Latest Updates
-
நீர் தோசையும், தண்ணி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கவலைகளும், தோல்வியும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா?
வீட்டுக்கு புது மெத்தை வாங்க போறீங்களா? இப்படி பாத்து வாங்குங்க... இல்லனா உங்க காசுதான் வேஸ்ட்...!
நம் வாழ்வில் மூன்றில் ஒரு பங்கை ஓய்வில் அல்லது உறக்கத்தில் செலவிடுகிறோம். ஆரோக்கியமான வாழ்க்கை வாழ குறைந்தபட்சம் ஏழு முதல் எட்டு மணிநேரம் இடையூறு இல்லாமல் நிம்மதியாக தூங்குவது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
உங்கள் இயற்கையான தூக்க சுழற்சியை பின்பற்றாததால் ஏற்படும் பாதகமான விளைவுகளை பல ஆய்வுகள் நிரூபிக்கின்றன. அமைதியான தூக்கம் ஆரோக்கியத்தையும், வாழ்க்கை முறையையும் மேம்படுத்த உதவுகிறது என்பதை மனதில் வைத்து, ஆரோக்கியமான மனம் மற்றும் உடல் செயல்பாட்டிற்கு உங்கள் வீட்டுச் சூழல் நல்ல தூக்கத்திற்கு உகந்ததாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவது அவசியம்.

தூக்கத்தின் தரத்தை நிர்ணயிப்பதில் தரமான தூக்கத்தை வழங்குவதிலும் நீங்கள் தூங்கும் மெத்தை முக்கியப்பங்கு வகிக்கிறது. எனவே சரியான மற்றும் பொருத்தமான மெத்தையை வாங்க வேண்டியது அவசியம். இந்த பதிவில் புதிய மெத்தை வாங்குவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
உடலின் ஆழமான அழுத்தத்தை ஆதரிக்க வேண்டும்
எந்த விதமான வலி மற்றும் அசௌகரியத்தையும் குணப்படுத்த உதவும் ஆழமான தொடு(deep touch) அழுத்தம் போன்ற தொழில்நுட்பத்துடன் கூடிய மெத்தை இன்றைய காலகட்டத்தில் அவசியம். டிஜிட்டல் முறையில் துல்லியமான போம் வெட்டுக்கள் மற்றும் மெத்தையின் விளிம்பு அடுக்குகள் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஆதரவையும் ஆறுதலையும் வழங்க உதவுகின்றன. இந்த அம்சம் ஒரு நடுநிலை முதுகெலும்பு நிலையை அடைவதன் மூலம் சரியான தோரணையை பராமரிக்க உதவுகிறது.
வெப்பநிலை கட்டுப்பாடு
வானிலை அல்லது பிற உள் மற்றும் வெளிப்புற காரணிகளைப் பொருட்படுத்தாமல் மெத்தையின் துணி வெப்பநிலையைக் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி துணியால் செய்யப்பட்ட மெத்தை, வெப்பத்தைத் தணித்து, தூங்கும் போது குளிர்ச்சியாக இருக்க உதவும். இது இரவு வியர்வையைத் தவிர்க்கவும், இரவு முழுவதும் முழுமையான மற்றும் நல்ல தூக்கத்தை அளிக்கவும் உதவும்.
மெத்தையின் போம் வகை
மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படும் மெத்தை தரமான தூக்கத்திற்கு உதவும் ஒரு சிறந்த தீர்வாகும். எளிதில் தகவமைத்துக் கொள்ளக்கூடிய பஞ்சு கொண்ட மெத்தை உடலுடன் நன்றாக இணைந்து, ஒருவரை எளிதாக தூங்க அனுமதிக்கும் வகையில் இணைந்து செயல்படுகிறது. எனவே இடையூறு இல்லாத உறக்கநிலை நேரத்தைப் பெற இதுபோன்ற மெத்தையை வாங்க வேண்டும்.
ட்ரையல் மற்றும் திருப்பி அனுப்பும் வசதி
சரியான மெத்தையைத் தேர்ந்தெடுக்கும் போது, இறுதி முடிவை எடுப்பதற்கு முன் இரண்டு நாட்கள் அல்லது ஒரு வாரத்திற்கு அந்த மெத்தையை பயன்படுத்தி பார்ப்பது முக்கியம். எந்தவொரு புதிய மெத்தையையும் வசதியாகப் பயன்படுத்துவதற்கும் பழகுவதற்கும் நேரம் எடுக்கும் என்பதால் அவ்வாறு செய்வது அவசியம்.
மெத்தையை சிறிது காலம் பயன்படுத்த அனுமதிக்கும் பிராண்டுகளில் இருந்து மெத்தையை தேர்வு செய்யவும் அல்லது உங்கள் தேவைகளுக்கு மெத்தை பொருந்தாத பட்சத்தில் திருப்பி அனுப்பும் வசதி இருக்கும் மெத்தையை வாங்கவும்.
தயாரிக்கப்பட்டிருக்கும் பொருள்
ஒரு நல்ல தரமான மெத்தையானது நல்ல தூக்கத்தை தருவதோடு மட்டுமல்லாமல் தோரணையை சரியாக சீரமைக்கவும் உதவும் குறிப்பிட்ட பொருள் குறிப்புகளை உள்ளடக்கியிருக்க வேண்டும். ஓபன்-செல் மெமரி போம் இயக்கத்தை உறிஞ்சுவது மட்டுமல்லாமல், சுவாசம் மற்றும் கட்டமைப்பையும் வழங்குகிறது.
மெத்தையின் அளவு
படுக்கையறைக்கு பொருத்தமான மெத்தையில் தூங்குவதை விட சிறந்தது எது? கட்டிலின் படுக்கைக்கான இடத்தில் எளிதில் பொருந்தக்கூடிய, உங்களுக்கு கூடுதல் வேலை வைக்காத வசதியான உணர்வுக்கு நல்ல அளவிலான மெத்தை அவசியம். உங்கள் கட்டிலின் படுக்கைக்கான அளவிற்கு ஏற்ப மெத்தையின் நீளம் மற்றும் அகலத்துடன் கூடிய மெத்தையை வாங்குவது உங்களை வசதியாக உணர வைப்பதுடன் நிம்மதியான தூக்கத்தையும் வழங்கும்.



Click it and Unblock the Notifications
