Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
அட்சய திருதியை 2024: தங்க நகை வாங்க முடியலையா? கவலைய விடுங்க.. இதை வாங்கினாலே போதும்..!
அட்சய திருதியை நாளில் நாம் வாங்கும் பொருட்கள் மேன்மேலும் வளரும். இந்து மதத்தில் அக்ஷய திரிதியை பண்டிகைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. எந்தவொரு புதிய வேலையையும் தொடங்குவதற்கும், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்குவதற்கும் இது ஒரு நல்ல மற்றும் சாதகமான சந்தர்ப்பமாக கருதப்படுகிறது. சில பக்தர்கள் பண நெருக்கடியால் இதுபோன்ற மதிப்புமிக்க பொருட்களை வாங்க முடியாமல் போகலாம். ஒரு புகழ்பெற்ற ஜோதிடர், தங்கம் மற்றும் வெள்ளிக்குப் பதிலாக எதை வாங்கலாம் என்பதைப் பற்றிய நுண்ணறிவைத் தருகிறார்.
இந்த ஆண்டு, அட்சய திருதியை மே 10 அன்று கொண்டாடப்பட உள்ளது. காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். இது தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதற்கு சாதகமாக கருதப்படுகிறது. பிரபல ஜோதிடர் பண்டிட் நந்த்கிஷோர் முத்கல் கூறுகையில், லட்சுமி தேவி தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதில் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இருப்பினும், இது பணவீக்க காலம் என்பதால், அனைவராலும் தங்கத்தை வாங்க முடியாது அல்லவா? அதனால் தங்கம் தவிர வேறு என்னென்ன வாங்கலாம் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்..

தங்கம் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டிவருவதால், நகை வாங்க பலரால் முடியாது. அதனால் அதற்கு பதில் வேறு இந்த பொருட்களை வாங்கினால் நல்லது என ஜோதிடர் கூறுகிறார். அவை வளத்தின் அடையாளமான பருப்பு வகைகள், பசுமை மற்றும் ஆரோக்கியத்தின் அடையாளமான கீரை மற்றும் காய்கறிகள், செல்வத்தின் சின்னங்களான தானியங்கள் (அரிசி, பார்லி), மண்குடம், சங்கு, ஸ்ரீயந்திரம், புனிதப்பொருளான நெய் ஆகியவற்றை தங்கத்திற்கு மாறாக வாங்கினால் வீட்டில் அதிர்ஷ்டம் பெருகும் என்கிறார் ஜோதிடர்.
மேலும் தங்கம் மட்டுமே வாங்க வேண்டும் என்று நியதி இல்லை. அன்றைய நாளில் என்ன வாங்கினாலும் அது உகந்ததே. அன்றைய நாளில் வாங்கும் எந்த பொருளும் வீட்டில் குறைவின்றி இருக்கும் என்பதே பொருள். ஆகவே எதையும் வாங்கலாம். உப்பு, அரிசி, வலம்புரிச் சங்கு, சோழிகள் மற்றும் தேவையான ஆடைகள் ஒரு சிறு பாத்திரம் என எதை வேண்டுமானாலும் வாங்கலாம். பெண் பார்ப்பது, நிச்சயதார்த்தம் செய்தல் சுபகாரியங்களை இந்தநாளில் செய்வது நல்லது.
அரிசி
என்பது கடவுளுக்கு நிகரான ஒன்றாகும். ஆகவே அது வீட்டில் குறையில்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அன்றைய தினம் அரிசி வாங்கி வைக்கலாம். அந்த தினத்தில் புதிதாக வாங்கிய அரிசியிலிருந்து சிறிதளவு எடுத்து யாரேனும் ஒருவருக்கு தானம் அளிப்பதால் பல மடங்கு புண்ணியமும் தானமும் உங்களின் குடும்பத்திர்கு வந்து சேரும்..
வலம்புரிச் சங்கு
அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்க முடியாதவர்கள் புதிதாக வெள்ளை நிற வலம்புரிச் சங்கை வாங்கி அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து வீட்டின் பூஜையறையில் வழிபடுவதால் லட்சுமி நாராயணன் எனப்படும் திருமால் மற்றும் மகாலட்சுமியின் அருட்கடாட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மஞ்சள், குங்குமம்
அட்சய திருதியை அன்று மங்கலகரமான மஞ்சள் மற்றும் குங்குமத்தை வீட்டிற்கு வாங்கி வந்தால் நல்லது. அது நன்றாக பலமடங்கு பெருகும். எப்போதும் வீட்டில் குறையாமல் இருக்கும். அதனால் வீடே லட்சுமி கடாச்சமாக இருக்கும் என்பது ஐதீகம்.
அன்னதானம்
அன்னதானம் செய்வது சிறந்தது. அத்துடன் அடுத்தவர்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களைக் கொடுக்க வேண்டும். பணமாக யாருக்கும் கொடுக்கக்கூடாது. அவர்களுடைய தேவை என்னவோ அதைப் பூர்த்தி செய்யக்கூடிய பொருட்களை வாங்கிக் கொடுப்பது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications