிறது. சாணக்கியரின் வார்த்தைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவர் எதையும் சாதிக்கலாம் மற்றும் அவரது வாழ்க்கையை மிகவும் எளிதாக்கலாம்.
திருமணம் என்பது பரஸ்பர அன்பு, மரியாதை மற்றும் புரிதலின் அடிப்படையில் இரண்டு நபர்களுக்கு இடையிலான புனிதமான உறவாகும். வெற்றிகரமான மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு, கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதும் ஒருவரையொருவர் மதிக்க வேண்டியதும் அவசியம்.

வாழ்க்கையின் பல கோட்பாடுகள் நீதித்துறையில் விளக்கப்பட்டுள்ளன. திருமணத்திற்கு முன் மணமகள் பற்றிய சில ரகசியங்களை ஆண் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. இதனால் தாம்பத்திய வாழ்வு மகிழ்ச்சியாக அமையும். சாணகிய நீதியின் கூற்றுப்படி, திருமணத்திற்கு முன் ஒரு ஆண் தனது மனைவியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அழகான புத்திசாலித்தனம் இல்லாத பெண்
அனைத்து காலத்திலும் ஆண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை ஒரு பெண்ணின் அறிவாற்றல் அளவைக் காட்டிலும் அழகின் அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள். ஆனால் சாணக்கியர் அழகான ஆனால் புத்திசாலித்தனம் இல்லாத பெண்களை ஒருபோதும் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று கூறுகிறார். ஏனெனில் புத்திசாலித்தனம் இல்லாத அழகான பெண் உங்களின் வாழ்க்கையை பயனற்றதாக மாற்றுவார்.
குடும்பப் பின்னணி
ஒரு ஆண், தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணின் குடும்பப் பின்னணியை எப்போதும் திருமணத்துக்கு முன் சரிபார்க்க வேண்டும். ஏனெனில் நீங்கள் திருமணம் செய்யப்போகும் பெண்ணின் குடும்பப் பின்னணி மோசமாக இருந்தால், அந்தப் பெண் உங்கள் வீட்டின் அமைதியையும், மகிழ்ச்சியையம் கெடுக்க வாய்ப்புள்ளது.
முரட்டு குணம் உள்ள பெண்கள்
முரட்டுத்தனமாகவும், ஆக்ரோஷமாகவும் மோசமாகவும் நடந்துகொள்ளும் பெண்ணை ஒரு ஆண் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. அவர் தோற்றத்தில் அழகாக இருந்தாலும், அவர் குணம் சிறப்பாக இருந்தால் மட்டுமே அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும். சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் மனைவி தன் கணவனை வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படுத்துவார் என்று சாணக்கியர் கூறுகிறார்.
பொய் பேசும் பெண்கள்
பொய் சொல்லும் பெண்கள் ஒரு பொய்யை நூறு பொய்யாக மாற்றுவார் என்று சாணக்கியர் கூறுகிறார். இது மிகவும் மோசமான குணமாகும். தொடர்ந்து பொய் சொல்லும் ஒரு பெண் தன் கணவனுக்கு எதிராக இதைப் பயன்படுத்துவார், மேலும் குடும்பத்தை உடைக்க கூட முயற்சிப்பார் என்று சாணக்கியர் கூறுகிறார். அத்தகைய பெண்களை ஆண்கள் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது.
விசுவாசம் இல்லாதவர்கள்
தன் குடும்பத்திற்கு துரோகம் செய்யும் ஒரு பெண் தன் கணவனுக்கும் துரோகம் செய்வார். விசுவாசம் இல்லாத பெண்ணை ஒருபோதும் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார். அப்படிப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்டால், பிற்காலத்தில் அவர் கணவனை ஏமாற்றி திருமண உறவை அழித்துவிடுவார்.



Click it and Unblock the Notifications

