Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
பாபா வாங்காவின் கணிப்புகளின் படி 2066-ல் இந்த நாடு உருவாக்கும் ஆயுதத்தால் உலகத்துக்கு ஆபத்து வரப்போகுதாம்...!
ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் போதும் பெரும்பாலான மக்கள் பாபா வாங்காவின் கணிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். ஏனெனில் எதிர்காலம் பற்றிய பாபா வாங்காவின் பல கணிப்புகள் நிஜமாக நடந்து மக்களை ஆச்சரியத்திற்கும், அதிர்ச்சிக்கும் ஆளாக்கியுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாபா வங்கா கணித்த கணிப்புகள் இப்போது நிறைவேறுவது எப்படி என்பது இன்றும் புரியாத மர்மமாகவே உள்ளது.
பாபா வாங்காவின் கணிப்புகளை நம்பும் பெரும்பான்மையான மக்கள் உலகம் முழுவதும் உள்ளனர், மற்றவர்கள் அவற்றை வேடிக்கையாகக் காண்கிறார்கள். சமீபத்தில், இந்த தீர்க்கதரிசியின் கணிப்புகளில் ஒன்று இணையத்தில் வைரலாகி, தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. இந்த கணிப்பில், 2066 ஆம் ஆண்டில், அமெரிக்கா மிகவும் ஆபத்தான ஒரு ஆயுதத்தை உருவாக்கும் என்று அவர் கணித்துள்ளார். வாங்காவின் கூற்றுப்படி, அடுத்த 41 ஆண்டுகளில் அமெரிக்கா கண்டுபிடிக்கும் ஆயுதம் உலக சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறலாம்.

இந்த கணிப்பு வாங்காவின் பெரும்பாலான கணிப்புகள் போல பலிக்கலாம் அல்லது வெகுசில கணிப்புகள் போல பலிக்காமலும் போகலாம், இப்போது எதுவும் சொல்ல முடியாது, ஆனால் அமெரிக்கா தனது ஆயுதங்கள் மூலம் உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தைத் பரப்ப நினைப்பதை உலகமே நன்கு அறியும்.
பாபா வாங்கா தனது வாழ்நாளில் பல கணிப்புகளைச் செய்தார், அவற்றில் பெரும்பாலானவை உண்மையாகிவிட்டன. அவரது கணிப்புகளில் அமெரிக்காவின் 9/11 இரட்டைக் கோபுர தாக்குதல்கள், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் 2004 சுனாமி ஆகியவை அடங்கும்.
பல ஊடக அறிக்கைகளின் படி, அமெரிக்கா பல ஆபத்தான கொடிய ஆயுதங்களைக் கொண்டுள்ளது. உலகின் மிகவும் சக்திவாய்ந்த அணு ஆயுதங்கள் அமெரிக்காவில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஆயுத விற்பனை மொத்தம் USD318.7 பில்லியனாக இருந்தது, இது முந்தைய ஆண்டை விட 29% அதிகமாகும். இது உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில் 42% ஆகும். வரும் காலங்களில் இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக வரலாற்றில் வேறு ஒரு நாட்டின் மீது அணு ஆயுதத்தைப் பயன்படுத்திய ஒரே நாடு அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது. 1945 ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டை வீசியது. இந்த வெடிப்பில் மில்லியன் கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர், மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டனர். அதன் பாதிப்பு இன்றும் வரை கூட தொடர்கிறது. உலக வரலாற்றின் அழிக்க முடியாத கரும் புள்ளியாக இந்த சம்பவம் உள்ளது.
யார் இந்த பாபா வாங்கா?
பாபா வாங்கா என்று அழைக்கப்படும் வான்ஜெலியா பாண்டேவா டிமிட்ரோவா, 1911 இல் பல்கேரியாவில் பிறந்தார். ஒரு கிராமப்புற குடும்பத்தில் வளர்க்கப்பட்ட அவர், குழந்தையாக இருந்தபோது இயற்கை சீற்றத்தால் பார்வையை இழந்தார், ஆனால் பின்னர் எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் திறனை வளர்த்துக் கொண்டார், இதன் விளைவாக ஏராளமான கணிப்புகளை செய்தார்.
இயற்கை பேரழிவுகள், அரசியல் நிகழ்வுகள் மற்றும் உலகளாவிய மோதல்களை முன்னறிவிக்கும் பாபா வாங்காவின் திறன் அவருக்கு "பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்" என்று பெயரை பெற்றுக்கொடுத்தது.



Click it and Unblock the Notifications

