Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
21 நாட்கள் தொடர்ந்து 1 நெல்லிக்காய் சாப்பிடுங்க, உடம்புல நடக்குற அதிசயத்தை பாருங்க.. கூறும் டாக்டர்! -
பாலக் புலாவ் ரெசிபி - இந்த சத்தான புலாவை ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
பழைய விமானங்கள் ஓய்வு பெற்ற அவற்றின் நிலை என்னவாகும் தெரியுமா? இப்படிலாம் கூட பண்ணுவாங்களா? -
ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: நாளை முதல் அடுத்த 90 நாட்கள் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, 1 மாசத்துல உடல் எடை குறைவதை பாப்பீங்க..
உங்க சமையலறை மேஜைகளில் இந்த பொருட்களை தெரியாம கூடா வைச்சுராதீங்க... இல்லனா உங்களுக்குத்தான் நஷ்டம்...!
சமையலுக்குத் தேவையான பொருட்கள் இருப்பு வைக்கப்பட்ட ஸ்டோர் ரூம் சமைக்கும் போது எழும் பிரச்சனைகளை தவிர்க்கிறது. நம்மில் பெரும்பாலானோர் அடிக்கடி கடைகள், மற்றும் சந்தைக்கு செல்வதைத் தவிர்க்க, ஒரு மாதத்திற்கே தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி ஸ்டோர் ரூம்மில் வைத்திருப்போம். இதனால், சில சமயங்களில் ஸ்டோர் ரூம் நிரம்பி, நமக்குத் தேவையான பொருட்களை கண்டுபிடிப்பது கடினமாகிவிடும்.

அதிக வேலை அல்லது அவசரத்தின் காரணமாக வைக்கும் தேவையில்லாத பல பொருட்கள் ஸ்டோர் ரூமிற்கு வந்துவிடும். சரிவர பராமரிக்கப்படும் ஸ்டோர் ரூம் நமது வேலையை எளிதாக்கும். ஸ்டோர் ரூமில் உணவுப் பொருட்களை மட்டும் வைத்திருப்பது நல்லது. ஆனால் எந்த உணவுப் பொருட்கள் ஸ்டோர் ரூமிற்கு பொருத்தமானவை என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஸ்டோர் ரூமுக்கான இந்த விதிகள் உங்கள் சமையலறை மேஜைக்கும் பொருந்தும். உங்கள் சமயலறையில் மேஜைகளிலும் இந்த பொருட்களை வைக்கக்கூடாது.
பிரித்த உணவுப் பொட்டலங்கள்
பிரித்த உணவுப் பொட்டலங்களை மீதமுள்ள பொருட்களுடன் வைக்க கூடாது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. முதல் காரணம், மற்ற பொருட்களின் வாசனை பிரித்து வைக்கப்பட்டிருக்கும் உணவு பொருளால் உறிஞ்சப்படும். திறந்த உணவுப் பொருட்கள் வாசனையை மிக விரைவாக உறிஞ்சி, அவற்றின் புத்துணர்ச்சியைக் கெடுக்கலாம். இரண்டாவது காரணம், பிரித்து வைத்திருக்கும் பாக்கெட்டுகள் சிதறிவிட்டால், மற்ற பொருட்களும் கெட்டு போகலாம். இதனால் பணமும் விரயமாகும்.
காய்கறிகள் மற்றும் பழங்கள்
உணவுப் பொருட்களைப் ஸ்டோர் ரூமில் வைக்க வேண்டும் என்றாலும், எல்லா உணவுப் பொருட்களும் அதற்கு ஏற்றவையாக இருக்காது. பழங்கள் மற்றும் காய்கறிகளை ஸ்டோர் ரூமில் சேமித்தால், அவை விரைவில் கெட்டுவிடும். எளிதில் விரைவாக கேட்டு போகும் உணவுகளை குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். சில பழங்கள் மற்றும் காய்கறிகளை கிச்சன் கவுண்டர்டாப்பில் வைக்கலாம், ஆனால் அவற்றை ஸ்டோர் ரூமில் வைக்க கூடாது. காற்றோட்டமான இடத்தில் ஒரு கூடையில் அவற்றை வைத்திருப்பது சிறந்தது.
