Latest Updates
-
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்! -
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
பாபா வாங்கா கணிப்புப்படி செப்டம்பர் மாத முதல் வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
உலகின் முதல் ஏவுகணையை உருவாக்கிய நாடு எது தெரியுமா? அமெரிக்காவும் இல்ல, ரஷ்யாவும் இல்ல -
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும்
வீட்டுக்கு இண்டக்ஷன் அடுப்பு வாங்கப்போறீங்களா? அப்ப இந்த விஷயங்களை முதலில் செக் பண்ணிக்கோங்க...!
கடந்த காலங்களை போல அல்லாமல் மிக்ஸி, கிரைண்டர் மற்றும் ஜுஸர் போன்ற மின்னணு சாதனங்கள் நம் சமையலறை பளுவை பெருமளவில் குறைத்துள்ளது. இந்த சாதனங்கள் உணவைத் தயாரிப்பதற்கான நேரத்தைக் குறைக்கின்றன, அந்த வகையில் இண்டக்ஷன் அடுப்பு இப்போது பரவலாக உபயோகப்படுத்தப்படும் சாதனமாக இருக்கிறது.
மக்கள் சமையலுக்காக இண்டக்ஷனை அதிகம் பயன்படுத்துகின்றனர், ஏனெனில் இது பயன்படுத்த மிகவும் எளிதானது மற்றும் வசதியானது. கேஸ் அடுப்பைப் பயன்படுத்தத் தெரியாதவர் கூட தீ பற்றிய பயம் இல்லாததால் இதனைப் பயன்படுத்தி எளிதில் சமைக்கலாம்.

இண்டக்ஷன் பயனுள்ள மின்னணு சாதனமாக இருந்தாலும் தவறான வகை இண்டக்ஷனை வாங்கி, விரைவில் அது கெட்டுப்போய் அவதிக்கு உள்ளாகிறார்கள். எனவே வாங்கும்போதே சரியான இண்டக்ஷன் அடுப்பை வாங்க வேண்டும். சரியான இண்டக்ஷன் அடுப்பை வாங்க உதவும் உதவிக்குறிப்புகள் சிலவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.
வாட்ஸ்
சமையலறைக்கு இண்டக்ஷன் அடுப்பு வாங்கும் போது, முதலில் மனதில் கொள்ள வேண்டியது எத்தனை வாட்ஸ் என்பதைத்தான். இண்டக்ஷன் எவ்வளவு அதிக வாட் இருக்கிறதோ, உங்கள் உணவு வேகமாக சமைக்கப்படும். ஒரு வீட்டு சமையலறைக்கு எத்தனை வாட்ஸ் சிறந்த இண்டக்ஷனாக இருக்கும் என்று பார்த்தால், அது 1000-2000 வாட்களுக்கு இடையில் இருக்க வேண்டும்.
ஆட்டோ ஸ்விட்ச் ஆஃப் அம்சத்தை சரிபார்க்க வேண்டும்
ஆன்/ஆஃப் சுவிட்ச் உடன் வரும் இண்டக்ஷன்கள் உள்ளன, ஆனால் இந்த ஆட்டோ ஸ்விட்ச்-ஆஃப் அம்சம் உணவு அதிக வெப்பமடைவதைத் தடுக்கும் மற்றும் உங்கள் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை சேமிக்கும். இண்டக்ஷனில் இருந்து பாத்திரத்தை அகற்றியவுடன் இந்த அம்சம் இண்டக்ஷனை அணைத்துவிடும்.
தொழில்நுட்ப அம்சங்களை சரிபார்க்கவும்
இண்டக்ஷன் ஸ்டவ்வுக்கான தேவை சந்தையில் மிக அதிகமாக இருப்பதால், ஒவ்வொரு அடுப்பின் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளையும் சரிபார்ப்பது மிகவும் அவசியம். இண்டக்ஷனுக்கு கேஸ் அடுப்பு போன்ற குமிழ் இல்லை, ஆனால் வெப்பநிலையைக் குறைக்கவும் அதிகரிக்கவும் நிச்சயமாக ஒரு பட்டன் உள்ளது. பல இண்டக்ஷன்களில் ஒரு டைமர் உள்ளது. இண்டக்ஷனின் வெப்ப நேரத்தை சரிபார்க்கவும் இது மிகவும் முக்கியம்.
பிராண்ட் மற்றும் வாரன்டியை சரிபார்க்கவும்
எந்தவொரு இண்டக்ஷனையும் வாங்குவதற்கு முன், அதன் பிராண்டைச் சரிபார்ப்பது மிகவும் முக்கியம். வாங்கும் போது நிறுவனத்தின் ஐஎஸ்ஐ மார்க்கை சரிபார்ப்பதும் மிக அவசியம். எந்தவொரு இண்டக்ஷன் ஸ்டவ் வாங்கும் போதும், நீங்கள் ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட உத்தரவாதத்தை பெறுவீர்கள். ஒருவேளை நீங்கள் வாங்கும் இண்டக்ஷன் அடுப்பிற்கு உத்தரவாதமும் ISI குறியும் இல்லை என்றால், நீங்கள் அதை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
கவனிக்க வேண்டிய பிற விவரங்கள்
* ஆன்லைனில் இண்டக்ஷன் வாங்குவதைத் தவிர்க்கவும். ஆன்லைனில் வாங்கிய இண்டக்ஷன் சில சமயங்களில் வேலை செய்யாமல் போனால் நீங்கள் அதனை மாற்றுவதற்கு அதிகம் போராட வேண்டியிருக்கும்.
* இண்டக்ஷன் அடுப்பில் எப்போதும் துருப்பிடிக்காத எஃகு பாத்திரங்களைப் பயன்படுத்தவும்.



Click it and Unblock the Notifications
