Latest Updates
-
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்!
பால் காய்ச்சும்போது பொங்கி கீழே வழியுதா? இனிமே பால் சிந்தி வீணாகாமல் தடுக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
எல்லார் வீட்டிலும் தினமும் டீ அல்லது காபி போடா பாலை காய்ச்சுகிறோம். பால் காய்ச்சுவது என்பது சாதாரண விஷயம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், பாலை காய்ச்சும்போது, அது பொங்கி கீழே வழியாமல் பாலை சரியாக காய்ச்சுவது என்பது சாதாரணமானது அல்ல. அது மிகவும் சவாலான வேலை.
பால் காய்ச்சும்போது, நீங்கள் மிகவும் கவனமாகவும் தந்திரமாகவும் இருக்க வேண்டும். மற்ற வேலைகளில் உங்கள் கவனத்தை சிறிதளவு மாற்றினாலும்கூட, பால் பொங்கி எல்லா இடங்களிலும் பரவி வீணாகிறது. இது வேடிக்கையாகத் தோன்றலாம், ஆனால் அது உண்மைதான்!

இவை ஒருமுறை நடந்தால் பரவாயில்லை. ஆனால், ஒவ்வொரு முறையும் பால் பொங்கி கீழே கசிவது உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். அதனால், பாத்திரத்தில் இருந்து பால் பொங்கி வழிவதைத் தடுக்க உதவும் சில சூப்பர் எளிய தந்திரங்கள் உள்ளன. அந்த தந்திரங்களை பின்பற்றுவதன் மூலம், நீங்கள் பால் காய்ச்சும்போது, வழிந்து வீணாகாமல் தடுக்கலாம்.
ஒரு பெரிய பாத்திரத்தைப் பயன்படுத்தவும்
பெரும்பாலும் நம் அனைவரின் வீட்டிலும் தினமும் ஒரு முறையாவது பால் காய்ச்சப்படுகிறது. பாலை கொதிக்க வைப்பது என்பது நம் தினசரி பழக்கமாக உள்ளது. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் செய்யும் ஒரு தவறு, சிறிய பாத்திரத்தில் பாலை காய்ச்சுவது. சிறிய பாத்திரத்தில் நீங்கள் பாலை காய்ச்சும்போது, அவை பொங்கி அடுப்பில் வழியலாம்.
பால் கீழே வீணாகி போவதுமட்டுமல்லாமல், உங்கள் அடுப்பும் அழுக்காகிவிடும். சிறிய பாத்திரத்தில் இருந்து பால் அடிக்கடி சிந்துவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். எனவே, நீங்கள் சூடாக்கும் பாலின் அளவை விட அதிக திறன் கொண்ட பாத்திரத்தைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. இது பால் சூடாக்கும்போது விரிவடைய போதுமான இடத்தை வழங்குகிறது. மேலும், பால் பொங்கி கீழே வழியாமல் தடுக்கும்.
மர கரண்டியைப் பயன்படுத்தவும்
பாலை காய்ச்சும் பாத்திரத்தின் மீது கிடைமட்டமாக ஒரு மர கரண்டியை வைப்பதன் மூலம் பால் நிரம்பி கீழே வழிவதைத் தடுக்கலாம். பால் பொங்கி மேலே எழுந்து வரும்போது, மர கரண்டியை பாத்திரத்தின் மீது நீங்கள் வைத்தால், அது பாத்திரத்தை விட்டு பாலை பொங்க விடாது. இந்த சிறிய தந்திரத்தை செய்வதன் மூலம் பால் பொங்கி வீணாகாமல் இருக்கும்.
ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்
பால் பொங்கி வீணாவதை தடுக்க ஒரு சிறிய ஹேக்காக உப்பு உங்களுக்கு பயன்படும். ஆம், பாலில் ஒரு சிட்டிகை உப்பைச் சேர்ப்பதன் மூலம் பால் கசிந்து வெளியேறுவதை தடுக்கலாம். இது ஒரு சிறந்த ஸ்மார்ட் ஹேக். பாலில் உப்பை சேர்ப்பதன் மூலம், அதிக கொதிநிலை மற்றும் பால் கசிவைத் தடுக்க உதவும்.
பாலை கிளறிவிடுதல்
பால் நிரம்பி வழிவதைத் தடுப்பதற்கான மற்றொரு எளிய வழி, சீரான இடைவெளியில் பாலை கிளறி கொண்டிருக்க வேண்டும். இது வெப்பத்தை சமமாக விநியோகிக்க உதவுகிறது மற்றும் ஹாட்ஸ்பாட்களை உருவாக்குவதைத் தடுக்கிறது. இதனால், பால் நிரம்பி வெளியே வழிவதை நீங்கள் தடுக்கலாம்.



Click it and Unblock the Notifications