மாவு பொருட்கள்
கோதுமை அல்லது மற்ற தானிய மாவுகளை ஸ்டோர் ரூமில் சேமித்து வைக்கிறீர்களா? ஆம் எனில், உடனடியாக அதைச் செய்வதை நிறுத்துங்கள். மாவு பொருட்கள் சீக்கிரம் கெட்டுவிடும் என்பதால் மூடிய இடங்களில் வைக்கக்கூடாது. அத்தகைய சூழ்நிலையில் சேமித்து வைத்தால் மாவு பொருட்களானது பூச்சிகள், புழுக்கள், மற்றும் அந்துப்பூச்சிகள் போன்றவற்றால் பாதிக்கப்படும்.
இதுபோன்ற சூழ்நிலையில் அவற்றை தூக்கி எறிவதைத் தவிர நமது வேறு வழி இருக்காது. அதற்கு பதிலாக, திறந்த இடத்தில் மாவு பொருட்களை சேமியுங்கள்.
சுத்தம் செய்ய பயன்படும் பொருட்கள்
கடையில் இருந்து வாங்கி வரும் அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் வைக்கக்கூடாது. பேட்டரிகள், சுத்தம் செய்ய பயன்படும் பொருட்கள் அல்லது பிற வீட்டுப் பொருட்களை ஸ்டோர் ரூமில் வைத்திருப்பது ஆபத்தானது. நமது கை தவறுதலாக தூய்மை செய்ய பயன்படும் பொருளைத் தொட்டாலோ அல்லது தவறுதலாக தட்டி விட்டாலோ, உணவுப் பொருட்களோடு கலந்து மாசுபடுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது. உணவுப் பொருட்களை மற்ற வீட்டுப் பொருட்களுடன் ஒருபோதும் சேர்த்து வைக்காதீர்கள்.
காலாவதியான பொருட்கள்
காலாவதியான, கெட்டு போன மற்றும் பழைய பொருட்கள் அல்லது அதை எப்போதும் சாப்பிட மாட்டோம் என்கிற உணவுப் பொருட்களை உடனடியாக நீக்கவும். ஒவ்வொரு வாரமும் ஸ்டோர் ரூமில் இருக்கும் உணவு பொருட்களை பரிசோதிக்கவும். பின்புறத்தில் வைத்திருக்கும் பொருட்களை முன்பக்கமாக கொண்டு வந்து அவற்றின் காலாவதி தேதிகளை சரிபார்க்கவும். சீக்கிரம் கெட்டுப்போகக்கூடிய பொருட்களைப் முதலில் பயன்படுத்துங்கள். ஒரு பொருள் காலாவதியாகிவிட்டால் அதை தூக்கி எறியுங்கள்.
நட்ஸ் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ்
நட்ஸ், ட்ரை ஃப்ரூட்ஸ் போன்றவற்றைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. நட்ஸ் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் விரைவாக கெட்டுவிடக் கூடியவை. எனவே முடிந்தவரை வாங்கி வந்த உடனேயே குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
ஸ்டோர் ரூமில் இருக்கும் நட்ஸ் இன்னும் நன்றாக இருக்கிறதா என உங்களுக்குத் தெரியாவில்லை எனில், அவற்றை முகர்ந்து பாருங்கள் அல்லது பூஞ்சைகள் இருக்கின்றனவா என பாருங்கள். நட்ஸ், விதைகள் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ்ஸை நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் பராமரிக்க குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்துங்கள். அதுமட்டுமின்றி செல்லப்பிராணிகளின் உணவு, வினிகர், இறைச்சி மற்றும் ரொட்டி போன்ற பொருட்களை ஸ்டோர் ரூமில் வைக்கக் கூடாது. அவை விரைவில் கெட்டுவிடுவதோடு பிற பொருட்களையும் பாதிக்கும்.



Click it and Unblock the Notifications
