Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சாணக்கிய நீதி படி உங்ககிட்ட இந்த 5 பழக்கங்கள் இருந்தால் நீங்கள் அதிபுத்திசாலிகளாம்... உங்ககிட்ட இருக்கா?
Chanakya Niti: இந்த உலகில் ஒரே ஒருவர் மட்டுமே எப்போதும் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் வாழ முடியும். அது புத்திசாலிகள் மட்டுமே. செல்வந்தர்கள் கூட ஒரு காலகட்டத்தில் அவர்களிடம் இருக்கும் செல்வத்தை இழக்கலாம், ஆனால் புத்திசாலிகள் ஒருபோதும் அவர்களின் ஞானத்தை இழக்க மாட்டார்கள்.
பலசாலியாக இல்லாதவர்கள் கூட புத்திசாலித்தனத்தால் எளிதில் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். புத்திசாலித்தனம் இல்லாமல், அதிகாரம் இருப்பதில் அர்த்தமில்லை. புத்திசாலித்தனம் என்பது ஒரு உள்ளார்ந்த திறன் என்று பொதுவாக நம்பப்படுகிறது. அதே சமயம், நாம் நினைத்தால் நமது புத்திசாலித்தனத்தை மேம்படுத்த முடியும்.

சாணக்கியர் தனது புத்திசாலித்தனம் மற்றும் தந்திரம் மூலம் சந்திரகுப்த மௌரியரின் விருப்பமான வழிகாட்டியாக மாறினார் மற்றும் அவரை ஆட்சிக்குக் கொண்டுவர தந்திரங்களை பயன்படுத்தினார். புத்திசாலியாக மாறுவதற்கு ஒருவர் கொண்டிருக்க வேண்டிய சில பழக்கங்களைப் பற்றி சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் விளக்கியுள்ளார். சாணக்கியர் கூறும் இந்த பழக்கங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
குடும்ப ரகசியங்களை வெளியே சொல்லாமல் இருப்பது
புத்திசாலிகள் தங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை வெளியிட மாட்டார்கள். அவர்களின் குடும்ப விவகாரங்கள் எப்போதும் ரகசியமாகவே இருக்கும். ஏனென்றால், சாணக்கியர் இப்படிப்பட்ட விஷயங்களை எதிரிகள் உங்களுக்கு எதிரான ஆயுதங்களாகப் பயன்படுத்தலாம் என்கிறார்.
வதந்திகளை நம்ப மாட்டார்கள், பரப்பவும் மாட்டார்கள்
புத்திசாலிகள் ஒருபோதும் அவதூறுகளையும், வதந்திகளையும் ஒருபோதும் பரப்ப மாட்டார்கள் அதேசமயம் நம்பவும் மாட்டார்கள். பிறரைப் பற்றிய எதிர்மறை மற்றும் வதந்திகளில் இருந்து விலகி இருக்க முயற்சிப்பார்கள். வதந்திகளை பரப்புவது தங்களுடைய நற்பெயரை கெடுக்கும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.
மருத்துவ ரகசியங்களை வெளியிட மாட்டார்கள்
புத்திசாலிகள் தாங்கள் உட்கொள்ளும் மருந்துகளைப் பற்றி யாரிடமும் கூற மாட்டார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். இது போன்ற விஷயங்கள் அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஒருவேளை உங்களின் எதிரிகளுக்கு இந்த விஷயங்கள் தெரிய வந்தால் அதுவே உங்களுக்கு பெரிய ஆபத்தாக மாறும்.
உணவை குறை சொல்ல மாட்டார்கள்
சாணக்கியர் உணவைக் குறை கூறாமல் இருப்பதை ஞானிகளின் அடையாளமாகக் கருதுகிறார். உணவு விஷயத்தில் அவர்களுக்கு எந்த புகாரும் இருக்காது. தாங்கள் பெற்ற உணவில் திருப்தி அடைவார்கள். அவர்கள் உணவை எப்போதும் வீணாக்க மாட்டார்கள், அதற்கு மரியாதைக் கொடுப்பார்கள்.
காதலை ரகசியமாக வைத்திருப்பவர்கள்
புத்திசாலிகள் தங்கள் காதல் வாழ்க்கையை எப்போதும் ரகசியமாக வைத்திருப்பார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். ஏனென்றால், அவர்களின் காதல் வாழ்க்கைப் பற்றி தெரிய வந்தால் மற்றவர்கள் தேவையற்ற வதந்திகளையும் சந்தேகங்களையும் பரப்பக்கூடும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.



Click it and Unblock the Notifications
