Latest Updates
-
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்!
வாஸ்து படி உங்க வீட்டில் இந்த தவறுகள் இருந்தால் உங்களின் ஆயுட்காலம் சீக்கிரம் குறைஞ்சிருமாம்...!
நம்முடைய தன்னம்பிக்கை மற்றும் முயற்சியுடன் நாம் வாழும் இடமும், சூழலும் நம்முடைய வாழ்க்கையையும், அதன் முன்னேற்றத்தையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கூற்று வாஸ்து சாஸ்திரத்திற்கு 100% பொருந்தக்கூடியது.
உங்கள் வாழ்க்கையில் பாதிக்கு மேல் நீங்கள் செலவிடும் இடம் உங்கள் வீடுதான், உங்கள் உடல், மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தை பாதிக்கிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, தவறான திசையில் தவறான செயல்கள் அந்த வீட்டில் குடியிருப்பவர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. அவற்றில் முக்கியமானவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.

சமையலறை உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்
தென்மேற்கில் உள்ள சமையலறையானது அந்த வீட்டின் குடும்பத்தலைவிக்கு கால்களில் வலி அல்லது பிறப்பு குறைபாடுகளை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசைகளுக்கு இடையில் சமையலறை இருப்பது குடும்பத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களுக்கு உடல் பருமனை ஏற்படுத்தும்.
நிறங்களின் முக்கியத்துவம்
வாஸ்து படி உங்கள் ஆரோக்கியத்தை தீர்மானிக்கும் மற்றொரு முக்கிய காரணியாக நீங்கள் உபயோகிக்கும் நிறங்கள் உள்ளன. வடகிழக்கில் சிவப்பு அல்லது ஊதாநிறம் இருப்பது தலைவலி மற்றும் குடும்பத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மக்களுக்கு ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும்.
பொருட்கள் வைக்கப்படும் திசை
ஒரு குறிப்பிட்ட திசையில் வெவ்வேறு பொருட்களை வைப்பது குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வீட்டின் மையத்தில் கழிவு நீர்த்தொட்டி இருப்பது மனச்சோர்வு மற்றும் போதைப் பழக்கத்தை ஏற்படுத்தும். கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் குப்பைத்தொட்டியை வைப்பது காலப்போக்கில் கல்லீரல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும்.
சுத்தமின்மை மற்றும் நீர்க்கசிவு
வீட்டில் உள்ள ஒழுங்கீனம் மற்றும் நீர்க்கசிவு ஆகியவை குடிமக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. சுவர்களில் ஈரப்பதம், கசிவு, சுவர்கள் மற்றும் கூரைகளில் விரிசல்கள் ஆகியவை குடும்பத்தில் பலருக்கும் உடல்நலக் கோளாறுகள் ஏற்படபோவதன் அர்த்தமாகும்.
எனவே உங்கள் குடும்பத்தில் ஏற்கனவே உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருந்தால், ஆபத்தான உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க இந்த பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டும்.
எலக்ட்ரானிக் பொருட்கள்
பல்வேறு மின்னணு சாதனங்கள் மற்றும் உபகரணங்களுக்கு நாம் இப்போது நன்கு பழகிவிட்டாலும், அவைகளால் வெளிப்படும் EMF கதிர்வீச்சுகள் நம் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் மோசமானது. அவற்றை அகற்றுவது சாத்தியமில்லை என்றாலும், அதனை முடிந்த அளவிற்கு குறைக்கலாம்.
தூங்கும் போது உங்கள் மொபைல் போன்களை படுக்கையில் இருந்து குறைந்தது ஏழு அடி தூரத்தில் வைத்திருங்கள், உங்கள் படுக்கையறையில் வைஃபை ரவுட்டர்களை நிறுவ வேண்டாம் அல்லது அவற்றை பயன்பாட்டில் வைக்க வேண்டாம்.



Click it and Unblock the Notifications
