Latest Updates
-
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.. -
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1 வாழைப்பழமும் இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 2 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
ருசியான... பிடிக்கருணை கிழங்கு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
இந்த 6 ராசி பெண்கள் நினைத்ததை முடிக்கும் அசாத்திய தைரியம் கொண்டவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
சில ராசிகாரர்களின் தைரியம் எப்போதும் மற்றவர்களுக்கு ஆச்சரியமானதாக இருக்கும். எதுவுமே அவர்களை அச்சுறுத்தாது. ஒரு விஷயத்தை தைரியமாக முன்மொழிதல் அல்லது மோதலுக்கான நகர்வை முதலில் தொடங்குவது என அவர்கள் எப்போதும் மற்றவர்கள் செய்ய தயங்கும் விஷயங்களை மிகவும் ஈஸியாக செய்வார்கள்.
அவர்களின் இந்த அசாத்திய துணிச்சலுக்கு அவர்களின் பிறந்த ராசி முக்கிய காரணாமாக இருக்கலாம். ஒரு நபரின் ஆளுமைப் பண்புகளிலிருந்து அவரது நடத்தை பண்புகள் வரை, ஒரு நபரின் வாழ்க்கையைப் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள அவர்களின் பிறந்த ராசி உதவுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்த பெண்கள் அசாத்திய துணிச்சல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மேஷம்
மேஷ ராசி பெண்கள் தலைவராகவே பிறந்தவர்கள் என்று கூறப்படுகிறார்கள். மேஷ ராசிக்காரர்கள் மிகவும் ஆற்றல் மிக்கவர்கள் மற்றும் இயற்கையாகவே அதிக ஆர்வமுள்ளவர்கள். அனைத்திலும் விரைவாகவும் போட்டித்தன்மையுடனும் இருப்பது அவர்களின் சில சிறந்த குணங்களாகும். அவர்களின் போட்டித்தன்மை சில சமயங்களில் மற்றவர்களால் மிகவும் தைரியமானதாகக் கருதப்படும் நடவடிக்கைகளை எடுக்க வைக்கிறது. எனவே இந்த குணங்கள் அவர்களை மிகவும் தைரியமாக ஆக்குகின்றன. மேலும் மேஷ ராசிக்காரர்கள் எதற்கும் அஞ்சாதவர்கள், எங்கும், எதிலும் முதல் படியை எடுக்க வைக்கிறது.
சிம்மம்
சிம்ம ராசி பெண்கள் மற்றவர்களை ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு அசாதாரண துணிச்சல் கொண்டவர்கள். மேலும் இந்த ராசி பெண்கள் மிகவும் உக்கிரமானவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்களிடம் இருக்கும் இந்த குணங்கள் அவர்களை வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க விரும்புபவர்களாக ஆக்குகின்றன. அவர்களின் இந்த தைரியம் அவர்களுக்கு அதிகாரம் மற்றும் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மையை அளிக்கிறது. எந்த விஷயமாக இருந்தாலும் அதில் முதல் நகர்வு இவர்களுடையதாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி பெண்கள் தங்கள் பிடிவாதமான மற்றும் உணர்ச்சிமிக்க நடத்தைக்கு நன்கு அறியப்பட்டவர்கள். இந்த ராசிக்கு சொந்தக்காரர்கள் எதையாவது விரும்பினால், அதைப் பெற அவர்கள் தங்கள் சக்திக்கு உட்பட்டு அனைத்தையும் செய்வார்கள். அவர்கள் விரும்பும் நபர்களுக்கு எதிராகச் செல்வதாக இருந்தாலும் கூட அதை தயங்காமல் செய்வார்கள். தாங்கள் விரும்பும் ஒருவருக்கு எதிராகச் செல்வது பெரும்பாலும் துணிச்சலின் அடையாளமாக அவர்கள் கருதுகிறார்கள். தாங்கள் விரும்பியதை அடைய முதல் அடியை எடுத்து வைக்க ஒருபோதும் அவர்கள் வெட்கப்பட மாட்டார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் முதல் அடியை எடுத்து வைக்க ஒருபோதும் வெட்கப்பட மாட்டார்கள். இந்த ராசி பெண்கள் அவர்கள் தங்கள் இதயம் உண்மையிலேயே விரும்பும் ஒன்றுக்காக எதையும் மற்றும் எல்லாவற்றையும் செய்வார்கள் என்று தோன்றுகிறது. பிறர் செய்யாத அல்லது செய்ய இயலாத செயல்களையே அவர்கள் தங்கள் வாழ்க்கையில் செய்ய விரும்புகிறார்கள். இந்த பணிகளைச் செய்வதால், அவர்கள் மிகவும் சக்திவாய்ந்தவராகவும், அச்சமற்றவராகவும் உணர்கிறார்கள்.
கும்பம்
கும்ப ராசி பெண்கள் இயற்கையாகவே எதற்கும் சமரசம் செய்யாதவர்கள். அவர்கள் தங்கள் கண்களையோ அல்லது உள்ளத்தையோ எதையாவது கவர்ந்தால், அது கிடைக்கும் வரை அமைதியடைய மாட்டார்கள். மேலும் அவ்வாறு செய்யும்போது அதற்காக சில தைரியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும். இந்த துணிச்சலான நடவடிக்கைகளே அவர்களை தைரியமான நபர்களாக அனைவரையும் பார்க்க வைக்கிறது. இதனால் அவர்கள் தங்கள் நண்பர்களால் மிகவும் தைரியமானவர்களாக பார்க்கப்படுகிறார்கள்.
துலாம்
துலாம் ராசி பெண்கள் மிகவும் நேர்மையான எண்ணம் கொண்டவர்கள் மற்றும் இயற்கையில் நீதியை நேசிப்பவர்கள். அவர்களின் நியாயமான மனப்பான்மை சில சமயங்களில் பெரும்பாலான மக்கள் செய்ய பயப்படும் விஷயங்களைச் செய்ய வைக்கிறது. அவர்கள் நீதியை நேசிப்பவர்கள், இது தேவைப்படும் போதெல்லாம் சரியான நடவடிக்கை எடுக்க வைக்கிறது. இந்த குணங்கள் காரணமாக, அவர்கள் செய்யும் செயல்கள் சில சமயங்களில் மற்றவர்களால் துணிச்சலான நடவடிக்கைகளாக பார்க்கப்படுகின்றன.



Click it and Unblock the Notifications













