Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
உங்க பாத்ரூமில் ஒரு கிண்ண உப்பை வைத்தால் உங்கள் வாழ்க்கையில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா?
Vastu Tips: வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்கள் உங்களின் தலையெழுத்தை மாற்றும் சக்திவாய்ந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? அனைத்து சமையலறைகளிலும் இருக்கும் இருக்கும் பொருளான உப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரக்கூடும் என்று வாஸ்து கூறுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, உங்கள் குளியலறையில் ஒரு கிண்ணத்தில் கடல் உப்பை வைப்பது எதிர்மறை ஆற்றலை விரட்டுவதற்கான மிகவும் சக்திவாய்ந்த வழிகளில் ஒன்றாகும்.
மேலும் இவ்வாறு செய்வது இது உங்கள் வீட்டிலிருந்து வறுமையையும் மன அழுத்தத்தையும் நீக்குவது மட்டுமல்லாமல், உங்களின் மன அமைதியையும் நல்வாழ்வையும் மேம்படுத்தும். மேலும் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், நேர்மறை எண்ணங்களையும் அளிக்கும். உங்கள் குளியலறையில் உப்பு வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வாஸ்து சாஸ்திரத்தில் ஏன் உப்பை வைக்க வேண்டும்?
வாஸ்து சாஸ்திரத்தின்படி, உப்பு எதிர்மறை ஆற்றலை உறிஞ்சும் அற்புதமான பண்பைக் கொண்டுள்ளது. குளியலறை என்பது ராகுவின் தாக்கம் அல்லது எதிர்மறை ஆற்றல் அதிகமாக உள்ள ஒரு இடமாகும். இந்த குளியலறையில் ஒரு கிண்ணத்தில் உப்பை வைப்பது, ஈரப்பதம் நிறைந்த காற்றுடன் சேர்ந்து எதிர்மறை ஆற்றலையும் அகற்ற உதவுகிறது. இது உங்கள் வீட்டின் சூழலைத் தூய்மைப்படுத்துகிறது. மேலும் இது வாஸ்து குறைபாடுகளைச் சரிசெய்வதுடன், மன அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியையும் அளிக்கும். பாத்ரூமில் ஒரு கிண்ண உப்பை வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
எதிர்மறை ஆற்றலை நீக்குதல்
ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் கல் உப்பைப் போட்டு, அதை குளியலறையில் வைக்கும்போது, அது ஒரு காந்தம் போல செயல்பட்டு, வீட்டிலுள்ளதுரதிர்ஷ்டம், மன அழுத்தம் மற்றும் எதிர்மறை அதிர்வுகளையும் ஈர்த்துக்கொள்கிறது.
ராகு மற்றும் வாஸ்து தோஷங்களிலிருந்து நிவாரணம்
குளியலறை தவறான திசையில் கட்டப்பட்டிருந்தாலோ அல்லது அசுத்தமாக வைக்கப்பட்டிருந்தாலோ, ராகு தோஷம் அதிகரித்து, அது குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்தைத் தடுத்து, ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும், பணக்கஷ்டத்திற்கும் வழிவகுக்கும். எனவே குளியலறையின் ஒரு மூலையில் ஒரு கிண்ணத்தில் உப்பை வைப்பது வாஸ்து தோஷங்களின் தாக்கத்தைக் குறைக்கும்.
மன அமைதி மற்றும் நல்ல ஆரோக்கியம்
சில சமயங்களில், எந்தக் காரணமும் இல்லாமல் மனத்தில் பதட்டமோ அல்லது பாரமோ ஏற்படும். இதற்கு உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் முக்கிய காரணமாக இருக்கலாம். குளியலறையில் வைக்கப்படும் உப்பு, சூழலைத் தூய்மைப்படுத்துகிறது. இது வீட்டில் வசிப்பவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மேலும், இது குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்படும் சச்சரவுகளைக் குறைத்து, பரஸ்பர அன்பை அதிகரிக்கவும் உதவுகிறது.
பணக்கஷ்டத்தை தீர்க்கிறது
எங்கு எதிர்மறை ஆற்றல் இருக்கிறதோ, அங்கு மகாலட்சுமி வசிக்க விரும்ப மாட்டார் என்று நம்பப்படுகிறது. குளியலறையிலிருந்து வெளிப்படும் எதிர்மறை ஆற்றல் வீட்டின் நிதி நிலையைச் சீர்குலைத்து, தேவையற்ற செலவுகளை அதிகரிக்கக்கூடும். உப்பை வைத்து செய்யப்படும் இந்த எளிய பரிகாரம் வீட்டின் செழிப்பைப் பாதுகாக்கிறது. இது பணக்கஷ்டத்தை தீர்ப்பதற்கும், புதிய வருமான வழிகளை ஈர்ப்பதற்கும் உதவியாகக் கருதப்படுகிறது. ஈரப்பதம் காரணமாக உப்பு ஈரமாகிவிட்டால், அதை அவ்வப்போது மாற்றிவிடுவது நல்லது. முடிந்தால் வாரத்திற்கு ஒருமுறை கிண்ணத்தில் உள்ள உப்பை மாற்றி விடுங்கள்.



Click it and Unblock the Notifications
