Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சாணக்கிய நீதி படி உங்ககிட்ட இந்த பழக்கங்கள் இருந்தால் உங்களுக்கு வாழ்க்கையில் தோல்வியே கிடையாதாம்...!
Chanakya Niti: இந்தியாவில் வாழ்ந்த சிறந்த அறிஞர்களில் ஒருவர் சாணக்கியர். அவர் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிந்தனைகள் மற்றும் வழிமுறைகளை உருவாக்கினார். சாணக்கியரின் அர்த்தசாஸ்திரமும், சாணக்கிய நீதியும் உலக மக்களால் வாழ்க்கையின் உண்மைகளைப் புரிந்துகொள்ள பயன்படுத்தப்படுகின்றன.
வாழ்க்கையில் துன்பங்களைச் சமாளித்து வெற்றியை அடைவதற்கான வழிகளைத் தேடுபவர்களுக்கு சாணக்கிய நீதி எப்போதும் வழிகாட்டும் ஒளியாக இருந்து வருகிறது. மரபுவழி சிந்தனைக்கு சவால் விடும் சாணக்கிய தந்திரங்கள், சமூகத்தின் பழைய வழிகளைக் கேள்விக்குட்படுத்துவதற்கும் முன்னேறுவதற்கும் சாதாரண மக்களுக்கு எப்போதும் ஆற்றலாக இருந்து வருகிறது.

சாணக்கியரின் அறிவுரைகள் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்ல, தொழில் வாழ்க்கையிலும் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கின்றன. தொழிலில் உள்ள சிக்கல்களைக் கடந்து, தொழில் துறையில் வெற்றி பெற்று பிரகாசிக்க சாணக்கியர் கூறும் அறிவுரைகள் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அதிகப்படியான நேர்மைக் கூடாது
நேர்மை என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் இன்றியமையாத குணம் என்றாலும், அதிகப்படியான நேர்மை தீங்கு விளைவிக்கும் என்று சாணக்கியர் அறிவுறுத்த்துகிறார். வளைந்து வளரும் மரங்களுடன் ஒப்பிடும்போது நேராக வளரும் மரங்கள்தான் முதலில் வெட்டப்படுகின்றன. அதேபோல் நேர்மையானவர்களும் எளிதில் மற்றவர்களால் ஏமாற்றப்படுவார்கள்.
விரிவான திட்டமிடல்
எதையும் செய்வதற்கு முன், மூன்று கேள்விகளை உங்களுக்குள் நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். நான் ஏன் அதை செய்ய வேண்டும், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும், அதில் நான் வெற்றிபெற முடியுமா? இந்த மூன்று கேள்விகளும் அந்த பணியைப் பற்றி ஆழமாக சிந்திக்க உதவும். இந்தக் கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்கள் கிடைத்தப் பெற்ற பின்னரே அந்த வேலையில் இறங்க வேண்டும்.
மாற்றத்திற்கு தயாராக இருக்க வேண்டும்
ஒருவரின் பயமே அவர்கள் வெற்றி பெறுவதற்கு மிகப்பெரிய எதிரியாக மாறுகிறது. வாழ்க்கையில் ஏற்படும் புதிய மாற்றங்களை ஏற்றுக்கொள்ள ஒருபோதும் பயப்பட வேண்டாம். ஒருவேளை பயம் உங்களுக்குள் உருவாகினால் உடனடியாக அதை எதிர்த்து போராட வேண்டும்.
ஒற்றுமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
உங்களிடன் தவறுகளிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்வது போல் மற்றவர்களின் தவறுகளிலிருந்தும் எப்போதும் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் உங்களின் சிறிய வாழ்நாளில், நீங்கள் உங்கள் தவறுகளில் மட்டும் கவனம் செலுத்தினால் உங்களால் ஒருபோதும் முன்னேற முடியாது. ஒற்றுமைக்கு முக்கியத்துவம் கொடுத்து மற்றவர்களின் தவறுக்கும் கவனம் செலுத்தினால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும்.
ஒழுக்கம்
ஒழுக்கம் என்பது ஒருவரிடம் இருக்க வேண்டிய மிகவும் அவசியமான பண்புகளில் ஒன்றாகும். ஏதாவது பேசுவதற்கு முன், அந்த பேச்சு தேவையா, அது உண்மையா, மற்றவர்களை காயப்படுத்துமா என்று யோசித்து அதன்பின் பேசுங்கள். பேசுவதை விட பேசாமல் இருப்பது சரியானதா என்பதையும் மதிப்பிட வேண்டும்.
கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
கல்வி அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானது. எனவே கல்வியை உங்கள் ஆத்ம துணையாகப் ஏற்றுக்கொள்ள வேண்டும். செல்வந்தர்களை விட படித்தவர்களே சமூகத்தில் எப்போதும் மதிக்கப்படுவார்கள். இளமை மற்றும் அழகை விட கல்வியும் அறிவும் மதிப்புமிக்கது. எனவே எப்போதும் கல்வியைப் பெறுவதில் ஆர்வமாக இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
